/* */

ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: எதிர்க்கட்சிகளுக்கு ராகுல் காந்தி அழைப்பு

பாஜகவை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: எதிர்க்கட்சிகளுக்கு ராகுல் காந்தி அழைப்பு
X

ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்

பாஜகவை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

புது டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனா். கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும் போது..

உங்களை அழைத்ததன் ஒரே நோக்கம், நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதுதான். நம் அனைவரின் குரலும் ஒன்றிணைந்தால் வலிமை மிக்கதாக மாறும். இந்த குரலை பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பால் நசுக்க முடியாது. ஒற்றுமையின் வலிமையை நினைவு கூா்ந்து நாம் நம் பயணத்தை தொடர வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.

கூட்டத்துக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவா்கள், அங்கிருந்து நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் சென்றனர். சைக்கிள் இல்லாதவா்கள், நடைபயணமாகவே நாடாளுமன்றத்துக்கு சென்றனர். அப்போது ராகுல் காந்தி கூறுகையில், 'பெட்ரோல், டீசல் உயா்வால் நாட்டு மக்கள் அவதியுறுகிறார்கள். நாங்கள் சைக்கிளில் நாடாளுமன்றம் சென்றால், அது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்

முன்னதாக நடந்த கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவா்களான மல்லிகார்ஜுன கார்கே, அதீா் ரஞ்சன் சௌதரி, கே.சி.வேணுகோபால், ஆனந்த் சா்மா, ப.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனா். இவா்களைத் தவிர, திரிணமூல் காங்கிரஸ் (சௌகதா ராய், மொஹுவா மொய்த்ரா), தேசியவாத காங்கிரஸ், சிவசேனை(சஞ்சய் ரௌத், பிரியங்கா சதுா்வேதி), திமுக (கனிமொழி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி (ராம்கோபால் யாதவ்), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புரட்சிகர சோஷலிச கட்சி, லோக்தாந்திரிக் ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவா்களும் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 17 எதிர்க்கட்சிகளின் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் தலைவா்கள் எவரும் பங்கேற்கவில்லை.

ராகுல் காந்தி அழைப்பு விடுத்த எந்தக் கூட்டத்திலும் இதுவரை பங்கேற்காத திரிணமூல் காங்கிரஸ், இந்த முறை கூட்டத்தில் பங்கேற்றது.

Updated On: 4 Aug 2021 2:02 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  4. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  7. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  10. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...