/* */

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் மார்ச் 29 2024 வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - சோபகிருது - பங்குனி- 16-

29/03/2024 வெள்ளிக்கிழமை

வருடம் - சோபகிருது வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - சிசிர ருதௌ.

மாதம் - பங்குனி

பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்.

திதி - மாலை 06.21 pm வரை சதுர்த்தி பிறகு பஞ்சமி

நக்ஷத்திரம்- மாலை.06 .41 pm வரை விசாகம் பிறகு அனுஷம்

யோகம் - நாள் முழுவதும் சித்த யோகம் *

நல்ல நேரம் - 09.30 AM-10.30 AM, 04.30 PM-05.30 PM

கௌரி நல்ல நேரம் - 12.30 AM-01.30 AM, 06.30 PM -07.30 PM

ராகு காலம் - 10.30 AM- 12.00 PM.

எமகண்டம் - 03.00 PM -04.30 PM.

குளிகை - 07.30 AM - 09.00 AM.

சூரிய உதயம்- காலை 06.07 AM.

சூரிய அஸ்தமனம்- மாலை 06.20 PM.

சந்திராஷ்டமம்- உத்திரட்டாதி & ரேவதி

இன்றைய (29-03-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் மார்ச் 29, 2024

சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிலும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. பொருளாதாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய நினைவுகளால் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : கவனம் வேண்டும்.

பரணி : வாதங்களை தவிர்க்கவும்.

கிருத்திகை : மந்தமான நாள்.

ரிஷப ராசிக்கான பலன்கள் மார்ச் 29, 2024

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். புதிய நபர்களிடத்தில் கனிவுடன் பழகவும். சுபகாரியங்களில் கலந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உயர் அதிகாரிகளால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரோகிணி : கனிவு வேண்டும்.

மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.

மிதுன ராசிக்கான பலன்கள் மார்ச் 29, 2024

பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகளை மேம்படுத்திவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணி மாற்றம் சார்ந்த எண்ணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.

திருவாதிரை : வசதிகள் மேம்படும்.

புனர்பூசம் : திருப்பங்கள் உண்டாகும்.

கடக ராசிக்கான பலன்கள் மார்ச் 29, 2024

தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குண நலன்களின் சில மாற்றங்கள் ஏற்படும். வித்தியாசமான எண்ணங்களும், முயற்சிகளும் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். அலுவலகத்தில் பொறுமையை கையாளவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.

பூசம் : ஆர்வமின்மையான நாள்.

ஆயில்யம் : பொறுமை வேண்டும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் மார்ச் 29, 2024

மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். தாயுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய வேலைக்கான வாய்ப்பு ஏற்படும். புதிய மின்னணு சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பணிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : விவாதங்கள் நீங்கும்.

பூரம் : வாய்ப்பு ஏற்படும்.

உத்திரம் : மதிப்பு கிடைக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள் மார்ச் 29, 2024

மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தனவரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : தன்னம்பிக்கை மேம்படும்.

அஸ்தம் : தனவரவுகள் உண்டாகும்.

சித்திரை : கருத்து வேறுபாடுகள் விலகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் மார்ச் 29, 2024

பணிவான பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். கணிதம் சார்ந்த துறைகளின் மீது ஈர்ப்பு ஏற்படும். உத்தியோகப் பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை புரிந்து கொள்வீர்கள். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்கள் பிறக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

சித்திரை : நட்பு விரிவடையும்.

சுவாதி : துரிதம் உண்டாகும்.

விசாகம் : அத்தியாயங்கள் பிறக்கும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் மார்ச் 29, 2024

தனவரவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்களிடம் அதிக உரிமை கொள்வதை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : எண்ணங்கள் மேம்படும்.

அனுஷம் : அனுபவம் கைகொடுக்கும்.

கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு ராசிக்கான பலன்கள் மார்ச் 29, 2024

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். கனிவான பேச்சுக்களால் பிரச்சனைகள் குறையும். மேலதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : கவலைகள் நீங்கும்.

பூராடம் : பிரச்சனைகள் குறையும்.

உத்திராடம் : கவனம் வேண்டும்.

மகர ராசிக்கான பலன்கள் மார்ச் 29, 2024

எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : தன்னம்பிக்கை பிறக்கும்.

திருவோணம் : மதிப்பு மேம்படும்.

அவிட்டம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கும்ப ராசிக்கான பலன்கள் மார்ச் 29, 2024

தொழில் அபிவிருத்தி சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுபாட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகளை புரிந்து கொள்வீர்கள். மனதில் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பரிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.

சதயம் : நெருக்கடியான நாள்.

பூரட்டாதி : பயணங்கள் உண்டாகும்.

மீன ராசிக்கான பலன்கள் மார்ச் 29, 2024

விவேகமான செயல்பாடுகளின் மூலம் நன்மதிப்பு ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள். எழுத்துத் துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரம் சார்ந்த ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : மதிப்பு ஏற்படும்.

உத்திரட்டாதி : சாதகமான நாள்.

ரேவதி : புரிதல் உண்டாகும்.

Updated On: 29 March 2024 2:34 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!