/* */

கூட்டணி முடிவாகவில்லை! மக்களவை தேர்தலில் அதிமுக தனித்து போட்டியா?

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளுள் பெரும்பாலான கட்சிகள் தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது

HIGHLIGHTS

கூட்டணி முடிவாகவில்லை! மக்களவை தேர்தலில் அதிமுக தனித்து போட்டியா?
X

எடப்பாடி பழனிச்சாமி

நாடாளுமன்ற மக்களவைக்கான 18வது தேர்தல், ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும், தேர்தலுக்கானப் பணிகளில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் தங்களுடைய பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைத் தொடங்கியது முதலே அதிமுகவிற்கு தொடர்ந்து சிக்கல் நிலவிவந்தது. முன்னதாக, இனி பாஜகவுடன் கூட்டணி என்கிற பேச்சுக்கே இடமில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார்.

தமிழகத்தின் பிரதான கட்சியும், ஆளுங்கட்சியுமான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டையே முடித்து வேட்பாளர்களையே அறிவிக்கும் நிலைக்கு சென்று விட்டது. ஆனால், எதிர்க்கட்சியும் மற்றுமொரு பிரதான கட்சியுமான அதிமுக இன்னும் கூட்டணி கட்சிகளை முடிவு செய்வதிலேயே இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளுள் பெரும்பாலான கட்சிகள் தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது. கடந்த வாரம் வரை அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் இருந்த பாமக தற்போது பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது.

மறுபுறம் தேமுதிக உடனான கூட்டணி தொடர் இழுபறியில் உள்ளது. இப்படி தமிழகத்தில் பிரதான கட்சிகளுடன் அதிமுகவின் கூட்டணி இதுவரை உறுதியாகாத நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது, 2024 நாடளுமன்ற தேர்தலில் அதிமுக பெரும் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுகிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி குறித்து நாளை அறிவிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார பணிகளை முதல் கட்டமாக இம்மாதம் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மேற்கொள்ளப் போவதாக அதிமுக தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 March 2024 2:05 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை