/* */

அரியலூர் மாவட்ட வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

அரியலூர் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ரமேஷ் சந்த் மீனா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட வளர்ச்சி பணிகளை  மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  ஆய்வு
X

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ரமேஷ் சந்த் மீனா ஆய்வு செய்தார்.


அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் மாவட்டங்கள் தோறும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் வளர்ச்சித் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவது குறித்து கண்காணிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்படி அரியலூர் நகராட்சி, செந்துறை சாலை இருசுக்குடி குடியிருப்பு பகுதியில் மக்களைதேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு நோயாளிக்கு அவரது இல்லத்திலேயே பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்டும், 2 பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் மருந்;து, மாத்திரைகள் வழங்கப்படுவது குறித்தும், வழங்கப்படும் நாட்கள், சரியான நேரத்தில் வழங்கப்படுகின்றனவா போன்ற பல்வேறு தகவல்கள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

அரியலூர் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைத்தல், பள்ளேரி மேம்பாட்டுப் பணியையும், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாரச்சந்தை வளாகத்தில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமான பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வாலாஜாநகரம், நடுத்தெருவில் தமிழ்ச்செல்வன் என்பவருக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளான் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள், ஸ்பிரேயர், தார்ப்பாய், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்து இதன் பயன்பாடுகள் குறித்தும் பயனாளியிடம் கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து நாகமங்கலம் ஊராட்சியில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தூர் வாரப்பட்டு வரும் பாப்பான்குளம் பணியையும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் ரூ.37.91 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆய்வகம் மற்றும் நூலகத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செந்துறை வட்டாரம் நெய்வனத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளான் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பட்டா நிலம் வைத்துள்ள விவசாயிகள் 16 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இவர்களின் 15.42 ஏக்கர் நிலத்தில் தரிசு நிலத் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இந்நிலத்தினை நேரில் பார்வையிட்டு இத்திட்டத்தின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

பின்னர் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டு பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட பட்டாக்களின் எண்ணிக்கை, மனு ரத்து, நிலுவை மனுக்கள் எண்ணிக்கை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன், ஆன்லைன் பட்டா மாறுதல் குறித்தும் விண்ணப்பங்கள் வரப்பெறுதல் மற்றும் பட்டா வழங்குதல் குறித்தும் கணிணியில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து 3 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் அரசின் திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன், அரசின் திட்டங்களில் நிலுவையில் உள்ளப் பணிகளை விரைவாக முடிக்கவும், அரசின் திட்டங்கள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேருவதை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவுருத்தினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், வேளாண் இணை இயக்குநர் பழனிச்சாமி, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மரு.கீதாராணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 19 Sep 2022 1:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  3. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  6. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  7. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  8. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  9. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?