/* */

நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்ட காலா மீன் உணவு ......படிங்க....

Salmon Fish Name in Tamil- காலாமீன் என்றுசொல்லக்கூடிய சல்மான் மீனில் அதிக புரோட்டீன், வைட்டமின்கள், தாதுச்சத்துகள் உள்ளன. பல நோய்களுக்கு மருந்தாகிறது இந்த உணவு.

HIGHLIGHTS

நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல்    கொண்ட காலா  மீன் உணவு ......படிங்க....
X

காலா மீன் என்று சொல்லப்படும் சல்மான் வகை மீன் (கோப்பு படம்)



Salmon Fish Name in Tamil-சல்மான் என்பது கதிர் வடிவ வால் கொண்ட மீன்களின் பொதுப் பெயராகும். "சல்மோன்" எனும் சொல் குதித்தல் என்ற பொருளுடைய "சல்மோ" என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்தது. சல்மான் மீன் சல்மோனிடே குடும்பத்தைச் சார்ந்தது. மீன் மீன், கரி மீன், சாம்பல் நுனி மீன் மற்றும் வெள்ளை மீன்கள் இதே குடும்பத்தைச் சார்ந்தவையே.இது தமிழில் காலா மீன் என்றுஅழைக்கப்படுகிறது.

வாழிடம்

இவைகள் வட அட்லாண்டிக்கின் (பேரினம் சல்மோ) , பசிபிக் பெருங்கடல் (பேரினம் onchorynchus) பகுதிகளை தங்கள் இருப்பிடமாக , பிறப்பிடமாக கொண்டவை. ஆன போதிலும் பல வகை சல்மான் மீன்கள் அவைகளின் சுற்றுச் சூழல் இல்லாத இடங்களிலும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. வட அமெரிக்காவிலுள்ள க்ரேட் லேக்ஸ் ஏரி, தென் அமெரிக்காவிலுள்ள படகொனியா (patagonia) பகுதிகளில் பண்ணைகளில் வளர்க்கப் படுகின்றன. இதன் சிற்றினங்கள் 'ட்ரௌட்' (Trout) என்ற பெயரால் அழைக்கப் படுகின்றன. பேரினம் ஆன்க்ரோஜிசஸ் (oncorhynchus) எட்டு சிற்றினம் கொண்டது. இவைகள் இயற்கையாக வடக்கு பசிபிக் கடலில் மட்டுமே காணப்படும்.இவைகள் ஒரு தொகுதியாக பசிபிக் சல்மான் என்று அழைக்கப்படுகிறது. சினோக் சல்மான் நியூஸிலாந்திலும் படகோனியாவிலும் அறிமுகப் படுத்தப் பட்டது.

வாழ்க்கை முறை

பொதுவாக சல்மான்கள் ஆற்றுப் புறஓட்டமான மீன்கள். அவைகள் ஆற்றில் பிறந்து கடலுக்கு வலசைப் போய் மறுபடியும் தான் பிறந்த ஆற்றிற்கே இனப் பெருக்கத்திற்காக திரும்பி வரும். ஆனாலும் அநேக வகை சிற்றினங்கள் தங்கள் வாழ்நாளை ஆற்றிலே கழித்து விடுகின்றன. அநேக சல்மான்கள் ஆற்றுப்புறவோட்டமுள்ள வாழ்வைக் கொண்டிருந்தாலும் சிலவகை மீன்கள் நன்னீரிலே கழிக்கக் கூடியவை. நாட்டுப்புற வழக்கு அல்லது வழக்காராய்ச்சி படி இவை தாங்கள் எங்கு பிறந்ததோ அதே இடத்திற்கு இனப் பெருக்கம் செய்ய செல்லும். இதை தடம் பின்பற்றி சென்று செய்த ஆராய்ச்சிகள் இது அதிக அளவில் உண்மை என்று நிரூபித்தது. கடலிலிருந்து ஆற்றிற்கு திரும்பி வரும்போது அநேக சல்மான்கள் திசை மாறி வேறு ஆற்றிற்கு சென்று விடும். ஆனால் திசை மாறும் தன்மை அது சார்ந்த சிற்றினத்தைப் பொறுத்தே இருக்கும். வாழிடம் திரும்பும் தன்மை அதன் மோப்பஞ் சார் நினைவைப் பொறுத்தே அமையும்.


சால்மன் மீன்கள் நன்னீரில் பிறந்து பயணம் மேற்கொண்டு உப்பு நீரில் வாழ்பவை. முட்டை இடுவதற்காக நன்னீருக்கு செல்பவை. இதனை அனாட்ரோமஸ் என்பர். சால்மன் மீன்கள் அதிக நன்மைகளைத் தருபவை.

பொதுவாகவே மீன்களில் அதிகமான புரோட்டின் மற்றும் தாதுச்சத்துகள் உள்ளன.இம்மீன்களைச் சாப்பிடுவதால் முடி,தோல்,மற்றும் மூட்டுகள் மற்றும் மூளை உள்ளிட்டவைகள் புத்துணர்ச்சியோடு இருக்கும். வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் அதிகம் உள்ளதால் இந்த நன்மை ஏற்படுகிறது. மேலும் இதனை பலர் மாத்திரைகளாகவும், மருந்தாகவும் உறைந்த நிலையில் சாப்பிடுகின்றனர்.

மார்க்கெட்டில் சாக்ஐ, அட்லாண்டிக், கோஹோ போன்ற மீன்கள் கிடைக்கின்றன.இந்தியாவில் கிடைக்கும் சால்மன் மீன்கள் பெரும்பான்மையானவை பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவைகளாகவே உள்ளன. சொல்லப்போனல் அமெரிக்காவில் இந்த வகை மீன்கள் அதிகம் பயனாகிறது.இறக்குமதியாகும் சால்மன் மீன்கள் அனைத்துமே உறைந்த நிலையிலேயே காணப்படும் , இதனை பலவித வடிவங்களில் வெட்டி விற்கின்றனர்.

இந்த மீனைப்பொறுத்தவரை இதில் அதிக அளவு எண்ணெய் காணப்படும் என்பதால் இதனைச் சுட்டு சாப்பிடலாம். அல்லது கிரில் அல்லது கல்லில் நீராவியில் வேகவைத்து கொதிக்கவைத்து காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். மேலும் சால்மன் மாத்திரை மற்றும் ஆயில் வடிவங்களிலும் மார்க்கெட்டுகளில் கிடைப்பதால் டாக்டரின் ஆலோசனையைப் பெற்று அதற்கேற்றாற் போல் உட்கொள்வதே சிறந்தது.

ப்ரீசரில் மைனஸ் 4 டிகிரி செல்சியசுக்கு கீழ் இயங்குமாறு வெப்பநிலையை செட்செய்து சால்மன் மீன்களை அதில்இ ட்டு வைக்க வேண்டும். அதுவும் வேக்கம் பேக் கில் வைக்கவும். இளஞ்சிவப்பு நிறமுள்ள சால்மன் மீன்கள் மற்ற உணவுகளின் வாசனைப் பட்டால் பெரும்பாதிப்படையும்.

சால்மன் மீன்களில் ஒமேகா 3 அமிலம் அதிகம் உள்ளது. இவை நமது உடல் நலத்திற்கு மிகவும் தேவையானவை. மூட்டுகள் மற்றும் தோலை ஆரோக்யமாக வைத்திருக்க உதவுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமில சால்மன்மீனைச் சாப்பிடுவதால்இதய நோய் வருவதைத் தடுக்கலாம். மேலும் பிரஷர், அதிக கொழுப்புகள், மன அழுத்த பிரச்னை, மூளை சம்பந்த நோய்கள் மற்றும் புற்று நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

இந்த மீனைச் சாப்பிடுபவர்களுக்கு தீராத சர்க்கரை நோய் மற்றும் மன அழுத்தம் போன்ற நோயானது குணமாகும்.

இந்த மீன்களைப் பொறுத்தவரை அதிக புரத சத்துகள் நிறைந்துள்ளதால் ஆரோக்யமான வளர்சிதை மாற்றம் நடக்க பெரிதும் உதவி புரிகிறது.


கலிபோர்னியாவில் இருந்து இறக்குமதியான சல்மான் என்ற காலாமீன் (கோப்பு படம்)

தற்காலத்தில் பலரும் உடல் பருமனால்தான் அவதிப்படுகின்றனர். இதற்காக அதிக பணத்தினை வேறு செலவு செய்கின்றனர். வேறொன்றுமே தேவையில்லை. பருமனான உடல்வாகு கொண்டவர்கள் இந்த மீனை உட்கொள்ளும் பட்சத்தில் ஸ்லிம்மாக ஆகிவிடுவர்.

இதிலுள்ள பயோ ஆக்டிவ் புரோட்டீன்கள் நம் மூட்டிலுள்ள குருத்தெலும்புகளுக்கு , இன்சுலின் செயல் திறனுக்கு மற்றும் செரிமான தடத்தில் வீக்கம் போன்றவை வராமல் தடுப்பதற்கு உதவியாக உள்ளது.

இந்த வகைமீன்களில் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. அதாவது பி1, பி2,பி3, மற்றும் பி5 போன்றவை அதிக அளவு காணப்படுகிறது.சால்மன் மீன்கள் இருதயத்தில் ஏற்படக்கூடிய வீக்கத்தினைக் குறைக்கும் ஆற்றல் கொண்டவை.

வைட்டமின் டி இம்மீனில் அதிகம் உள்ளது. எலும்பு பகுதி மற்றும் பற்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் . தண்டுவட மரப்பு நோய் , புற்றுநோய் ஆகியவை வராமலும் தடுக்கிறது.

சால்மன் மீனில் செலினியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது. வாழைப்பழத்தில் அதிக அளவிலான பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.வாழைப்பழத்தில் உள்ள அளவை விட, 10 சதவீதம் கூடுதலாக சால்மன்மீனில் அதிகமாக பொட்டாசியம் உள்ளது.பொட்டாசியம் உள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். குறிப்பாக நம்முடைய உடலில் உபரி நீர் சேராமல் தடுக்கும். எலும்புகள் மற்றும் பற்களை நல்ல வலிமையாக வைத்திருக்க பாஸ்பரஸ் தாது உதவுகிறது. இதய நோய்கள், தைராய்டு, சிறுநீரகம் ,கேன்சர் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. நம் உடலில் போதுமான எதிர்ப்பு சத்து இல்லாத போது நோய்தாக்கிவிடும்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 Feb 2024 5:42 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  4. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  5. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  9. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  10. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!