/* */

சர்க்கரை நோயாளியும் இனிப்பு சாப்பிடலாம்: இனிப்புக்கு மாற்று வழி

இந்த காலத்துல சர்க்கரை நோய் இல்லாதவர்களே குறைவு. சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக வந்ததுதான் இனிப்பு துளசி.

HIGHLIGHTS

சர்க்கரை நோயாளியும் இனிப்பு சாப்பிடலாம்: இனிப்புக்கு மாற்று வழி
X

இனிப்பு துளசி. (படஉதவி  விக்கிபீடியா )

தமிழ்நாட்டில் பொதுவாகவே பெரும்பாலான வீடுகளில் துளசி வளர்த்து வருகிறார்கள். ஆனால் என்ன வகை துளசி என்பதுதான் நாம் பார்க்கவேண்டி உள்ளது. சர்க்கரை நோய்க்கு நாம் சொல்வது இனிப்பு துளசி. இந்த இனிப்பு துளசி உடலுக்கு மிகவும் நல்லது. இதில் இருக்கும் இலைகள், தண்டுகள், சர்க்கரை போன்று இனிப்பாக இருக்கும். இதில் கலோரீஸ் எதுவும் கிடையாது. இதனால் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த இது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இனிப்பு துளசியில் இருந்து மாத்திரைகள் செய்யப்படுகின்றன. எண்ணெய் எடுக்கப்படுகிறது.

இந்த இனிப்பு துளசியை காய வைத்து பொடியாகவும், பச்சை இலையாகவும் பயன்படுத்தலாம். இந்த பொடி காபி, டீ மற்றும் சோடாக்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இனிப்பு துளசி இலையில் உள்ள இனிப்பு இயற்கை குணமுடையது. இந்த இனிப்பால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. இந்த இலை வயிற்றுப் போக்கு மற்றும் சிறு வியாதிகளை குணபடுத்துகிறது.

அதுக்கு பதில் இது

தினசரி நம்ம உணவு முறையில் சர்க்கரையை முக்கிய பொருளாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால், கரும்புச்சர்க்கரையில் அதிகமான கலோரிகள் இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கரும்பு சர்க்கரையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தற்போது அவர்கள் கரும்பு சர்க்கரைக்கு பதிலாக இனிப்பு துளசி இலையை பயன்படுத்திக்கொள்ளும் நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது.

இனிப்பு துளசிக்கு இயற்கையாகவே இனிப்பு தன்மை இருக்கு. இது கலோரிகளை உருவாக்குவதில்லை. ஆகவே, இதனை கரும்பு சர்க்கரைக்கு பதிலாகவும், மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாகவும் பயன்படுத்தலாம். இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

ஒப்பீடு

இனிப்புத்துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு மற்றும் ரெபடையோசைடு எனும் வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இனிப்புத் துளசியின் இலைகளில் உள்ள இனிப்பின் அளவை கரும்பு சர்க்கரையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கரும்பை விட 30 சதவீதம் அதிக இனிப்பு கொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இனிமே சர்க்கரை நோயாளிகளும் இனிப்பை வெளுத்து கட்டலாம்னு சொல்லுங்க.

Updated On: 13 Oct 2021 7:11 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!