/* */

டெல்லி தேர்தல் ஆணையத்தின் கதவை தட்டும் திமுக வழக்கறிஞர்கள் டீம்

டெல்லி தேர்தல் ஆணையத்தின் கதவை திமுக வழக்கறிஞர்கள் டீம் தட்ட உள்ளது.

HIGHLIGHTS

டெல்லி தேர்தல் ஆணையத்தின் கதவை தட்டும் திமுக வழக்கறிஞர்கள் டீம்
X

லோக்சபா தேர்தல் தொடர்பாக இரண்டு முக்கியமான புகார்களை தேர்தல் ஆணையத்திடம் திமுக கொடுத்துள்ளது.

லோக்சபா தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்று மட்டுமே தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய முடியும் என்றிருந்த நிலையும் இன்று மாலை ௬ மணியுடன் முடிவடைந்து விட்டது. இதனால் கடைசி கட்ட பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து முடிந்து விட்டன. .

திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும், அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் விதிமுறைகளை பாஜக, அதிமுக கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் யார் மீறினாலும், அவர்களுக்கு எதிராக உடனே தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் முறையிடவும் செய்யலாம் என்று தேர்தல் அறிவிப்பு வந்த சில நாளில் திமுக முடிவு எடுத்திருந்தது. இதனால் திமுகவின் வார் ரூம் வழக்கறிஞர்கள், இந்த தேர்தலில் எதிர்க்கட்சியினரின் விதி மீறல்களை கண்கொத்திப் பாம்பாக கவனித்தனர். அந்த வகையில் பிரச்சாரங்களில் குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது. மதத்தின் பெயரால் வாக்கு சேகரிக்ககூடாது என்பது சில முக்கிய விதிகள்.

இந்த நிலையில், கோவையில் மோடி கலந்துகொண்ட வாகன பேரணி பிரச்சாரத்தில் பள்ளிச் சீருடை அணிந்த சிறுவர்-சிறுமிகள் பயன்படுத்தப்பட்டதை வைத்து மோடிக்கு எதிராகவும், தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், ஹிந்துகளை அழிப்பேன் என்று சொல்பவர்களுக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும் ? என்றெல்லாம் பேசியதால் நிர்மலாவுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் தெரிவித்தது.

இந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தேர்தல் ஆணையத்தில் திமுக வழக்கறிஞர்கள் விசாரித்திருக்கிறார்கள். தேர்தல் அதிகாரிகளோ, ''இந்த புகாரை தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை '' என்று சொல்லியிருக்கிறார்கள். டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் திமுக தரப்பில் விசாரித்த போது, அப்படி எந்த புகார் கடிதமும் எங்களுக்கு ஃபார்வேர்ட் செய்யப்படவில்லை'' என்றார்களாம். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளது வார் ரூம். இது தொடர்பாக அவர்கள் டெல்லி தேர்தல் ஆணையத்தின் கதவை தட்ட உள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, சென்னையில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ராஜ்பவனில் தங்கினார். அரசு பதவிகளில் இருப்பவர்கள் அரசு பங்களாக்களைப் பயன்படு த்தக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டி, ராஜ்பவனில் மோடி எப்படி தங்கலாம்? விதிமீறலுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ? என்கிற ரீதியில் சர்ச்சையை கிளப்பிய திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார்.

இதற்கிடையே, நாட்டிலேயே உயர்ந்தபட்ச பாதுகாப்பு பிரிவில் உள்ளவர் பிரதமர். இந்த பாதுகாப்பில் இருப்பவர்கள் தேர்தல் காலத்தில் அரசு பங்களாவில் தங்கலாம். அப்படித் தங்குவதற்கு விதிகள் அனுமதிக்கிறது. அதனால் மீதி மீறல் ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையத்திலிருந்து திமுகவுக்கு ஓரலாக சொல்லப்பட்டிருக்கிறதாம்.

Updated On: 17 April 2024 9:35 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  5. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  9. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  10. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...