/* */

அரியலூர் மாவட்ட கல்வி விடுதிகளில் 10 பகுதி நேர துப்புரவாளர் காலி பணியிடங்கள்

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்நல கல்வி விடுதிகளில் துப்புரவாளர் பணியிடங்களில் விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட கல்வி விடுதிகளில்  10 பகுதி நேர துப்புரவாளர் காலி பணியிடங்கள்
X

மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள 10 பகுதிநேர துப்புரவாளர் (ஆண்) (GT Non- Priority - 4, MBC/DNC Non- Priority- 1, MBC/DNC Priority- 1, BC Non- Priority - 2, SC Non- Priority - 1 SCA Non- Priority-1) 1 (BC Non- Priority - 1 ) மாதம் ரூ.3000 என்ற தொகுப்பூதியத்தில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

மேற்படி காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுதபடிக்க தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு : 1.07.2022 தேதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மேற்படி தகுதிகளுடன் அரியலூர் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதி நேர துப்புரவாளராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் மாதிரி விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்தும், உரிய சான்றுகளின் நகல் இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டி அதனை அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகம் முகவரியில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.05.2022 பிற்பகல் 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கால தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது எனவும் மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மனுதாரர்களை மேற்கண்டதகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 7 May 2022 9:16 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!