/* */

சந்தோஷமா சிரிங்க.. வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்..

Smile Happy Quotes in Tamil-சிரிப்பு வருது... சிரிப்பு வருது...சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது... என்ற பாடலைக் கேட்டிருப்போம்.. எனவே நகைச்சுவை உணர்வோடு இருங்க...நோய்களே வராது...

HIGHLIGHTS

Smile Happy Quotes in Tamil

Smile Happy Quotes in Tamil

மனிதப் பிறவியானது மகத்தானது. ஏன் தெரியுமா? இறைவனின் படைப்பில் மனிதர்களுக்கு மட்டுமே ஆறறிவு அளித்துள்ளான். அதுமட்டுமல்லாமல் சிரிக்கும் பண்பினையும் அளித்துள்ளான்.

எல்லா நேரத்திலும் நீங்கள் சிரித்துக்கொண்டே இருந்தால் உங்களுக்கு சமூகத்தில் வேறு பெயர் வைத்துவிடுவார்கள்.இதனால் சிரிக்கும் நேரத்தில் சிரிக்க வேண்டும்.. அழ வேண்டிய நேரத்தில் அழ வேண்டும் .சீரியசாக இருக்க வேண்டிய நேரத்தில் சீரியசாக இருக்க வேண்டும்.

சிரிப்பு என்பது நம் உடன் பிறந்தது. நகைச்சுவை உணர்வு உள்ளவர்களை நோய்கள் அவ்வளவாக தாக்குவதில்லை .இதனால்தான் டாக்டர்கள் கூட சந்தோஷமா உங்க மனசை வைச்சுக்குங்க.. என அட்வைஸ் செய்வார்கள். வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகுங்க.. அது எப்படிங்க... அப்ப சிரிப்பவர்களை விட சிரிக்காதவர்களுக்கு நோய்கள் அதிகம் வருமா? என கேட்கலாம். ஆமாம் சிரித்தாலே உங்கள் மனதில் உள்ள கவலைகள் பாதி மறைந்துவிடவும் மறந்துவிடவும் வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில் இறுகியமுகத்துடன் இருக்கும்போது உங்களுடைய உடல் உறுப்புகளும் தளர்வடையாமல் இருப்பதால் கோபம் அதிகமாகி உடலுக்கு வேறு உபாதைகளைத் தர ஆரம்பிக்கிறது.

பெரும்பாலான இருதய நோய்கள் அனைத்துமே மன அழுத்தத்தால் ரத்த கொதிப்பு அதிகரித்ததால் ஏற்படுகிறது. எந்தவொரு விஷயத்தையும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் தனிமைவிரும்பிகளாக இருப்பவர்களை காலன் இதுபோன்ற நோயின் பாதிப்பினால் அருகே அழைத்துக்கொள்கிறான்.

எனவே எப்போதுமே சீரியஸா இருக்காதீங்க.. அவ்வப்போது உங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ளவேண்டும். மற்றவர்களுக்காக பொய் சிரிப்பு சிரிக்காதீங்க. உங்கள் சிரிப்பானது ஆத்மார்த்தமானதாக இருக்கட்டும் . அதுவே உங்களை அதிக நாள் வாழ வைக்கும்...இதனால்தான் சினிமாவில் கூட எப்போதும் தொடர்ந்து சீரியஸாக கதைசம்பந்தமாகவே ஷாட்கள் இருந்தால் ஃபோர் அடிக்கும் என்பதால் இடையிடையே நகைச்சுவை நடிகர்களின் ஷாட்களை வைத்தனர். இதனால் சீரியஸாக போய்க்கொண்டிருக்கும் கதையானது சற்று நகைச்சுவையாக செல்லவேண்டும் என்பதற்காகவே டைரக்டர்கள் இடையிடையே நகைச்சுவை பகுதிகளை வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

Smile Happy Quotes in Tamil

Smile Happy Quotes in Tamil

வாழ்க்கை எதைப் பரிசளித்தாலும், நீங்கள் புன்னகையைப் பரிசளிக்க மறக்காதீர்கள்!

புன்னகை அனைவருக்கும் பொருத்தமான அணிகலன்.

நம் மனதிற்குள் மருந்தால் தீர்க்க முடியாததையும், நம்மை மகிழ்விக்கும் சிறு வார்த்தைகள் தீர்த்து விடுகின்றன!

வார்த்தைகள் ஏதுமின்றி அன்பை வெளிப்படுத்தும் ஓர் அழகான மொழி, புன்னகை!

ஒவ்வொரு சிரிப்புக்கும், மதிப்பு உண்டு! மகிழ்ச்சி என்பது, நாம் ஏற்பதில் தான் உள்ளது!

நட்சத்திர சிதறல்கள், என்னவன் புன்னகையின் எதிரொலிகள்!

என்னவன் சிரிப்புகாலையில் உனது புன்னகை மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது!

என்னவன் சிரிக்கும் போது, அழகாய் இருக்க வேண்டும். அவளை சிரிக்க வைத்து, பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்!

கூட்டத்தில் சிரி தனியே அழு கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்.

தனியே சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

வாழ்க்கை பாதையைமலர்களால் தூவ முடியாவிட்டாலும்.குறைந்தபட்சம் சிரிப்புகளால் தூவுங்கள்.

சந்தோஷம் இருக்கும் இடத்தில்நீ வாழ நினைப்பதை விடநீ இருக்கும் இடத்தில்

மகிழ்ச்சியை உண்டாக்கு.உன் வாழ்க்கையில்மகிழ்ச்சி இருக்கும்.

சிரித்துக்கொண்டே இருங்கள்உங்கள் துயரங்கள் உன்னைஅழவைக்க முடியாமல்

உன்னிடம் தோற்றுப்போய்ஓடும் வரை.

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது.சிரிப்பு சத்தம் கேட்கும் போதுஅது திறந்து கொள்கிறது.

எந்த சூழ்நிலையிலும் நீங்கள்சிரிக்க கற்று கொண்டால்உலகிலேயே அதிகமாக உங்களைகவர்ந்தவளாக நீங்கள் திகழ்வீர்கள்.

பிறக்கும் போது அன்னையை அழ வைக்கிறோம்.இறக்கும் போது அனைவரையும் அழ வைக்கிறோம்.வாழும் போதாவது உன்னை சுற்றி உள்ளவர்களைசிரிக்க வைத்து பழகு!

செடியில் மலரும் மலரை விட நொடியில் மலரும்

அன்பை வெளிப்படுத்தும் ஒரே உலக மொழி, மலந்த புன்னகை மட்டுமே!

எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் உன் புன்னகையை இழந்து விடாதே! இழந்த புன்னகையை மீட்டெடுப்பது கடினமாகி விடும்!

Smile Happy Quotes in Tamil

Smile Happy Quotes in Tamil

இங்கு கவலையை மறந்து சிரிப்பவர் சிலர்... கவலையை மறைக்க சிரிப்பவர் பலர்...

மழலை மொழி போல மகிழ்ச்சி ஏதும் இல்லை, மருத்துவமும் ஏதும் இல்லை! மட்டற்ற ஆசைகள் மட்டுமில்லாமல் மற்றதெல்லாம் கூட தோற்குமே! மழலையின் புன்னகை மொழியாலே!

புன்னகைக்கும் உன் முகம் பார்த்தால் போதுமென எனக்கு பிடித்ததை இழக்கவும் துணிகிறேன்! எனக்கு பிடிக்காததை விருப்பமாகவும் ஏற்கிறேன், எல்லாம் செய்கிறேன் உனக்காக!

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.

வார்த்தைகள் ஏதுமின்றி அன்பை வெளிப்படுத்தும் ஓர் அழகான மொழி, புன்னகை!

அனைத்தையும் இழந்தபோதும், புன்னகை பூத்திருக்கு! மீள்வோமென்ற நம்பிக்கையில்!

உன் புன்னகையில் மயங்கி விட்டேன்! கன்னகுழியில் படுக்கவை! பாடாய்ப் படுத்தும் உன் நினைவுக்கு, ஆறுதலாய் இருக்கட்டும்!

செடியில் பூக்கும் மலர்களைப் போல், அவ்வப்போது பூக்கிறது சிரிப்பு!

நீ சிரித்ததோ கொஞ்சம்! அதில் சிதறியது என் நெஞ்சம்! மீண்டும் பார்க்க மனம் கெஞ்சும்! அதை பார்க்காத போது ஏமாற்றமே எஞ்சும்!

சில்லறைகளை சேகரித்தேன், அவள் சிரிக்கும் போது!

வெட்கங்கள் தாண்டி வெடித்திடும் புன்னகை தனி அழகே, பெண்களுக்கு!

தினந்தோறும் உதிக்கும் சூரியன் கூட தோற்றுப்போகும், உந்தன் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பின் முன்னால்!

உன்னுடைய சிரிப்பு சத்தம் ஏனோ, எனக்கு மட்டும் மெல்லிசையாய் ஒலிக்கிறது!

Smile Happy Quotes in Tamil

Smile Happy Quotes in Tamil

புதுக்கவிதை புனைகிறாள் நந்தவனக் கிளியவள், புன்னகை என்னும் தன் அழகு மொழியால்!

கரும்பை போன்ற கழுத்தை வைத்து, சக்கரையாக உன் சிரிப்பை கொட்டுகிறாயே!

சோகத்தை மறக்க உதட்டிற்கு தெரிந்த மொழி, புன்னகை!

இதயத்தில் இருந்து மறைந்து போனாலும், இதழ்களில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது, புன்னகை!

புன்னகை சக்தி வாய்ந்தது! நம்மை நேசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியாய், வெறுப்பவர்களுக்கு தண்டனையாய்!

ஒரு நாளில் பூத்திடும் பூக்களுக்கு தெரிவதில்லை, அடுத்த நாளிலேயே உதிர்ந்து விடுவோம் என்று! இருந்தும் புன்னகையுடன் பூக்கிறது!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Jan 2024 5:59 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?