/* */

மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் நமது வட கிழக்கு எல்லையில் திபெத் நாடு இருந்தது.

HIGHLIGHTS

மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
X

இந்திய -சீன எல்லை (கோப்பு படம்)

திபெத்துக்கு சீனாவால் ஆபத்து நேரலாம் என்பதால், அவர்கள், இந்தியாவோடு இணைந்து கொள்வதாக கேட்டார்கள். அப்போ நேரு அதனை ஏற்கவில்லை. அது எதிர்பார்த்தபடியே திபெத்தை சீனா ஆக்கிரமித்தபோது, இந்திய ராணுவமும், பாதுகாப்பு அமைச்சகமும், அதை எதிர்க்கச் சொன்னது. அப்போதும் சீனாவை எதிர்க்க வேண்டாம் என்று நேரு மறுத்து விட்டார்.

பின்பு சீனா இந்திய எல்லை ஓரங்களில் சாலை அமைத்து இந்தியாவின் பகுதியையும் தன்னோடு இணைத்துக் கொள்ள திட்டமிட்டது. அதனால் நாமும் இமயமலையின் எல்லையை பாதுகாக்க, நாமும் எல்லைப் புறங்களுக்கு சாலை அமைக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் சொன்னது. ஆனால் சீனா என் நண்பன் என்று அதையும் நேரு மறுத்து விட்டார்.

பின்பு நாம் எதிர்பார்த்தது போலவே சீனா இந்தியாவின் பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்தது. இது உலகுக்கே தெரியும். ஆனால் இந்தியாவில் சிலருக்கு மட்டும் தெரியாது.

பின்பு பெரியளவில் சீனா இந்தியாவை தாக்கிய போது நம் எல்லை பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை குறைவு, ஆயுதம் இல்லாத காரணங்களால் நாம் தோற்று விட்டோம். அப்போது கூட அங்கே புல்பூண்டு கூட முளைக்காது, அதை காப்பாற்றி என்ன செய்யப்போகிறோம் என்பது தான் அப்போதைய அரசு சொன்ன காரணம்.

ஆனால் நாங்கள் உயிரோடு இருக்கும் வரை இந்திய மண்ணை சீனாவிற்கு கொடுக்க மாட்டோம் என்று சொல்லி 120 பேர் கடைசி வரை போராடி, 800 க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்களை கொன்று குவித்தார்கள். 118 பேர் கடைசி வரை போராடி வீர மர அடைந்தார்கள். ஆனால் சீன எல்லையில் இருந்த இந்திய கிராம மக்கள் தான் அவர்களுக்கு உணவு கொடுத்தார்கள். கடைசியில் இந்தியாவிற்கு சொந்தமான 25000 சதுர கிலோ மீட்டர் பரப்பினை சீனா ஆக்கிரமித்தது. அதன் பின்னரும் 60 ஆண்டுகளாக சீனா கொஞ்சம் கொஞ்சமாக இந்திய எல்லையை அரித்துக் கொண்டே இருந்தது.

அதனால் பல இடங்களில் சீனா ஊடுறுவியதே அப்போதைய அரசுகளுக்கு தெரியாது. மோடி பிரதமர் ஆனவுடன், பாதுகாப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார். பாகிஸ்தான் எல்லையில், பங்களாதேஷ் எல்லையில் ஆயிரக்கணக்கான கி.மீ.,கள் வேலி அமைத்து பாதுகாப்பை மேம்படுத்தினார்.

எல்லை முழுவதும் ராணுவம் எப்போதும் பாதுகாத்துக் கொண்டு இருக்க முடியாது. அதனால் எல்லை ஓரங்களில், கிராமங்களை உருவாக்கி, மக்களை குடியமர்த்தி, அவர்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். எல்லையில் இருக்கும் பகுதியில் கூட இந்திய விவசாயிகள் தற்போது விவசாயம் செய்கிறார்கள்.

இன்று நம் எல்லையில் பக்கத்து நாட்டுக்காரன் உள்ளே வந்தால், உடனே நம் இந்திய விவசாயிகள் இந்திய ராணுவத்திற்கு தகவல் கொடுப்பார்கள். நமது ராணுவம் எல்லையையும், மக்களையும், செலவில்லாமல் பாதுகாத்து வருகிறது.

ஆனால், சீனாவால் எல்லையில் எளிதாக அதை செய்ய முடியவில்லை. காரணம் அங்கே செல்வதற்கு பாதைகளே இல்லை. அதனால் பிரதமர் மோடி, முதலில் சீன எல்லையில் இருக்கும் முக்கிய கோயில்களுக்கு சாலைகளை விரிவாக்கினார். 2018 ல் சார்தாம் என்ற ட்ரிப்பில் கேதார்நாத்தில் இருந்து பத்திரிநாத் 229 கிமீ செல்ல 21 மணி நேரம் ஆனது.

இன்று சாலைகளை விரிவாக்கி, அதன் பயண நேரத்தை வெறும் 7 மணி நேரமாக குறைத்துள்ளார் மோடி. அதனால் டூரிஸ்ட்கள் எண்ணிக்கை பல மடங்குகள் உயர்ந்துள்ளது. அதனால் அங்கே இருக்கும் மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்ததால், இப்போது, சீன எல்லைகளில் மக்கள் குடியேறத் துவங்கி இருக்கிறார்கள்.

அதன் மூலம், நமது நாட்டின் எல்லைகளை மக்கள் பாதுகாக்கிறார்கள். அன்று பல நூறு கிமீ சீன ராணுவம் ஆக்கிரமித்தாலும் தெரியாது. இன்று எல்லைக்கு பக்கத்தில் வந்தாலே மக்கள் ராணுவத்திற்கு தகவல் கொடுக்கிறார்கள். அதனால் இப்போது சீன எல்லை பாதுகாப்பனதாக மாறிக்கொண்டுள்ளது.

அதை முழுவதுமாக செய்து முடிக்க இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். நம்மிடம் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் போடும் வரிகளில் தான் அது நடக்கிறது. அதனால் நம்மிடம் வசூலிக்கின்ற வரிகள், நாட்டின் கட்டமைப்புக்கும், பாதுகாப்பிற்கும் செலவிடப்படுகிறது. அந்த பாதுகாப்பு இல்லை என்றால், நேற்று உக்ரைனுக்கு நடந்ததுதான் நாளை நமக்கும் நடக்கும்.

அந்த வருமானம் என்பது CapEx என்று சொல்லப்படுகிற கட்டமைப்பை விரிவாக்க உதவுகிறது. அங்கே மோசமான மலைப்பகுதிகளில் கூட ரோடுகளின் தரம் உலக தரத்தை நோக்கிச் செல்கிறது. அதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதால், அங்கே இருக்கும் மக்களின் வாழ்வாதாரமும், வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. இந்திய அரசாங்கம்.செலவிடும் ரூ.1 க்கு, 4.3 வருடங்களில் ரூ.2.21 வருமானமாக வருகிறது. அதுதான் CapEz இன் மகிமை. .

இந்தியாவின் திட்டங்கள் சரியாகச் .சென்றால், 2047 க்குள் மீண்டும் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், திபெத், ஸ்ரீலங்கா, இந்தியாவுடன் ஒரு யூனியன் பிரதேசமாக இணைய வாய்ப்புகள் பிராகசமாக உள்ளது.

Updated On: 18 April 2024 4:37 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  3. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  4. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  7. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்...
  9. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  10. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு