/* */

முதுமை என்பது சாபம் அல்ல, வரம்

இப்போதெல்லாம், 50 வயதை கடந்து விட்டாலே, முதுமையடைந்து விட்டதாக, பலரும் கவலைப்பட துவங்கி விடுகின்றனர். ஆனால், உடல் ஆரோக்கியம், மன நலனில் அக்கறையுடன் செயல்பட்டால், முதுமையை கூட வரமாக மாற்றிக்கொள்ள முடியும்.

HIGHLIGHTS

முதுமை என்பது சாபம் அல்ல, வரம்
X

முதுமை என்பது வரம்

முதியவர்கள் பெரும்பாலும் பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல் மற்றும் ஞாபக மறதியால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் மக்கள் தொகையில், முதியோர் எண்ணிக்கை 10 சதவீதம். இந்தியாவில் மட்டும் 8 சதவீதம் முதியோர்கள் உள்ளனர்.

வயதான காரணத்தால் பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம், இதயக் கோளாறு, எலும்பு பலம் குறைதல், நரம்புத் தளர்ச்சி, ஞாபகமறதி, மன அழுத்தம் போன்றவைகளால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி, ஞாபகமறதி மற்றும் எலும்பு பலம் குறைதல் போன்ற பிரச்சினைகளால் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எலும்பு பலம் குறைவதால், திடீரென்று கால் தவறி கீழே விழுகின்றனர். அப்போது இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டுவடம், கை மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்படுகிறது. தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலரின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது. முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்து விடுகிறது. அவர்களுக்கு 4, 5 நோய்கள் ஒன்றாக வருகிறது. அவர்களை கவனிப்பது என்பது குழந்தையைக் கவனிப்பது போன்றது. அதே மாதிரிதான் சிகிச்சை அளிப்பதும். முதியவர்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 100 வயது முதியவருக்குக்கூட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

முதியோர்களுக்கு ஏற்படும் பக்கவாதம், நினைவாற்றல் குறைவு, மூளை அறிவுத்திறன் குறித்தும் அடிக்கடி கீழே விழும் முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் ஆய்வு செய்யப்படுகிறது.

எந்த ஒரு பொருளும் பயன்படுத்த பயன்படுத்த நாளடைவில், பழையதாகி பயன்பாடற்றதாக மாறிவிடுகிறது; இளமை நிறைந்த உடலும், ஆண்டுகள் கரைய கரைய, அதன் பலத்தை, பொலிவை இழந்து விடுவதும் தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனால், இந்த முதுமையும், அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளும் ஏற்றுக்கொள்வதை தவிர வேறுவழியில்லை. சகித்துக்கொள்வதை விட, ஏற்றுக்கொள்ளும் மனநிலையால், பல பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

குறிப்பாக இளம் வயதில் இருந்தே முதுமை குறித்த விழிப்புணர்வுடன், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சரியான துாக்கம், தியானம், யோகா என வாழ்க்கை திட்டங்களை முறையாக அமைத்துக்கொள்வது, முதுமை தரும் பாதிப்புகளை பாதியாக குறைக்கும். முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால், சாபமாக பலரும் கருதும் முதுமையை, .நம்மால் வரமாக மாற்றிக்கொள்ள முடியும்.

Updated On: 4 Sep 2022 6:49 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை