/* */

76 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பிய ரூ.2000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி தகவல்

2000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

76 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பிய ரூ.2000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி தகவல்
X

பைல் படம்

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அதிக மதிப்புள்ள நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்ததில் இருந்து சுமார் 76 சதவீத ரூ.2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பியுள்ளன.

கடந்த மே 19ம் தேதி வணிகம் முடிவடையும் போது புழக்கத்தில் இருந்த ரூ.2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது.

அறிவிப்புக்குப் பிறகு திரும்பிய ரூ. 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ. 2.72 லட்சம் கோடி என்று வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை மேற்கோள் காட்டி ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் ரூ.0.84 லட்சம் கோடியாக உள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கிய வங்கிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள், புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ. 2000 மதிப்பிலான மொத்த ரூபாய் நோட்டுகளில், சுமார் 87 சதவீதம் டெபாசிட்களாகவும், மீதமுள்ள 13 சதவிகிதம் மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடைசி நேரத்தில் அவசரப்படுவதைத் தவிர்க்க, மக்கள் தங்களின் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்ற அடுத்த மூன்று மாதங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மக்கள் தங்கள் ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கிளைகளிலும், ரிசர்வ் வங்கியின் பிராந்தியக் கிளைகளிலும் மாற்றலாம் அல்லது டெபாசிட் செய்யலாம். கணக்கு வைத்திருக்காதவர் எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளலாம்.

பொதுமக்கள் தங்களின் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்ற செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சூழ்நிலையை பொறுத்து காலக்கெடுவை ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை செய்யலாம்.

Updated On: 3 July 2023 12:34 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...