/* */

‘நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடுவது ஏன்?’ -வீரப்பன் மகள் பேட்டி

‘நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடுவது ஏன்?’என்பது பற்றி வீரப்பன் மகள் பேட்டி அளித்துள்ளார்.

HIGHLIGHTS

‘நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடுவது ஏன்?’  -வீரப்பன் மகள் பேட்டி
X

வீரப்பன் மகள் வித்யாராணி.

பாஜகவிலிருந்து நாம் தமிழர் கட்சிக்கு வந்தது ஏன் என்பது குறித்து வீரப்பன் மகளும் கிருஷ்ணகிரி தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளருமான வித்யா ராணி விளக்கியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி வேட்பாளர் வித்யா ராணி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி கள நிலவரம் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறது. அந்த பகுதியில் முக்கால்வாசி என் அப்பா வீரப்பன் வாழ்ந்த பகுதி.

விவசாயம், விவசாயம் சார்ந்த பகுதிகள். அரசியலை புரிந்திருக்கக் கூடிய மக்களுடைய பகுதியாக இருக்கிறது. நல்ல ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது, நல்ல ஆதரவும் இருக்கும் என நம்புகிறேன். கிருஷ்ணகிரியை பொருத்தமட்டில் 4 முனை போட்டி இருக்கிறது. சின்னமே ஒதுக்கப்படாத நிலையிலும் மக்களுக்கான தேவைகளை முன்னிறுத்தித்தான் வாக்கு கேட்க போகிறேன். எங்கள் கொள்கைகளை வைத்தும் வாக்கு கேட்க போகிறேன். மக்களுக்கு சுதந்திரமான வாழ்க்கை அமைய எங்களின் கொள்கைகள் எந்த அளவுக்கு அவர்களுக்கு உதவும் என்பதை அடிப்படையாக கொண்டும் வாக்கு கேட்பேன். கடந்த சட்டசபை தேர்தலில் பென்னாடம் தொகுதியில் போட்டியிட பாஜகவிடம் விருப்பமனுக்களை அளித்திருந்தேன். இந்த முறை ஏன் நாம் தமிழர் என கேட்கிறார்கள். இதில் எந்த முரண்பாடும் இல்லை. கண்டிப்பாக தேசியத்திற்கும் தேசத்திற்குமான அரசியல் என புரிந்துக் கொண்டு நான் பாஜகவிற்கு போனேன். ஆனால் ஒவ்வொரு விஷயங்களையும் நாம் தேச தலைமைகிட்ட இருந்து போராடி பெற வேண்டிய சூழலை முதல்வர் ஸ்டாலினிடம் நான் பார்த்துள்ளேன்.

அப்படியிருக்கும் போது நாட்டினுடைய ஒரு விஷயத்திற்கு தமிழகத்திற்கு தமிழக மக்களுக்கு இதுதான் சரியான முதன்மை அரசியல். இதை சரி செய்துவிட்டுத்தான் அடுத்தது அங்கே செல்ல வேண்டும் என்பதை நான் முடிவு செய்துள்ளேன். எங்களுடைய கொள்கைக்காக மக்கள் எங்கள் சின்னத்தை தேடி ஓட்டு போடுவார்கள். ஆளும் கட்சியினர் செய்த சாதனைகளை கூறி வாக்கு கேட்பார்கள். எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி செய்யாத சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பார்கள். நான் இந்த தேர்தலில் செய்ய போகும் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பேன். இவ்வாறு வித்யா ராணி தெரிவித்திருந்தார்.

ஈரோடு சத்தியமங்கலம் காட்டில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தனக் கடத்தல் வீரப்பன், கடந்த 2004 ஆம் ஆண்டு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வித்யா ராணி, விஜயலட்சுமி என்ற இரு மகள்கள் உள்ளனர். அவர்களில் வித்யா ராணி, 4 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு பாஜக ஓபிசி அணியின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் 4 ஆண்டுகளாகியும் அவருக்கு எந்த முக்கிய பொறுப்புகளும் கொடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த வித்யா ராணி பாஜகவிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த பிப்ரவரி மாதம் நா் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேசியிருந்தார். இதையடுத்து தற்போது கிருஷ்ணகிரி வேட்பாளராக வித்யா ராணி அறிவிக்கப்பட்டுவிட்டார்.

Updated On: 24 March 2024 10:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!