பெண்களின் எந்த பிரச்னைக்கு ஸ்ட்ரோன் எஸ்ஆர் 200 மாத்திரை பயனாகிறது..? தெரிஞ்சுக்கங்க..!

strone 200 tablet uses in tamil-ஸ்ட்ரோன் எஸ்ஆர் 200 மாத்திரை (Strone SR 200 Tablet) மாதவிடாய் மற்றும் கர்ப்ப கோளாறுகளுக்கு இந்த மாத்திரை பயனாகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெண்களின் எந்த பிரச்னைக்கு ஸ்ட்ரோன் எஸ்ஆர் 200 மாத்திரை பயனாகிறது..? தெரிஞ்சுக்கங்க..!
X

strone 200 tablet uses in tamil-மாத்திரைகள் கார்ட்டூன் படம்.

ஸ்ட்ரோன் எஸ்ஆர் 200 மாத்திரை பொதுப்பண்புகளின் விளக்கங்கள் :

ஸ்ட்ரோன் எஸ்ஆர் 200 மாத்திரை (Strone SR 200 Tablet) என்பது இயற்கையான பெண் பாலின ஹார்மோன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகும். இது ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் மாதவிடாய் மற்றும் கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

ஸ்ட்ரோன் எஸ்ஆர் 200 மாத்திரை என்டோமெட்ரியல் ஹைப்பர் பிளேசியாவை (கருப்பையின் புறணி தடித்தல்) தடுப்பதற்கான ஹார்மோன் மாற்று சிகிச்சையின் ஒரு பகுதியாக ஈஸ்ட்ரோஜனுடன் சேர்த்து பரிந்துரைக்கப்படுகிறது. இது உணவுடன் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதிக பலனைப் பெற ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை நன்றாக உணர்ந்தாலும் மருத்துவர் பரிந்துரைத்த காலம் வரை தொடர வேண்டும்.

பொதுவான பக்க விளைவுகளில் வயிற்று வீக்கம், வயிற்று வலி, தலைச்சுற்றல், தலைவலி, மனச்சோர்வு, மார்பக மென்மை, உடல் சிவத்தல், யோனி வெளியேற்றம், மூட்டு வலி மற்றும் சிறுநீர் அடங்காமை ஆகிய விளைவுகள் ஏற்படலாம். முதல் சில வாரங்களில் பக்க விளைவுகள் மிகவும் பொதுவானவையாக இருக்கும். உடல் மருந்துக்கு பழகும்போது பக்கவிளைவுகள் பொதுவாகவே குறையும். மாதவிடாய்க்கு இடையில் இரத்தப்போக்கு அல்லது அவ்வப்போது சிறிது ரத்தப்போக்கை எதிர்கொள்ளலாம். இது அடிக்கடி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

இந்த மருந்தை எடுத்துக்கொள்வதற்கு முன் மார்பக புற்றுநோய், பிறப்புறுப்பில் அசாதாரண இரத்தப்போக்கு, கல்லீரல் நோய் இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும். உங்கள் கர்ப்பப்பையை பரிசோதிக்க சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பல சோதனைகள் இருக்கலாம். உட்கொள்ளும் மற்ற மருந்துகளையும் மருத்துவரிடம் சொல்லுங்கள். ஏனெனில் ஏற்கனவே உட்கொள்ளும் மருந்து, இந்த மருந்துடன் இடைவினை புரிந்து பாதிப்பை ஏற்படுத்தலாம். பொதுவாக, மது மற்றும் புகைபிடிப்பதை தவிர்ப்பது நல்லது.

ஸ்ட்ரோன் எஸ்ஆர் 200 மாத்திரைக்கான பயன்கள்

பெண் மலட்டுத்தன்மை (கருவுற இயலாமை)

ஹார்மோன் மாற்றீட்டு சிகிச்சை (HRT)

ஸ்ட்ரோன் எஸ்ஆர் 200 மாத்திரையின் பக்க விளைவுகள்

பெரும்பாலான பக்கவிளைவுகளும் மருத்துவ கண்காணிப்புத் தேவையில்லை. உடல் மருந்துக்கு பழகிப்போகும். ஒருவேளை பக்கவிளைவுகள் தொடர்ந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

பொதுவான பகைவிளைவுகள்

 • களைப்பு
 • தூக்க கலக்கம்
 • தலைவலி
 • வயிற்றில் வலி

ஸ்ட்ரோன் எஸ்ஆர் 200 மாத்திரையை எப்படி உபயோகிப்பது

 • மருத்துவர் பரிந்துரைத்த மருந்தளவு மற்றும் கால இடைவெளியில் மாத்திரையை எடுத்துக்கொள்ளவும். அதை முழுதுமாக விழுங்கவும். அதை சுவைக்கவோ, நொறுக்கவோ,உடைக்கவோ கூடாது.
 • ஸ்ட்ரோன் எஸ்ஆர் 200 மாத்திரைஉணவுடன் உட்கொள்வது மிகச்சிறந்தது.

ஸ்ட்ரோன் எஸ்ஆர் 200 மாத்திரை எப்படி செயல்படுகிறது

ப்ராகெஸ்ட்ரான் என்பது ப்ராகெஸ்டின்கள் (பெண் ஹார்மோன்கள்) என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்ந்தது. கருப்பையில் ஈஸ்ட்ரோஜன் அளவுகளைக் குறைப்பதன் மூலம் மற்றும் ப்ராகெஸ்ட்ரான் இல்லாத பெண்களில் இயற்கையாக உற்பத்தி செய்து ஈடு செய்வதன் மூலம் மாதவிடாயைக் கொண்டு வருவதற்கான ஹார்மோன் மாற்றீடு சிகிச்சையின் ஒரு பகுதியாக பயன்படுத்தபடுகிறது.

எச்சரிக்கைகள்

மது குடித்துவிட்டு பயன்படுத்த மருத்துவ ஆலோசனை தேவை.

கர்ப்பகாலம்

ஸ்ட்ரோன் எஸ்ஆர் 200 மாத்திரை கற்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது.

பால் புகட்டுதல்

ஸ்ட்ரோன் எஸ்ஆர் 200 மாத்திரை தாய்பாலூட்டும் போது பாதுகாப்பானது. மருந்து தாய்ப்பாலுக்குள் குறிப்பிடத்தக்க அளவு புகுவதில்லை. குழந்தைக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்துவது இல்லை என்று ஆய்வில் தெரியவனதுள்ளது.

வாகனம் ஓட்டுவது பாதுகாப்பற்றது

ஸ்ட்ரோன் எஸ்ஆர் 200 மாத்திரை எடுத்துக்கொள்ளும் போது தலைச்சுற்றலாம், தூக்கம் வருவது போல உணரலாம், களைப்பாக உணரலாம். ஆகவே வாகனம் ஓட்டக்கூடாது.

சிறுநீரகம்/கல்லீரல்

சிறுநீரக பாதிப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பு உடையவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மருந்தை பயன்படுத்தக்கூடாது.

ஒரு டோஸ் தவறினால்

ஒரு டோஸ் தவறவிட்டால் விரைவாக எடுத்துக்கொள்ள முயற்சிக்கவும். ஆனால் அடுத்த டோஸுக்கான நேரம் வந்துவிட்டால், டோஸை இரட்டிப்பாக்கவேண்டாம்.

பொதுவான எச்சரிக்கை

எந்த மருந்தாக இருப்பினும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உட்கொள்வது பாதுகாப்பற்றது.

Updated On: 13 Aug 2022 11:08 AM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  ellu urundai benefits எள் உருண்டையில் எவ்வளவு சத்துகள் உள்ளது என்பது...
 2. சினிமா
  Taapsee Pannu In US-அமெரிக்க வீதிகளில் சுற்றி திரியும் டாப்ஸி
 3. சினிமா
  காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படம் எப்படி இருக்கு?
 4. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாள் விழா...
 5. சோழவந்தான்
  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய பூக்குழி விழா: திரளான பக்தர்கள்...
 6. சினிமா
  Madhavan birthday celebration special today- இன்று பிறந்த நாள்...
 7. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் ஊடுபயிருக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கும்...
 8. நாமக்கல்
  பெங்களூருவில் இருந்து நாமக்கல் வந்த விவிபேட் எந்திரங்கள்: கலெக்டர்...
 9. நாமக்கல்
  மாயமான இரு மகள்களை மீட்டுத்தரும்படி பெற்றோர் போலீஸ் எஸ்பியிடம் மனு
 10. லைஃப்ஸ்டைல்
  ennai kathirikai kulambu in tamil ஆஹா...சுவையோ...சுவை... சுவை சூடான...