/* */

அடேங்கப்பா....யப்பா...யப்பா... உலக கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ. 3580 கோடி:படிங்க...

fifa world cup 2022 tamil,fifa today match கத்தாரில் உலக கோப்பை கோலாகலமாக நடந்து வருகிறது. ஜெயிக்கப்போவது யாரு? ஜெயிக்கும்அணிக்கு முதல் பரிசு ரூ. 342 கோடி

HIGHLIGHTS

அடேங்கப்பா....யப்பா...யப்பா...  உலக கோப்பை கால்பந்து போட்டியின்  மொத்த பரிசுத்தொகை  ரூ. 3580 கோடி:படிங்க...
X

உலக கால்பந்து கோப்பை கத்தார்  2022 சின்னமும், கோப்பையும்  (கோப்பு படம்)

fifa world cup 2022 tamil,fifa today match


fifa world cup 2022 tamil,fifa today match

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் துவக்க விழாவானது கோலாகலமாக கடந்த 20 ந்தேதி நடந்தது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், கண்கவர் வாணவேடிக்கை ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.கத்தாரில் 22 வது உலக கோப்பை தொடர் கடந்த 20 ந்தேதி துவங்கியது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிந்து களம் இறங்கி வருகின்றன. மொத்தம் 29 நாட்கள் இந்த போட்டி நடக்கிறது. மொத்தம் 64 போட்டிகள் . அடுத்த மாதம் டிசம்பர் 18ந்தேதி இறுதிப்போட்டியானது கோலாகலமாக நடக்க உள்ளது.

கத்தாரிலுள்ள அல்பெய்த் மைதானத்தில்தான் உலக கோப்பை கால்பந்து போட்டியின் துவக்க விழாவானது விமர்சையாக நடந்தது. கத்தாரின் பாரம்பரியம், வரலாற்றினை விளக்கும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் இருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

fifa world cup 2022 tamil,fifa today match


fifa world cup 2022 tamil,fifa today match

இந்த துவக்க விழாவில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தலைவர் இன்பான்டினோ இங்கிலாந்து கால்பந்து நாயகன் பெக்காம் உட்பட உலகின் பல விஐபிக்கள் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான நடனக்கலைஞர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். வண்ணமயமான வேடிக்கை, கலக்கல் லேசர் ஷோவுடன் துவக்க விழா நடந்து முடிந்தது.

புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் ''சென்சார்'' பொருத்தப்பட்ட பந்து, செமி- ஆட்டோமெட்டிக் ஆப் சைடு டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. அம்பயர்கள் வேகமாக, துல்லியமாக தீர்ப்புகள் வழங்கஇது உதவும்.

பிபா மத்திய கிழக்கு ஆசியாவில் முதன் முறையாக கத்தாரில் கடந்த 20ந்தேதி துவங்கி தினந்தோறும் பரபரப்பான அணிகளின் ஆட்டத்தினை நடத்தி வருகிறது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் உட்பட 8பிரிவுகளாக 32 அணிகள் களமிறங்கியுள்ளது.

அம்பயர்கள் துல்லியமாக தீர்ப்பு வழங்கும் வகையில் வி.ஏ.ஆர். (வார்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2018 ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அறிமுகமான இது பெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

fifa world cup 2022 tamil,fifa today match


அனைத்து நாடுகளின் வீரர்களில் ஒரு சிலர் ஒரே படத்தில் கண்கொள்ளாக்காட்சி (கோப்பு படம்)

fifa world cup 2022 tamil,fifa today match

இதன் செயல்பாட்டின் படி கோல் அடிக்கப்பட்டதா, இல்லையா? பெனால்டி தந்தது சரியா? , இல்லையா? , ரெட் கார்டு தர ரெட் அல்லது எல்லோகார்டு தவறாக தரப்பட்டதா? என்பதைக் கணிக்க அம்பயர்களுக்கு இந்த விஏஆர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

ஆனால் கடந்த 2018ம் ஆண்டு போட்டியில் பைனலில் விஏஆர் முறையில் ரீப்ளே பார்த்த அம்பயர், பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வழங்கியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. முடிவு எடுக்க நீண்ட நேரம் தாமதம் ஆவது, இறுதி முடிவு எப்போதம் தவறாக இருப்பதாக கூறப்பட்டது.

லேட்டஸ்ட் தொழில்நுட்பம் அறிமுகம்

கத்தாரில் நடைபெறும் போட்டித் தொடர்களில் மேம்படுத்தப்பட்ட விஏஆர் தொழில்நுட்பமான செமி- ஆட்டோமேட்டிக் ஆப் சைடு டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. மைதானத்தினைச் சுற்றி 12 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. போட்டியின் போது பந்து செல்லும் திசை ஒவ்வொரு வீரர்களின் 29 வகையான புள்ளி விபரங்களை கண்காணித்து வினாடிக்கு 50 பிரேம்களாக தருகிறது.

fifa world cup 2022 tamil,fifa today match


சுற்றுப்புறத்தினை பாதிக்காத வகையில் வடிமைக்கப்பட்ட புட்பால் (கோப்பு படம்)

fifa world cup 2022 tamil,fifa today match

பந்தில் பொருத்தப்பட்ட சென்சார் வினாடிக்கு 500முறை புள்ளி விபரங்களை ஆபரேட்டருக்கு அனுப்பும். ஒவ்வொரு வீரர்களும் எந்த இடத்தில் உள்ளனர் என்பதை தீவிரமாக அறியலாம். ஒரு வேளை ஆப்சைடு என தெரிய வந்தால் உடனடியாக ஆப்சைடு ஆபரேட்டருக்கு தகவல் தெரிவிக்கும். இதனை 3 டி வடிவில் மைதானத்தில் இருக்கும் ராட்சத ஸ்கிரீனில் காணலாம்.

பந்து விற்பனையில் 1 சதவீதம் அன்பளிப்பு

கத்தார் உலகக் கோப்பைத்தொடரில் சென்சார் பொருத்தப்பட்ட அல்ரிஹ்லா (பயணம்) என பெயரிடப்பட்ட பந்து பயன்படுத்தப்படுகிறது. காற்றில் செல்லும்போது பந்தின் வேகத்தினை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

20துண்டுகள் இணைந்த பாலியூரிதினால் பந்து உருவாகியுள்ளதால் காற்றில் பந்தின் இயக்கத்தினை அதிகரிக்கும். வீரர்கள் பந்தை துல்லியமாக பாஸ் செய்ய முடியும். சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் பொருட்கள் சேர்த்து பந்து தயாரிக்கப்பட்டது. உலக கோப்பை தொடரில் முதன் முறையாக நீர் சார்ந்த இங்க் (மை), பசைகளைக் கொண்டு மட்டும் பந்து உருவாக்கப்பட்டது.

92 ஆண்டு உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் முதன் முறையாக பந்தின் விற்பனையில் 1 சதவீத பணம், உலகின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் உதவி இயக்கத்துக்கு வழங்கப்படுகிறது.

fifa world cup 2022 tamil,fifa today match


fifa world cup 2022 tamil,fifa today match

ரூ.3580 கோடி பரிசு

உலகக்கோப்பை தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ- 3,580 கோடி ஆகும். கடந்த 2018 ம் ஆண்டைவிட ரூ. 326 கோடி அதிகம்.

*இறுதிப்போட்டியில் சாதித்து கோப்பை வெல்லும் அணி ரூ. 342 கோடியைத்தட்டிச் செல்லும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ. 244 கோடி தரப்படும்.

*மூன்று, நான்காவது இடம் பெறும்அணிகள் ரூ. 220 கோடி, ரூ. 203 கோடி பெறும்.

*5 முதல் 8 வரையிலான இடம்பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ. 138 கோடி கிடைக்கும்.

*9முதல் 16வரையிலான அணிகளுக்கு தலா ரூ. 106 கோடி தரப்படும்.

*17 முதல் 32 வரையிலான 16அணிகளுக்கு தலாரூ.73கோடி பெறும்.

புள்ளிப்பட்டியல் (கானா- தென்கொரியா போட்டி வரை)

குரூப் ஏ அணியில் உள்ள நெதர்லாந்து, ஈகுவடார், செனகல், ஆகிய அணிகள் தலா 1 வெற்றியைப்பெற்றுள்ளது. இதில் முதல் இரண்டும் 4 புள்ளிகளுடனும்,ஈகுவடார் 3 புள்ளிகளுடனும், கத்தார் புள்ளிகள் இல்லாமலும் உள்ளது.

குரூப் பி அணியில் இங்கிலாந்து, ஈரான் ஆகிய அணிகள் தலா 1 போட்டியில்வென்றுள்ளது. இதில் இங்கிலாந்து 4 புள்ளிகள், ஈரான் 3புள்ளிகளுடன் உள்ளது. அமெரிக்கா, வேல்ஸ் ஆகியவை வெற்றி பெறவில்லை. டிரா என்பதால் அமெரிக்கா 2 புள்ளி, வேல்ஸ் 1 டிரா என்பதால் 1 புள்ளி பெற்றுள்ளது.

குரூப் சி அணியில் போலந்து, அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ அணிகள் உள்ளன. இதில் போலந்து அர்ஜென்டினா, சவுதிஅரேபிய அணிகள் தலா 1 வெற்றியைப் பெற்றுள்ளது. போலந்து 4, அர்ஜென்டினா3, சவுதி அரேபியா 3 மற்றும் மெக்சிகோ 1 என புள்ளிப்பட்டியலில் உள்ளது.

குரூப் டி அணியில் பிரான்ஸ் ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா அணிகள் உள்ளன. இதில் பிரான்ஸ் 2 வெற்றி, ஆஸ்திரேலயா 1,பெற்றதோடு பிரான்ஸ் 6புள்ளிகளையும், ஆஸ்திரேலியா 3 புள்ளிகளையும்பெற்றுள்ளது. டென்மார்க் துனிசியா ஆகியவை டிராவை வைத்து தலா 1 புள்ளிகள் பெற்றுள்ளது.

குரூப் இ அணியில் ஸ்பெயின், ஜப்பான், கோஸ்டாரிகா , ஜெர்மனி அணிகள் உள்ளன. இதில் ஸ்பெயின், ஜப்பான், கோஸ்டாரிகா ஆகியவை தலா 1 வெற்றியைப்பெற்றுள்ளது. ஜெர்மனி ஒருஆட்டம் டிரா என்பதால் 1 புள்ளி பெற்றுள்ளது. ஸ்பெயின் -4, ஜப்பான்- 3, கோஸ்டாரிகா-3 என புள்ளிகள் பெற்றுள்ளது.

குரூப் எப் அணியில் குரோஷியா, மொராக்கா ,பெல்ஜியம் , கனடா அணிகள் உள்ளது. இதில் குரோஷியா, மொராக்கா ஆகியவை ஒரு வெற்றி பெற்று தலா 4 புள்ளிகளைப்பெற்றுள்ளது. பெல்ஜியம் 1 வெற்றியைப் பெற்று 3 புள்ளிகளையும், கனடா புள்ளிகளைப் பெறாதநிலையிலும் உள்ளது.

குரூப் ஜி அணியில் பிரேசில், சுவிட்சர்லாந்து, கேமரூன், செர்பியா, அணிகள் உள்ளன. இதில் பிரேசில் சுவிட்சர்லாந்து தலா1 வெற்றி பெற்று தலா 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கேமரூன், செர்பியா டிராவில் 1 ஆட்டம் முடிந்ததால் தலா 1 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

குரூப் எச் பிரிவில் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா ஆகிய அணிகள் உள்ளது. இதில் போர்ச்சுகல் 1வெற்றி, கானா 1, என பெற்றுள்ளது. இரண்டுமே தலா 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. உருகுவே தென்கொரியா ஆகிய இரு அணிகளும் ஒருடிரா ஆனதால்த லா 1 புள்ளியைப் பெற்றுள்ளன.

இன்றைய போட்டிகளில் அல்ரேயானில் ஈகுவடார் - செனகல் ஆகிய அணிகள் மோதின. அல்கோரில் நெதர்லாந்து-கத்தார் அணிகள் மோதுகின்றன.இரவு 8.30மணி

வேல்ஸ்-இங்கிலாந்து அணிகள் அல்ரேயானில் மோதுகின்றன. ஈரான்- அமெரிக்கா ஆகிய அணிகள் தோஹாவில் மோதுகின்றன. இரவு நள்ளிரவு 12.30 மணி.

Updated On: 30 Nov 2022 6:03 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  2. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  3. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  6. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  7. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  10. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!