/* */

சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி தெரியுமா? உணவு பாதுகாப்பு அலுவலரின் விளக்கம் இதோ..

சமையலுக்கு பயன்படுத்தப்படும் சீரகத்திலும், சீரகப் பொடியிலும் உள்ள கலப்படத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி தெரியுமா? உணவு பாதுகாப்பு அலுவலரின் விளக்கம் இதோ..
X

சீரகம். (மாதிரி படம்).

நாம் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் சீரகத்தில் பல்வேறு சத்துக்கள், மருத்துவக் குணங்கள் அடங்கி உள்ளன. மேலும், அவற்றில் சிலர் கலப்படம் செய்து விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:

பூக்கள் வகையைச் சார்ந்த சீரகமானது, கருஞ்சீரகம், சீரகம் மற்றும் அவற்றின் பொடிகள் ஆகிய நான்கு வகைகளில் FSSAI தரங்களை நிர்ணயத்துள்ளது. சீரகப்பொடியில் ‘ஆவியாகாத ஈதர்’ 15 சதவீதத்திற்கு குறையாமலும், கருஞ்சீரகப் பொடியில் ‘ஆவியாகாத ஈதர்’ 12 சதவீதத்திற்கு குறையாமலும் என்று FSSAI வரையறுத்துள்ளது.


நூறு கிராம் சீரகத்தில் 375 Kcal எரிசக்தியும், மொத்த கொழுப்பு 22 கி, அதில் மோனோ-அன்சேச்சுரேடேட் ஃபேட்டி ஆசிட் 14 கி மற்றும் பாலி-அன்சேச்சுரேடேட் ஃபேட்டி ஆசிட் 3 கி என்ற அளவில் உள்ளது. மொத்த கார்போஹைட்ரேட் 44 கி, அதில், நார்ச்சத்து 10 கி, புரதம் 17 கிராம் என்ற அளவிலும் உள்ளது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் “ஃப்ரீ ரேடிக்கல்ஸ்” என்ற காரணிகளை மட்டுப்படுத்தும் ஆற்றல் சீரகத்தில் உள்ள ‘ஃப்ளாவினாய்ட்ஸ்-க்கு’ உண்டு.

சீரகம் உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது. கருஞ்சீரகம் ‘அல்சர்’ என்று பொதுவாக சொல்லக்கூடிய வயிற்றுப் புண் வராமல் தடுக்கின்றது. சீரகம் கலந்த ஆயுர்வேத மருந்து மூலம் மனிதர்களிடத்தில் மேற்கொண்ட ஆய்வில், சீரகம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சீரகம் நீரிழிவு நோய் சார்ந்த இதர வளர்சிதை மாற்ற நோய்களைத் (Metabolic Disorders) தணிப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சீரகத்திற்கு ‘ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி’ குணமும் உள்ளது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பினைக் குறைக்கும் ஆற்றல் சீரகத்திற்கு இருப்பதால், இது ஒரு சிறந்த இதய பாதுகாவலன். கருஞ்சீரகம் நுரையீரல் பாதிப்பைத் தடுக்கின்றது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றது. கருஞ்சீரகம் வயிற்றுப்புற்று நோயைத் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும், நினைவாற்றலை அதிகரிப்பதாகவும் சோதனைச்சாலை எலிகளிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு சுமார் 3 கிராம் அளவில் சீரகப்பொடி சேர்த்து வந்தால், கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் (lipid metabolism) முன்னேற்றம் ஏற்பட்டு, உடல் எடையை குறைய வாய்ப்புள்ளது.

சீரகத்தில் கலக்கப்படும் கலப்படப் பொருட்கள்:

சீரகத்தில் புல் விதை, மண், மரத்தூள், செயற்கை நிறமி ஆகியவைகளும், சீரகப்பொடியில் கரித்தூள், கல் தூள் (stone powder), புல் (பொடியாக) ஆகியவையும் கலப்படம் செய்யப்படுகிறது.

ஒரு கண்ணாடி டம்பளரில் முக்கால் பாகம் தண்ணீர் எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் சீரகத்தினை அதில் போட்டால், புல் விதையும், கரித்தூளும் மிதக்கும். ஆனால், உண்மையான சீரகம் டம்பளரின் அடிப்பாகத்தில் தேங்கும். கொஞ்சம் சீரகத்தினை உள்ளங்கையில் வைத்து, அழுத்தி தேய்த்தால், நிறமி கலந்த சீரகம் எனில், உள்ளங்கையின் நிறம் ஒட்டும். ஆனால், தூய்மையான சீரகம் எனில், அவ்வாறு நிறம் ஏதும் ஒட்டாது.

பல்வேறு நற்பலன்களைக் கொண்டுள்ள சீரகத்தினை, தினமும் சீரான அளவில் எடுத்துக்கொண்டு, சீரான உடல் நலத்துடன், சிறப்பாக வாழலாம் என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 March 2023 1:54 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!