/* */

self confidence tamil motivational article- வெற்றி என்பது இலக்கு அல்ல.... ஒரு பயணம்.... முயற்சியை கைவிடாதீங்க..... கைவிடாதீங்க.....

self confidence tamil motivational article- வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. வீழ்வதற்கு அல்ல. எனவே, ஒவ்வொரு செயலிலும் நம்முடைய தொடர் முயற்சி இருந்தால் தான் வெற்றிக்கனி கிட்டும்.

HIGHLIGHTS

self confidence tamil motivational article-  வெற்றி என்பது இலக்கு அல்ல.... ஒரு பயணம்....  முயற்சியை கைவிடாதீங்க..... கைவிடாதீங்க.....
X

தன்னம்பிக்கை கட்டுரை (கோப்பு படம்)

self confidence tamil motivational article

"அடிக்கடி மட்டுமல்ல அதிகமாக சிரிப்பதற்கும், அறிவார்ந்த மக்களின் மரியாதையை பெறுவதற்கும், குழந்தைகளின் அன்பைப்பெறவும் தனித்திறன் வேண்டும். அழகைப் பாராட்ட, மற்றவர்களிடம் சிறந்ததைக் கண்டறிய, கொஞ்சம் நன்றாக ஆரோக்யமாக வாழ்ந்து உலகத்தை விட்டு நிம்மதியாக வெளியேற ஒரு குழந்தையிடம் அன்பைக்காட்டத் தெரியவேண்டும். குழந்தையை ரசிக்கத்தெரிய வேண்டும். அல்லது ஒரு தோட்டம் செய்வதில் ஈடுபாடு இருக்கவேண்டும். ஒரு பறவையை, விலங்கை, இயற்கையை ரசிக்கத்தெரிய வேண்டும். அப்படி இருந்து மகிழ்ச்சியோடு நீங்கள் வாழ்ந்தால், அதுவே உங்களுக்கான வெற்றிகரமான வாழ்க்கை" என்கிறார் ரால்ப் வால்டோ எமர்சன் என்ற அறிஞர்.

இதன் மூலம் வெறும் கல்வி மட்டுமே வெற்றியை அடைய வழி வகுக்காது. அதைத் தாண்டி ஏதோ ஒன்றில் நமது ஈடுபாடு இருந்தால் மட்டுமே வெற்றி இலக்கை அடைய முடியும் என்கிறார் அந்த அறிஞர். அதுவே நமது தனித்திறனாக மிளிர்கிறது.

நம் வாழ்க்கையில் பெறும்வெற்றிகள் அனைத்தும் இலக்கோடு நின்றுவிடாது...அது நாம் வாழும் வரை தொடரக்கூடியதாகவே இருக்கும்...அதுவே இந்த தலைப்புதமிழ் சினிமாவில் ஒரு பாட்டு வரும் அனைவரும் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்...

''வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்....சர்தான் போடா என்பது பெருங்கூச்சல்'' என்ற வரியில் ஆரம்பிக்கும். அந்த வகையில் நமக்கு வெற்றி வேண்டுமென்றால் நாம் எதிர்நீச்சல் அடித்துதான் ஆக வேண்டும். வெற்றிக்கனி என்பது சாதாரணமாக எல்லோரும் சுவைத்துவிடக்கூடியது அல்ல. நாம் பல முறை சொல்லியது போல் போராடி ஜெயிச்சாம்பா...ன்னு கேள்விப்பட்டிருப்போம்..அதுபோல் போராடினால்தான் வெற்றி கிடைக்கும் என்பதில் நீங்கள் அனைவரும் உறுதியாக இருங்க...

வெற்றிக்கு போராடுவதற்கு நாம் நம்முடைய வாழ்க்கையில் இருந்தே பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம். எடுத்துக்காட்டாக ஒரு மாணவன் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார் என்றால் அந்த வெற்றி வருடம் முழுக்க கஷ்டப்பட்டு படித்ததினால் வந்த வெற்றி. இருப்பதிலேயே கல்வியில்பெறும் வெற்றி நாம் வாழ்வோடு என்றும் வருவது.அரசியல், அலுவலக பதவி வெற்றி என்பது எல்லாம் நிலையானது அல்ல. காலப்போக்கில் காணாமல் போய்விடும்.. அல்லது பதவி போனால் அது மறைந்துவிடும். ஆனால் கற்ற கல்வியில் நாம் பெறும் மதிப்பெண்கள் நாம் இவ்வுலகில் வாழும் வரைநம் கூடவே இருக்கும். நீங்கள் கூட பல ஆட்டோக்களில் பார்த்திருப்பீர்கள் ஒரு வாசகம் அருமையான வாசகம் எழுதி வைத்திருக்கின்றனர்.

self confidence tamil motivational article


நம் இலக்கினை அடைய வேண்டுமானால் நாம் அந்தரத்தில் தொங்கும் நிலைமைகூட வரும் (கோப்பு படம்)

self confidence tamil motivational article

'' பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது''

நிச்சயம் இது நுாற்றில் ஒரு வார்த்தைதாங்க. யார் உங்களைக் கைவிட்டாலும் நீங்கள் கற்ற கல்வி உங்களைக் கைவிடாது. அந்த தகுதியை வைத்து நீங்கள் எப்படியாவது பிழைத்துக்கொள்ளலாம் என்பதே அதன் அர்த்தம்.

அதேபோல் அரசியலில் தேர்தலில் நின்று ஜெயிப்பது என்பது சாதாரணமானது அல்ல. அதிகமான களப்பணி செய்யாமல் ஜெயித்துவிட முடியாது. உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் பணத்தால் ஜெயித்துவிட முடியாது. முகதரிசனம் வேண்டும்.. அதற்காக நீங்கள் உழைத்தாகவேண்டும். அப்போதுதான் வெற்றிக்கனியானது உங்கள் காலடியில். இல்லாவிட்டால் அதற்கு எதிர்மறையான விளைவுகள் தான்.

ஒண்ணு மட்டும் தெரியுங்களா... இப்போதுதான் நாம் தலைப்புக்கே வருகிறோம். வெற்றி என்பது இலக்கு அல்ல.. அது ஒரு பயணம். இது உண்மைதாங்க.. ஒரு வீடு கட்டுவது உங்கள் இலக்கு என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த வீட்டினைக் கட்டி முடித்துவிட்டால் அதோடு நின்றுவிடுகிறோமா? .. வேறு இடத்தில் வீடு நல்லவிலைக்கு வந்தால் வாங்காமல் விட்டுவிடுகிறோமா? அதுபோல் இந்த வெற்றி என்பது நம் வாழ்வில் ஒரு பயணமே. அதேபோல் இன்று எத்தனையோ பேர் ஐடி துறையில் வேலை பார்த்து வருகின்றனர்.

self confidence tamil motivational article


இலக்கினை அடையும் வரை உங்கள் முயற்சிகள் நீங்கள் எப்போதும் பின் வாங்கக் கூடாது (கோப்பு படம்)

self confidence tamil motivational article

பி.இ முடித்து கேம்பஸில் செலக்ட் ஆகி முதல் கம்பெனியிலேயே இருப்பவர்கள் எத்தனை பேர்? குறைச்சலாகத்தான் இருப்பார்கள். பலர் அவர்களுக்கு அனுபவங்கள் கிடைக்க கிடைக்க வேறு கம்பெனிகளுக்கு தாவிக்கொண்டே உள்ளனர் கூடுதல் சம்பளத்தோடு...இதுதாங்க வெற்றி பயணம்..

வாழ்க்கையில் நாம் வாழும் வரை எந்த விஷயமானாலும் சரி முயற்சி செய்யாமல் வெற்றி இல்லைங்க.. முயற்சி செய்துகொண்டேயிருந்தால் ஒரு நாள் அந்த வெற்றியானது நம்மைத் தேடி வரும்.. ஒரு தடவை முயற்சித்துவிட்டு போதும்டா.. எதற்கு இதற்கு ட்ரை செய்வது எனவிட்டுவிட்டால் வெற்றி எப்படி கிடைக்கும்-? யோசித்து பாருங்க...முயற்சியை எந்த நேரத்திலும் நாம் கைவிட்டு விடக்கூடாது.

self confidence tamil motivational article


வெற்றிக் கோட்டினைத் தொட நாம் நீண்ட துாரம் பயணம் செய்ய வேண்டும் என்பதை விளக்கும் படம் (கோப்பு படம்)

self confidence tamil motivational article

பள்ளி,கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு:

நீங்கள் எந்த வகுப்பில் படிப்பவராக இருந்தாலும் சரி அன்றைய பாடங்களை அன்றே படித்து முடித்துவிடுங்க. காரணம் இன்று உங்களை திசை திருப்ப பல தொழில்நுட்ப காரணிகள் வந்துள்ளன. அதில் கவனத்தினைச் செலுத்தாமல் உங்கள் பாடத்தில் அதிக கவனத்தைச் செலுத்துங்கள். வெற்றி என்பது தொடர் முயற்சிகளால் மட்டுமே நமக்கு கிடைக்கும். பள்ளிவாழ்க்கை முடித்து விட்டால் கல்லுாரி வாழ்க்கை முடித்துவிட்டால் வேலை என உங்கள் வெற்றிகள் உங்கள் வாழ்க்கையில் எப்போதுமே நின்று விடாது. நீங்கள் இந்த உலகில் இருக்கும் வரை இந்த வெற்றியானது தொடர்பயணமாக உங்களுடன் வர வாழ்த்துகள்... எனவே வெற்றிக்கனியை பறிக்க முயற்சி செய்து கொண்டேயிருக்க வேண்டும்..

''வெற்றி வேண்டுமா? போட்டு பாரடா எதிர்நீச்சல்''

வெற்றியும் , முயற்சியும் தொடர் பயணம்தான் வாழ்க்கையில்....

(இன்னும் வளரும்...)

Updated On: 25 Nov 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  2. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  3. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  6. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  7. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  10. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!