/* */

‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட பெண்

மகளிர் உரிமை தொகை ரூ.1000 கிடைக்கவில்லை என தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் பெண் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட பெண்
X

மகளிர் உரிமை தொகை ரூ.1000 கிடைக்கவில்லை என அமைச்சர் மதிவேந்தனிடம் முறையிட்ட பெண்.

லேக்சபா தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் அமைச்சர் மதிவேந்தன் பேசிக் கொண்டு இருக்கும் போதே திடீரென பெண் ஒருவர் எழுந்து தனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்று முறையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கே தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. இதனால் பிரச்சாரம் இப்போதே தீவிரமடைந்து இருக்கிறது. அதன்படி நாமக்கல் தொகுதி இந்த முறை திமுக கூட்டணியில் உள்ள கொமதேகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே கொமதேக சார்பில் மாதேஷ்வரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொமதேக வேட்பாளர் மாதேஷ்வரனுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. அதன்படி வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென எழுந்த பெண் ஒருவர் தனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்று நேரடியாக அமைச்சரிடம் முறையிட்டார்.

அப்போது அருகே இருந்தவர்கள், "அமைச்சர் பேசுகிறாரேம்மா.. போய் உட்காருங்க.. பேசி முடிச்சதும் கேட்பாரு" என்று சொல்லி அந்த பெண்ணை அமர வைத்தனர்.

அமைச்சர் மதிவேந்தனும் சொன்னபடியே தனது பேச்சை முடித்தவுடன் அந்த பெண்ணை அழைத்து என்ன பிரச்சினை எனக் கேட்டார். மகளிர் உரிமையைத் தொகையைப் பெறுவதில் தனக்குப் பிரச்சினை இருப்பதாக அந்தப் பெண் தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக மேடையில் இருந்தபடியே அதிகாரிகளுக்கு போன் போட்ட அமைச்சர் மதிவேந்தன், "மகளிர் உரிமை தொகை பதிவு பண்ணும் போது பிரச்சினை வந்ததாம். அது என்னனு பாருங்க. தேர்தல் முடிந்த பிறகு அது என்ன விவகாரம் எனப் பார்த்து நடவடிக்கை எடுங்கள்.. நான் அந்த பெண்ணை அலுவலகத்திற்கு வரச் சொல்கிறேன். என்ன பண்ண முடியும்னு பாருங்க" என்று அவர் அறிவுறுத்தினார். பிறகு அந்த பெண்ணிடம் தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் இந்த விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் என்று சொல்லி அந்த பெண்ணை அனுப்பி வைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

பெண்களுக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை கடந்தாண்டு திமுக அரசு கொண்டு வந்தது. குறிப்பிட்ட சில நிபந்தனைகளை விதித்த தமிழ்நாடு அரசு, அவர்களுக்கு மட்டுமே மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தது. இருப்பினும், சில பெண்கள் தங்களுக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை என்று தொடர்ந்து புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் லோக்சபா தொகுதியைப் பொறுத்தவரைக் கடந்த முறை திமுகவின் சின்ராசு என்பவர் வெற்றி பெற்று இருந்தார். இந்த முறை அங்கே உதயசூரியன் சின்னத்தில் கொமதேகவின் மாதேஷ்வரன் போட்டியிடுகிறார். அங்கே அதிமுக சார்பில் தமிழ் மணி போட்டியிடும் நிலையில், பாஜகவில் இருந்து கேபி ராமலிங்கம், நாம் தமிழர் கட்சியில் கனிமொழி ஆகியோர் களமிறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 March 2024 3:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!