/* */

தித்திக்கும்... தீபாவளி... திகட்டாத தீபாவளி.... பட்டாசு சப்தத்துடன்....

Diwali Quotes Tamil-தீபாவளிப்பண்டிகையானது தீப ஒளிப்பண்டிகையின் திரிபு. கொரோனா முடிந்த பின் வரும் முதல் தீபாவளி வரப்போகிறது... கொண்டாடுவோம் மகிழ்ச்சியுடன்...

HIGHLIGHTS

Diwali Quotes Tamil
X

Diwali Quotes Tamil

Diwali Quotes Tamil

Diwali Quotes Tamil

பட்டாசு சுட்டு...சுட்டு...போடட்டுமா.... பட்டாசு ...சுட்டு...சுட்டு... போடட்டுமா.... என்ற சினிமா பாடலானது தீபாவளி என்றாலே நம் காதில் ஒலிக்க செய்துவிடும். காரணம் தீபாவளி என்றால் பட்டாசுதான்... பட்டாசு இல்லாத தீபாவளியா? என கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

உலகையே உலுக்கிய கொரோனா கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சி செய்ததால் நம்மால் எந்த பண்டிகையையும் உறவுகளோடு வெளியில் சுதந்திரமாக உலா வந்து கொண்டாட முடியாமல் போனது. கடந்த 2021 ம் ஆண்டு தீபாவளி கூட பரவாயில்ல.. அங்க..இங்க.. பட்டாசு சப்தம் கேட்டதுங்க.. ஆனால் 2020 தீபாவளி கொரோனா உக்ரமாக பரவிக்கொண்டிருந்த காலம் உறவுகள் கூட வீடுகளுக்கு வரமுடியாத சூழ்நிலை என்பதால் அந்த வருட தீபாவளி வீணாய் போனதுதான் மிச்சமுங்க...இருந்தாலும் புத்தாடை உடுத்தி வீட்டுக்குள்ளேயே கொண்டாடினாங்க...

ஆனா....இந்த வருடம் வரப்போற தீபாவளிதாங்க உண்மையிலேயே குட்டீஸ்களுக்கு கொண்டாட்டம் போங்க... கொரோனா பிரச்னை அவ்வளவா இல்லை. பட்டாசு சுதந்திரமா வெடிக்கலாம். அதிகாலை நேரத்தில் எழுந்து நீராடி பின் புத்தாடை உடுத்தி பட்டாசு வெடிக்கிற சந்தோஷமே ஒரு அலாதிங்க... அப்புறம் குடும்பத்தோடு கோயில்களுக்கு போற விஷயம் இருக்கு பாருங்க... வருடத்தில் ஒரு நாள் என்பதால் வெளியூரில் இருப்பவர்களும் தத்தம் குடும்பத்தோடு இணையும் நாள் அது என்பதால் வெகுசிறப்பு போங்க...

இனிப்பு கடைகளுக்கு கொண்டாட்டம். சுமார் ஒருவார காலம் ஆஃபர் வியாபாரம் துாள்பறக்குமுங்க... தீபாவளி காலையிலேயே சரக்குகள் அனைத்தும் விற்றுவிடும் பாருங்க... இதுதாங்க நிஜ தீபாவளி. அதுவே அக்காலத்தில் ஒரு வாரத்திற்கு முன்பாகவே வீடுகளில் குடும்ப பெண்கள் முறுக்கு, அதிரசம், அப்பம், ரவாலட்டு, லட்டு, மிக்சர், என வகை வகையாக செய்து டப்பாவில் போட்டு வைத்துவிடுவார்கள். குட்டீஸ்களுக்கு அம்மாவுக்கு தெரியாம எடுத்து சாப்பிடுவதில் அப்படி ஒரு சந்தோஷம்..

ஆனால் காலப்போக்கில் எல்லா பண்டிகைகளும் ரெடிமேடானதுதான்... கஷ்டமா போச்சுங்க... விநாயகர் சதுர்த்தின்னா கொழுக்கட்டை கடையில விக்குதுங்க... மாரியம்மன் பண்டிகையினா கூட மாவு கடையில் விக்கிறாங்க.. அப்புறம் பெண்கள் எப்படிங்க.. வீட்ல செய்வாங்க...

Diwali Quotes Tamil

Diwali Quotes Tamil

தீபாவளியன்று வாழ்த்து சொல்லும் வாசகங்களை படிங்க...

என் இனிய உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

உங்களுக்கும்... குடும்ப உறுப்பினர்களுக்கும்... மகிழ்ச்சி பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

உழைத்தவன் கூட உற்சாகமாய் கொண்டாடும் தீபாவளி பிழைப்பவன் கூட பூரிப்பில் கொண்டாடும் தீபாவளி.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மத்தாப்புகள் சிதற, பட்டாசுகள் வெடிக்க வீடெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க கொண்டாடுவோம் இந்த தீபாவளியை… தீபாவளி நல்வாழ்த்துக்கள்

சுற்றம் நட்பு சொந்தங்களுடன் தீபாவளி இனிதாய் அமைய என் வாழ்த்துக்கள்

அயலார் கலாச்சாரத்திற்கு அடிமையாகி நவீனமாக விழாயெடுப்பதல்ல தீபாவளி பண்பாட்டினை பாதுகாத்து புண்ணிய ஆத்மாக்களை வணங்குவதே தீபாவளி.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Diwali Quotes Tamil

கண்ணைப் பறிக்கும் ஒளியின்றி காதைப் பிளக்கும் ஒலியின்றி காற்றின் தூய்மையைக் கெடுக்காமல் கொண்டாடுங்கள் தீபாவளி... தீபாவளி நல்வாழ்த்துக்கள்

புத்தாடை இடைஉடுத்தி, பூரிப்பை முகத்தில் உடுத்தி, பூஞ்சட்டி கொளுத்தி புன்னகையை வெடிக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள.

புத்தாடையில் விடெங்கிலும் தீபமேற்றி விழாக்கோலம் பூணுவதல்ல தீபாவளி மன அழுக்கையெல்லாம் அகற்றி தன்னம்பிக்கை நெய்யிலே மகிழ்ச்சி தீபமேற்றுவதே தீபாவளி

உங்கள் வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாம் கரைந்து போக ஒளிமயமான எதிர்காலம் பிறக்க நினைத்ததை எல்லாம் சாதிக்க இந்த தீபாவளி திருநாளில் மழைச்சியுடன் இனிய வாழ்த்துக்கள்... தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Diwali Quotes Tamil

Diwali Quotes Tamil

என் இனிய தீபாவளியே வா சந்தம் பாடு வண்ணப் பூமாலைதொடு தேன் சிந்தச்சிந்தக் கவிதை கொடு.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இனிப்புகள் பரிமாற! உள்ளங்கள் இடம்மாற. அன்பு கொண்ட இதயங்கள் களிப்பார! கொண்டாடுவோம் தீபாவளியை.. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

புத்தாடை அணிந்து பூரிப்புடன் பூஞ்சட்டி கொளுத்தி புன்னகையுடன் பூக்கட்டும் தீபாவளி

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வண்ண வண்ண வெடிகள் ஆயிரம் விண்ணை முட்டும் விதவிதமாக கண்ணும் கையும் கொட்டும் தீபாவளி.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

என்றென்றும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Diwali Quotes Tamil

இனிப்பைபோல் தங்கள் வாழ்வும் இனித்திட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும் வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி நிறைவான செல்வத்துடன், நோய் நொடி இல்லாமல் நலமுடன் வாழ இத்தீப திருநாளில் வாழ்த்துகிறோம்

தீபங்கள் ஒளி வெள்ளத்தில், மத்தாப்புகளின் சிரிப்பில், இனிப்புகளை பரிமாறி தித்திக்கும் . தீபாவளியை கொண்டாட அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ஒளிகளின் வரிசை தீபாவளியெனில், உன் பார்வையும் தீபாவளிதான்! தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

மகிழ்ச்சி நிலைக்க, செல்வம் குவிய, ஆரோக்கியம் சிறக்க... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க, இன்பங்கள் பொங்க தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புள்ள அண்ணனுக்கு. தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நமது அகவிருள் அகற்றி அறிவொளி வீசிட வந்ததிந்த தீபாவளி.. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

வசந்த இரவின் புதிய விடியல் வண்ணத் தீபாவளியின் ஒளிக் குவியல்.. தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Diwali Quotes Tamil

தீபத்திற்கும் தீபாவளிக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு, தீபம் என்றால் ஒளி விளக்கு, ஆவளி என்றால் வரிசை, வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகை.. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

உதயதீபம் ஏந்தி ஒவ்வொரு நாளும் வரும் கதிரவனுக்கு ஒளி தீபம் ஏந்தி உதயத்தில் வரவேற்போம். தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வைக்கும் ஒவ்வொரு வெடிக்கும் தீமைகள் வெடித்துச் சிதறட்டுமே இன்றுமட்டுமல்ல தினமும் சிதறடித்தால் தீபாவளி எல்லோருக்கும் இனிக்கும்.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

வானமே என்றுமே நீதான் எங்களுக்கு ஒளியையும் ஒலியையும் தருகிறாய் இன்று ஒரு நாளாவது நாங்கள் உனக்கு ஒளியையும் ஒலியையும் தருகிறோம்.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 March 2024 5:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!