ஹலோ, ஐஸ் வாட்டர் குடிக்கிறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க!

கத்தரி வெயில் வாட்டும் நிலையில், தாகம் தணிக்க குளிர்ந்த நீரையே பலரும் நாடுகிறோம். இது உடலுக்கு நல்லதா? அல்லது ஏதேனும் பிரச்சனை வருமா? இதோ...

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஹலோ, ஐஸ் வாட்டர் குடிக்கிறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க!
X

அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் வாட்டி வதைக்கிறது. கடும் வெயிலால், உடலின் நீர்த்தேவை அதிகரிக்கும்; அதை சரிகட்ட, தாகம் எடுக்கிறது. எனவே, கோடையில் நாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், நீர்க்கடுப்பு, கல்லடைப்பு, சிறுநீரகக் கோளாறு போன்ற சிக்கல் ஏற்படலாம்.

வெயில் காலத்தில் ஏற்படும் தண்ணீர் தாகம் வித்தியாசமானது; எவ்வள்வு தண்ணீர் குடித்தாலும், இன்னமும் குடித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும் என்று தோன்றும். இதை சமாளிக்க நாம் கையாளும் எளிய ஒருவழிதான், குளிர்ந்த நீரை பருகுவது.

கோடைகாலத்தில் நம்மில் பலரும் தண்ணீர் தாகத்தை தணிக்க பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை குடிக்கிறோம். இது உண்மையில் தாகத்தை தணிப்பது போல் தோன்றினாலும், உடலுக்கு உகந்தது தானா?

குளிர்ந்த சில் தண்ணீர் குடித்தால், உடலுக்கு பெரியளவில் பிரச்சனை இல்லை; ஐஸ்க்ரீம், செயற்கைக் குளிர்பானங்கள் வேண்டுமானால் பாதிப்பை உண்டாக்கலாம் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர்களின் கூற்றின்படி, குளிர்ந்த நீரால் பெரியளவில் பிரச்சனை வர வாய்ப்பில்லை. அதே நேரம், குளிர்ந்த நீரை தரும் ஃப்ரிட்ஜ் சுத்தமாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். பிரிட்ஜை திறந்தாலே கம்ப்ஸ் அடிக்கும் என்றால், அங்கு சுகாதாரம் என்பது எந்தளவுக்கு இருக்கும் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். சுகாதாரமாக இல்லாத பிரிட்ஜில் வைக்கப்பட்டுள்ள குளிர்ந்த நீரும் சுதாரக்கேடு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

உடல் உஷ்ணமான நேரத்தில், ஐஸ் வாட்டர் குடித்து உடல் வெப்பநிலையைக் குறைத்தால் மீண்டும் சமநிலைப்படுத்த, உடலானது தன ஒட்டுமொத்த ஆற்றலையும் வெளிப்படுத்தும். இதனால் மற்ற செயல்கள் குறிப்பாக செரிமான வேலைகள் தடைபடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒருசிலருக்கு, குளிர்ச்சியாக ஃபிரிட்ஜில் இருந்து தண்ணீரை அப்படியே குடிப்பதால் தொண்டை வலி, கரகரப்பு, வீக்கம் உண்டாகும். சளித்தொல்லை அல்லது மூக்கடைப்பு ஏற்படலாம். குளிர்ந்த நீரைக் குடித்த பின்னர், ஒரு சிலருக்கு தலைவலி வருவதுண்டு. குளிர்ந்த நீரைக் குடிக்கும்போது, அந்த நீர் உணர்திறன் நரம்புகளை குளிர்விக்கும். இது தலைவலியை ஏற்படுத்துகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.


குளிர்ந்த நீர் பருகுவதால் உடலில் பெரிய பாதிப்பு இல்லையென்றாலும், நமது உடல் அதற்கு ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்க்க வேண்டும். எனவே, கோடை காலத்தில் கட்டாயம் குளிர்ந்த நீர் தான் குடிக்க வேண்டுமென்று நினைப்பவர் நீங்கள் என்றால், பாரம்பரியமான பக்க விளைவுகள் இல்லாத இயற்கை முறையான, மண்பானை தண்ணீரைக் குடிப்பது நல்லது. வெட்டி வேர் போன்றவற்றை அதில் போட்டு வைத்து அந்த தண்ணீரை பருகுவது, உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

அடபோங்கப்பா, என்னால் கூலிங் வாட்டர் குடிக்காமல் இருக்க முடியாது என்ற ரகம் நீங்கள் என்றால், கொஞ்சம் ஐஸ் வாட்டருடன் சாதாரண குடிநீரை கலந்து குடிக்கலாம். தாகமும் தணியும், உடலுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.

Updated On: 6 May 2022 1:08 PM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  presentation cephalic meaning in tamil குழந்தையின் தலையை இயற்கையாக...
 2. இந்தியா
  சத்தியம், சிவம், சுந்தரம்! ராகுல்காந்தி சிறப்பு கட்டுரை..!
 3. இந்தியா
  சுத்தமா? கிலோ எவ்வளவு? : 48 மணி நேரத்தில் 31 பேர் இறந்த மகாராஷ்டிரா...
 4. லைஃப்ஸ்டைல்
  health quotes in tamil சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்:...
 5. சோழவந்தான்
  கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு: தலைவர் மீது புகார்.
 6. ஆன்மீகம்
  nainamalai temple சிவபெருமானின் முக்கிய தலமாக விளங்கும் நைனாமலைக்...
 7. தமிழ்நாடு
  மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள்: தெற்கு ரயில்வே முடிவு
 8. இந்தியா
  மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நலக்குழு: வழிகாட்டுதல்களை வெளியிட்டது...
 9. இந்தியா
  சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
 10. தமிழ்நாடு
  இணையதள சேவை பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள்...