/* */

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பு மனு தாக்கலின்போது திமுக- அதிமுக மோதல்

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பு மனு தாக்கலின்போது திமுக- அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வந்ததால் மோதல் ஏற்பட்டது.

HIGHLIGHTS

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பு மனு தாக்கலின்போது திமுக- அதிமுக மோதல்
X

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்நாள் அமைச்சர் சேகர்பாபு.

வட சென்னை தொகுதியில் திமுக - அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முதலில் வந்தது யார் என்பது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. அந்த வகையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று வேட்புமனு தாக்கல் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக, பாஜக என கட்சியின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.

இதன்படி இன்று மதிய வேளையில், அதிமுக சார்பில் வட சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் ராயபுரம் மனோ வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இதேபோல், திமுக சார்பில் வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமியும் வந்திருந்தனர்.

அப்போது இருவரும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளனர். இதனால் யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்று வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக சார்பில் வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், திமுகவின் அமைச்சர் சேகர்பாபுவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. முதலில் வந்தது அதிமுகதான் என தேர்தல் அதிகாரி கூறியும் சேகர் பாபு ஏற்க மறுத்து வாக்கு வாதம் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து பேசி சமாதானம் செய்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

Updated On: 25 March 2024 9:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!