/* */

பதட்டமான வாக்குச்சாவடிகள்- எஸ்பி ஆய்வு

பதட்டமான வாக்குச்சாவடிகள்- எஸ்பி ஆய்வு
X

அரியலூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்பி பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அரியலூர் மாவட்டத்தில் 83 பகுதிகள் பதட்டமான பகுதிகளாகவும்,அதில் 185 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு, அங்கு தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் அரியலூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருத்துகாரன்பட்டி, தாமரைக்குளம், ஓட்டகோவில், சாலையக்குறிச்சி மற்றும் அரியலூர் மான்போர்ட் ஸ்கூல் ஆகிய 5 இடங்களில் அமைய உள்ள வாக்குச்சாவடி மையங்களை அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் பார்வையிட்டார். காவல் அதிகாரிகளுடன் எடுக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வருகை, வாகனம் நிறுத்துமிடம், வாக்குச்சாவடி உள்ள இடம், கண்காணிப்பு அறை ஆகியவற்றை பார்வையிட்டு எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

Updated On: 10 March 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!