/* */

தினமும் நைட் நிம்மதியா துாங்கணுமா? இந்த வகை உணவுகளை சாப்பிடாதீங்க...

Deep Sleep -அறுசுவை விருந்தோ, அசைவ விருந்தோ, ஒரு பிடி பிடித்தால், நன்றாக துாக்கம் வரும். இப்படி, நல்ல துாக்கத்தை கொண்டு வரும் உணவும் உண்டு. அதே வேளையில் துாக்கத்தை கெடுக்கும் உணவு வகைகளும் உண்டு. இரவில் தூங்க விடாமல் செய்யும் உணவுகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

HIGHLIGHTS

தினமும் நைட் நிம்மதியா துாங்கணுமா? இந்த வகை உணவுகளை சாப்பிடாதீங்க...
X

இரவில் இந்த வகை உணவுகளை தவிர்த்தால், இப்படி நீங்க ‘வாய்பிளந்து’ அயர்ந்து துாங்கலாம்.

Deep Sleep -இரவு நேரங்களில் நாம் சாப்பிடும் ஒரு சில உணவுகள் மற்றும் சாப்பிடும் அளவு, அதன் தன்மை உட்பட நமது தூக்கத்தை பாதித்து 'இன்சோம்னியா' என்ற தூக்க நோயை ஏற்படுத்தி விடும். எனவே, எதை உண்ணக்கூடாது, எவ்வளவு உண்ண வேண்டும் என்பது மிக முக்கியம்.

இரவு நேரங்களில் துாங்க செல்வதற்கு முன், மூன்று மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை சாப்பிடுவது நல்லது. அது சாப்பிட்ட உணவானது, வயிற்றுக்குள் சென்று ஜீரணம் ஆவதற்கான நேரத்தை கொடுக்கும். மேலும், ஆரோக்கியமான ஜீரண செயல்பாட்டை ஊக்குவிக்கும். எனவே, துாங்க செல்வதற்கும் இரவு உணவுக்கும் இடையில் குறிப்பிட்ட நேர இடைவெளியை பின்பற்றுவது நல்லது.

அதே போல், சாப்பிடும்போதே தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இல்லையென்றால், நள்ளிரவு நேரங்களில் பசி எடுக்க கூடும். இது தூக்கத்தை பாதிப்பது மட்டுமின்றி, உடல்நலத்தையும் பாதிக்கும்.

​தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

இரவில் டீ, காபி சாப்பிடுவது தவறு

பலருக்கும் உணவு சாப்பிட்டு முடித்த பிறகு டீ மற்றும் காபி போன்ற பானங்கள் அருந்தும் பழக்கம் உண்டு. அதை இரவிலும் கடை பிடிப்பது நிச்சயம் தூக்கத்தை பாதிக்கும். டீ, காபி , சாக்லேட் , சோடா பானங்கள் ஆகியவற்றில், 'காபைன்' என்ற மூலப்பொருள் நிறைந்துள்ளது. இது குறைந்தபட்சம் பானத்தை அருந்திய அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மூளையை விழிப்போடு வைத்திருக்கும். எனவே, தூக்கம் பாதிக்கும். சிலருக்கு இந்த மூலப்பொருள் மிக சென்சிட்டிவானதாக இருந்தால் அவர்கள் காலையில் குடித்த காபியின் எதிரொலியாக, இரவு தூக்கம் பாதிக்கப்படும்.

நிறைவுற்ற கொழுப்பு(saturated fat) நிறைந்த உணவுகள்

எல்லா கொழுப்புகளும் கெட்ட கொழுப்பு இல்லை. ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலங்கள் உண்மையில் தூக்கத்தை ஊக்குவிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆனால், நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்த உணவு பொருட்களான நெய், வெண்ணெய், பிஸ்கட் உள்ளிட்ட பல பொருட்கள், தூக்கத்தை கெடுத்து விடும். குறிப்பாக காலை மற்றும் மதிய நேரங்களில் எடுத்துக் கொள்ளும் அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்பு உள்ள உணவுகள், இரவு நேர தூக்கத்தை கெடுக்கிறது. மேலும் அதிக நேரம் இரவுகளில் இடையிடையே விழித்து, விழித்து துாங்குவதற்கும் காரணமாகிறது.

சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ்

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளான பாஸ்தா, பிரட்ஸ் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுவதும் 'இன்சோம்னியா'வை ஏற்படுத்தும். ஆய்வு முடிவுகளின்படி, டயட்டில் அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட 'கார்போஹைட்ரேட்' உணவுகள் இருந்தால் அது தூக்கத்தை பாதிக்கும். அதோடு மட்டுமின்றி, இதை தொடர்ந்து சாப்பிடும்போது இருதய நோய்கள், ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு உள்ளிட்ட மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

வைட்டமின் குறைபாடு

குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடுவது மட்டுமல்ல, குறிப்பிட்ட வைட்டமின்களை தேவையான அளவு எடுத்துக்கொள்ளாமல் போவதும், தூக்கத்தை கெடுக்கும். குறைந்த தூக்கம் பெரும் பலருக்கும் மக்னீசியம், வைட்டமின் D , வைட்டமின் K , ஜின்க், கால்சியம், அயர்ன் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் தேவையான அளவை விட குறைவாக இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. எனவே, ஒரு நாளுக்கு தேவையான சரியான அளவு ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கார வகைகள்

இரவு நேரங்களில் காரமான உணவு வகைகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இது நெஞ்செரிச்சல், வயிற்று வலி, ஜீரண கோளாறு, வாயு தொல்லை உட்பட பல தொல்லைகளை தரும். இதன் காரணமாக துாக்கம் பாதிக்கப்பட்டு தூக்க நோய்களுக்கு உள்ளாகலாம்.

அதே போல், நீண்ட நாட்களாக இது போன்ற தூக்க நோயால் அவதிப்பட்டால் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 13 Oct 2022 11:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...