/* */

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க புதிய கண்டுபிடிப்பு: ஐஐடி மண்டி விஞ்ஞானிகள் சாதனை

இந்த புதிய மூலக்கூறு கணையம் இன்சுலினை வெளியேற்றும் தூண்டும் தன்மை கொண்டது , நீரிழிவு நோய்க்கான மருந்தாக பயன்படுத்தலாம்

HIGHLIGHTS

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க புதிய கண்டுபிடிப்பு: ஐஐடி மண்டி  விஞ்ஞானிகள் சாதனை
X

இமாசலப்பிரதேச மாநிலம் மண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடி-யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், PK2 என்றழைக்கப்படும் மருந்து மூலக்கூறு ஒன்றை அடையாளம் கண்டுள்ளனர். இந்த மூலக்கூறு கணையம் இன்சுலினை வெளியேற்றும் தூண்டும் தன்மை கொண்டது என்பதால் இதனை, நீரிழிவு நோய்க்கான உட்கொள்ளும் வகை மருந்தாக பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பயாலஜிக்கல் கெமிஸ்ட்ரி என்ற இதழில், இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐஐடி மண்டியின் அடிப்படை அறிவியல் பள்ளியின் இணை பேராசிரியர் டாக்டர் ப்ரோசென்ஜித் மண்டல் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியுள்ளார். ஐஐடி மண்டியின் பேராசிரியர் சுப்ரதா கோஷ், புதுதில்லி பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் டாக்டர் சுனில்குமார், புவனேஷ்வரில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் டாக்டர் பூதேஷ்வர் தேஹுரி மற்றும் குவாலியரில் உள்ள மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர் துர்கேஷ் குமார் துவிவேதி உள்ளிட்ட குழுவினர் இந்த ஆராய்ச்சியில் பங்கு வகித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் நோக்கம் குறித்த விளக்கம் அளித்துள்ள டாக்டர் ப்ரோசென்ஜித் மண்டல், நீரிழிவு நோய்க்கு தற்போது பயன்படுத்தப்படும் மருந்துகளான எக்சனடைடு மற்றும் லிராக்லூடைட் போன்றவை ஊசி வடிவில் செலுத்தப்படுவதாக கூறினார். மேலும் இவை அதிக செலவை ஏற்படுத்துவதோடு நிலையற்றதாக உள்ளது என்றும் தெரிவித்தார். அதே வேளையில் தாங்கள் கண்டுபிடித்துள்ள புதிய வகை மருந்து குறைந்த செலவில் நிலையானதாகவும், வகை-1 மற்றும் வகை -2 நீரிழிவு நோய்களையும் குணப்படுத்தும் வலுவான திறன் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Updated On: 4 May 2022 11:55 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  3. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  8. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  9. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்