/* */

2000 ரூபாய் நோட்டு மாற்றுவதில் புதுசிக்கல்

2000ம் ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்வதற்கு எஸ்பிஐ வங்கி உட்பட பல முதன்மையான வங்கிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன.

HIGHLIGHTS

2000 ரூபாய் நோட்டு மாற்றுவதில் புதுசிக்கல்
X

பைல் படம்.

சமீபத்தில் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பி பெறுவதாக அறிவித்தது. அதே நேரம் வாடிக்கையாளர்களின் வசதிக்காக நோட்டுகளை மாற்ற மே 23 முதல் செப்டம்பர் 30, 2023 வரை அவகாசம் அளித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.2,000 நோட்டுகளை ஒரு நாளில் ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ள முடியும். மேலும் உங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்குகளில் டெபாசிட்டும் செய்து கொள்ளலாம். இந்த நிலையில், முதன்மையான வங்கிகள் கணக்கில் மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமுறை பணம் டெபாசிட் செய்தால் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலில் இருந்து வருகிறது.

மே 23-ம் தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை முக்கிய வங்கிகளில் டெபாசிட் செய்வோருக்கும் இந்தக் கட்டணம் விதிப்பு நடைமுறை செயல்பாட்டில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுகளை எத்தனை முறை மாற்றலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்பதற்கு ரிசர்வ் வங்கி எந்த வரம்பும் விதிக்கவில்லை. ஆனால், வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலில் உள்ளன. பல வங்கிகள் நோட்டுக்கள் மாற்றுவதற்கு சேவைக் கட்டணம் வசூலிப்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி எஸ்பிஐ உட்பட மற்ற பெரிய வங்கிகள் டெபாசிட் செய்ய எவ்வளவு கட்டணம் வசூலிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐயில்(ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) ஒரு மாதத்தில் 3 முறை மட்டுமே இலவசமாக பணத்தை டெபாசிட் செய்ய முடியும். இதன் பிறகு ஒவ்வொரு முறை வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்கு 50 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது. வாடிக்கையாளரின் கணக்கில் பணத்தை வரவு வைப்பதற்கும் இதே அளவு கட்டணம் வசூலிக்கப்படும். இயந்திரம் மூலம் பணத்தை டெபாசிட் செய்வதற்கு கட்டணம் இல்லை. டெபிட் கார்டு மூலம் டெபாசிட் செய்ய ரூ.22 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

தனியார் துறையின் மிகப்பெரிய வங்கியான HDFC வங்கியில் ஒவ்வொரு மாதமும் 4 முறை இலவசமாக பணப் பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். நான்கு முறைக்கு கூடுதலாக வங்கிக் கணக்கில் நேரடி பணப் பரிமாற்றம் செய்யும்போது 150 ரூபாய் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இரண்டாவது பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியில் நேரடியாக செய்யும் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு, ஒரு மாதத்தில் 4 முறை இலவச பரிவர்த்தனை செய்ய முடியும். அதன் பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

மற்றொரு தனியார் துறை வங்கியான கோடக் மஹிந்திரா வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 இலவச பரிவர்த்தனைகளை வழங்கி வருகிறது. இதில் வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல் ஆகிய இரண்டும் அடங்கும். இந்த வரம்பை கடந்த பிறகு, ரூ.150 வரி விதிக்கப்படும். வங்கிக் கிளையில் பணத்தை டெபாசிட் செய்தாலும் அல்லது இயந்திரம் மூலம் டெபாசிட் செய்தாலும் இந்தக் கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

Updated On: 25 May 2023 4:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  5. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  6. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  8. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  9. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  10. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்