/* */

முன்களப்பணியாளராக பணியாற்ற இலவசமாக ஒருமாதம் குறுகிய கால பயிற்சி : அரியலூர் கலெக்டர் தகவல்

முன்களப்பணியாளராக பணியாற்ற இலவசமாக ஒருமாதம் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது என்று அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

முன்களப்பணியாளராக பணியாற்ற இலவசமாக ஒருமாதம் குறுகிய கால பயிற்சி : அரியலூர் கலெக்டர் தகவல்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா (பைல் படம்)

முன்களப்பணியாளராக பணியாற்ற இலவசமாக ஒருமாதம் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுவது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.

இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றம் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் பிரதான் மந்திரி கிசான் கௌசல் விகாஸ் யோஜனா (PMKVY 3.0) என்ற பயிற்சி திட்டத்தின்கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக சுகாதாரத்துறையில் கோவிட் -19 பெருந்தொற்றை ஒழிக்கும் விதமாக முன்களப்பணியாளராக பணியாற்ற இலவசமாக கீழ்காணும் பிரிவுகளில் ஒருமாதம் குறுகிய கால பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அவசர மருத்துவ டெக்னீசியன் பணி (Emergency Medical Technician – Basic), பொது மருத்துவ சேவை உதவியாளர் (General Duty assistant), தீவிர சிகிச்சை பிரிவு உதவியாளர் (GDA – Advanced (critical care), வீட்டு சுகாதார உதவியாளர் (Home Health Aide), மருத்துவ உபகரண தொழில் நுட்ப உதவியாளர் (Medical Equipment Technology Assistant), ரத்தநாள துளையிடும் பணியாளர் (Phlebotomist)

பயிற்சி முடித்தவுடன் மாவட்ட அரசு மருத்துவமனை / ஆரம்ப சுகாதார நிலையம் / தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் தொழில் முறை பயிற்சியுடன் பணியில் சேரலாம்.

மேற்காணும் பயிற்சிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம். இந்த பயிற்சிகளில் சேர விரும்புபவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி, பயிற்சியில் சேர விரும்பும் பிரிவு, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை dstoperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9488451405 தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களது விபரங்களை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Jun 2021 8:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!