/* */

பாமரர்களை மயக்கிய இசைஅரசன் காருகுறிச்சி அருணாசலம் காலமான நாளின்று

தமிழ் இசை மரபில் தவிர்க்கவியலாத ஒரு பெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர் நாகஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலம்

HIGHLIGHTS

பாமரர்களை மயக்கிய இசைஅரசன் காருகுறிச்சி அருணாசலம் காலமான நாளின்று
X

பாமரர்களை மயக்கிய இசைஅரசன் காருகுறிச்சி அருணாசலம் காலமான நாளின்று

'சிங்கார வேலனே தேவா...' 'கொஞ்சும் சலங்கை' படத்தில், சலங்கையை விட அதிகம் கொஞ்சிய அந்த நாதஸ்வரத்தை மறக்க முடியுமா? அன்றைய மெகா ஹிட்டான அந்தப் பாடலின் பின்னணியில் இருந்தது காருகுறிச்சி அருணாசலம் என்கிற மகா கலைஞன். எளிய பாமர மக்களையும் சங்கீத ரசிகர்களாக்கிய பெருமை காருகுறிச்சியின் நாதத்துக்கு உண்டு.

தமிழ் இசை மரபில் தவிர்க்கவியலாத ஒரு பெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர் நாகஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலம் (1907-1964). தமிழகம் முழுவதும் பல்வேறு இசைக் கச்சேரிகளின் வழியாகப் பெரும் புகழை அடைந்தவர் அவர். திரைத்துறையிலும் அவரது இசை ஒலித்தது. `

கோவில்பட்டி பக்கம் கடம்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல 'போளி' விற்கும் ஐயர் ஒருவர்... ஏழைப்பட்டவர்தான். ஆனா, காருகுறிச்சி அருணாசலத்தோட நாதஸ்வர கச்சேரியை கடம்பூர்ல நடத்தியே ஆக வேண்டுமென்று ஆட்சைப்பட்டு மனைவியின் தங்கச் செயினை எல்லாம் அடகு வச்சி நடத்தினார். கச்சேரி முடிஞ்சதும் காருகுறிச்சிக்கு சன்மானமா கொஞ்சம் ரூபாயும் கூடவே போளியும் கொடுத்து ரயில் ஏத்தி விட் டிருக்காரு.

அப்ப காருகுறிச்சியும் ஒரு பொட்டலத்தை அவருக்கு திருப்பிக் கொடுத்தார். ஐயர் அதை வீட்டுக்குப் போய் பிரிச்சுப் பார்த்தால், அவர் மனைவி நகைங்க. காருகுறிச்சி கடம்பூர் வந்த துமே, எப்படி இவர் இவ்வளவு செலவு பண்றாருன்னு விசாரிச்சி அந்த நகையை மீட்டிருக்காரு. அவ்வளவு மனிதாபிமானம் கொண்டவர்.

ஒரு தடவை அவரு ஜனாதிபதி மாளிகையில நாதஸ்வரம் வாசிக்கப் போனப்ப, ஜனாதிபதி ராதாகிருஷ்ணனே வந்து காரைத் திறந்து அழைச்சிட்டுப் போயிருக்காரு. 'நீங்க இப்படி செய்யலாமா?'ன்னு காருகுறிச்சி கேட்டதுக்கு, 'ஒரு காருகுறிச்சி அருணாசலம், ஜனாதிபதி ஆக முடியும். ஆனா, ஜனாதிபதியா இருக்கிற நான் எப்பவும் காருகுறிச்சியா ஆகமுடியாது!'ன்னு சொல்லியிருக்காரு ராதாகிருஷ்ணன். இவர் மேல எல்லாருக்கும் அவ்வளவு பிரியம்.

Updated On: 8 April 2022 3:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!