/* */

அரியலூர் மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 73.46 சதவீதம் வாக்குப்பதிவு

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற தேர்தலில் மாலை 5 மணிவரை 73.46 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 73.46 சதவீதம் வாக்குப்பதிவு
X

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற தேர்தலில் மாலை 5 மணி வரை 73.46 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் நகராட்சிக்கு 34 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு 38 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உடையார்பாளையம் பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகளும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 14 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்று காலை 7மணியில் இருந்து மாலை 6வரை நடைபெறும் 101 வாக்குச்சாவடிகளுக்கும் போலிஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7மணி முதல் மதியம் 5 மணி வரை அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகளிலும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளிலும் ஒட்டுமொத்தமாக 73.46 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுள்ளது.

அரியலூர் நகராட்சியில் உள்ள 11724 ஆண்வாக்காளர்கள் மற்றும் 12794 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 24518 வாக்காளர்களில், 8023 ஆண் வாக்காளர்கள் மற்றும் 8843 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 16866 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 68.79 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 13502 ஆண்வாக்காளர்கள் மற்றும் 14540 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 28042 வாக்காளர்களில், 9728 ஆண் வாக்காளர்கள் மற்றும் 10886 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 20614 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 73.51 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 4676 ஆண்வாக்காளர்கள் மற்றும் 4770 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 9446 வாக்காளர்களில், 3691 ஆண் வாக்காளர்கள் மற்றும் 4013 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7704 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 81.56 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் உள்ள 3499 ஆண்வாக்காளர்கள் மற்றும் 3704 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7203 வாக்காளர்களில், 2664 ஆண் வாக்காளர்கள் மற்றும் 2991 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 5655 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 78.51 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் 4இடங்களில் உள்ள 33401 ஆண்வாக்காளர்கள் மற்றும் 35808 பெண் வாக்காளர்களில் என மொத்தம் 69209 வாக்காளர்களில், 24106 ஆண் வாக்காளர்கள் மற்றும் 26733 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 50839 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 73.46 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Updated On: 19 Feb 2022 12:06 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?