/* */

திமுக எம்.பி.யை மறித்து கேள்வி எழுப்பிய திருவல்லிக்கேணி வாக்காளர்கள்

வாக்கு சேகரிக்க சென்ற திமுக எம்.பி.யை மறித்து திருவல்லிக்கேணி பகுதி வாக்காளர்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திமுக எம்.பி.யை மறித்து கேள்வி எழுப்பிய திருவல்லிக்கேணி வாக்காளர்கள்
X

சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பியிடம் கேள்வி எழுப்பிய பெண் வாக்காளர்கள்.

தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன் இரண்டாவது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்கி உள்ளார். இந்நிலையில் திருவல்லிக்கேணியில் இதுவரை ஏன் தொகுதி பக்கமே வரவில்லை என, தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சார வாகனத்தை மறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை முழுவதுமே திமுகவின் கோட்டை என்று சொல்லலாம்... காரணம் பெரும்பாலும் சென்னையில் திமுக தான் வெற்றி பெறும். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சென்னை மாநகரத்தில் உள்ள அத்தனை தொகுதியிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. சென்னையின் மண்டலமான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மதுராந்தகம் என்ற ஒற்றை தொகுதியை தவிர எங்குமே அதிமுக வெற்றி பெறவில்லை.. அத்தனை தொகுதியிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது,

இந்நிலையில் 2014ல் வெற்றி பெற்றவர்களே மீண்டும் வெற்றி பெறும் முனைப்பில் சென்னையில் உள்ள லோக்சபா தொகுதிகளில் களம் இறங்கி உள்ளார்கள்.தென்சென்னை லோக்சபா தொகுதியில் சிட்டிங் எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் களம் இறங்கி உள்ளார். மத்திய சென்னையில் தயாநிதி மாறனும், வட சென்னையில் கலாநிதி வீராசாமியும் களம் இறங்கி உள்ளனர். தாம்பரம் மற்றும் சென்னை புறநகர் பகுதியை உள்ளடக்கிய ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டிஆர் பாலு களம் இறங்கி உள்ளார். இந்த நான்கு தொகுதிகளில் தென்சென்னை தொகுதியின் சென்னையின் மையப்பகுதிகளில் உள்ள தொகுதியாகும். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் என ஆறு தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதி மிகவும் பணக்கார தொகுதியாக உள்ளது.

சென்னையின் மிகப்பெரிய அத்தனை கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைந்துள்ள தொகுதிகள். ஐடி நிறுவனங்கள் எல்லாமே இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளன. வானுயர்ந்த கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், சினிமா நிறுவனங்கள், புகழ்பெற்ற பெரிய கோயில்கள் மற்றும் வழிப்பாட்டுத் தலங்கள், கோயம்பேடு காய்கறி சந்தை என பல அம்சங்கள் உள்ளன. அதேபோல் சென்னை மாநகரமே கண்ணை கட்டும் அளவிற்கு வாகன நெரிசல் உள்ள ஓஎம்ஆர் சாலை, ஈசிஆர் சாலை, ரேடியல் சாலை, அண்ணா சாலை, வடபழனி சாலை, ஆற்காடு சாலை இந்த பகுதியில் தான் உள்ளது.

சுருக்கமாக ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால், மொத்த சென்னையின் வளர்ச்சி என்பதும் வாழ்வாதாரம் என்பதும் தென்சென்னை தொகுதியை மையப்படுத்தி தான் உள்ளது. தென்சென்னை தொகுதியில் மிகப்பெரிய பிரச்சனை என்றால் போக்குவரத்து நெரிசல், பரங்கிமலை -வேளச்சேரி ரயில் பாதை இன்னமும் முடியாதது, திடக்கழிவு மேலாண்மை மற்றும் குடிநீர் இணைப்பு பல இடங்களில் இல்லாதது, மழை காலங்களில் கடும் பாதிப்பு ஏற்படுவது போன்றவை இன்றுவரை சரி செய்யப்படாத பெரிய பிரச்சனையாகும். சரி விஷயத்திற்கு வருவோம். தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் களம் இறங்கி உள்ள தமிழச்சி தங்கப்பாண்டியன், திருவல்லிக்கேணி பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்றார்.. அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, தமிழச்சி தங்கப்பாண்டியனின் வாகனத்தை மறித்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இத்தனை நாட்களாக தொகுதி பக்கமே வராமல் இப்போது வருவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்கள்.திருவல்லிக்கேணி பாரதிதாசன் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சேதமடைந்து இருப்பதாகவும், இதுப்பற்றி நீண்ட நாட்களாக கூறியும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, பொதுமக்கள் சிலர், தமிழச்சி தங்கப்பாண்டியனிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அடுத்தவாட்டி வாங்க.. இந்த முறை போயிடுங்க.. உயிருடன் இருந்தால் வந்து பாருங்கள்.. போங்கய்யா நீங்களும் உங்கள எலெக்சனும் என்று ஆவேசமாக பேசினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 27 March 2024 3:05 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’