/* */

பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவு: முதல்வர் இரங்கல்

Judo Rathinam-சிவாஜி, ரஜினி, கமல்உள்ளிட்ட பிரபல நடிகர்களுக்கு சண்டை பயிற்சியாளராக விளங்கிய பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வயது மூப்பால் காலமானார்.

HIGHLIGHTS

பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவு: முதல்வர் இரங்கல்
X

Judo Rathinam-சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபல நடிகர்களுக்கு சண்டை பயிற்சியாளராக விளங்கிய பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வயது மூப்பால் அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காலமானார்.

இளம் வயதிலேயே மில் தொழிலாளியாக இருந்து பின்னர் திரைத்துறைக்கு வந்த ஜூடோ ரத்தினம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். 1959ஆம் ஆண்டில் தாமரைக்குளம் படத்தில் நடிகராக அறிமுகமான ஜூடோ ரத்தினம் 1966ஆம் ஆண்டு வெளிவந்த வல்லவன் ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சண்டை பயிற்சியாளராக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஜூடோ ரத்தினம் சண்டை பயிற்சிகளை அளித்துள்ளார்.


பொதுவாக ரஜினி என்றாலே ஜூடோ ரத்னம்தான் என சொல்லும் அளவுக்கு புகழ்பெற்றவர். இதுவரையில் ரஜினியின் 46 படங்களுக்கு ஜூடோ ரத்னம்தான் சண்டை இயக்குநராக இருந்திருக்கிறார். 1992-ம் ஆண்டு வெளியான 'பாண்டியன்' படம் வரையில் அவர் சண்டை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கடைசியாக சுந்தர் சி நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார் ஜூடோ ரத்தினம்.

அதிக படங்களில் பணியாற்றியதன் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவர் இடம் பெற்றுள்ளார். அத்துடன் போக்கிரி ராஜா, தலைநகரம் உள்ளிட்ட சில படங்களில் நடிகராகவும் இவர் நடித்துள்ளார்.

எம்ஜிஆர் ,சிவாஜி, ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்களுடன் பணியாற்றிய பெருமை ஜூடோ ரத்தினத்திற்கு உண்டு. தமிழ்நாடு அரசு இவரின் கலைத்திறனை பாராட்டி கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளது. இந்த சூழலில் ஜூடோ ரத்தினத்தின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூடோ ரத்தினம் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.கலையுலகிலும் அரசியல் உலகிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி மறைந்துள்ள திரு. ஜூடோ ரத்னம் அவர்களின் மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தார்க்கும் திரையுலக, அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது: ஜூடோ ரத்தினத்தின் உதவியாளர்கள் நிறைய பேர் சண்டை பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள். சண்டை பயிற்சியில் தனக்கென தனி பாணி உருவாக்கி சாதனை படைத்தவர் ஜூடோ ரத்தினம். உதவியாளர்களின் பாதுகாப்பை எப்போது கவனத்தில் கொண்டு சண்டை பயிற்சி மேற்கொள்வார். 93 ஆண்டுகள் வாழ்ந்த மறைந்துள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றார்.

சென்னை வடபழனியில் ஜூடோ ரத்தினத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள இடுகாட்டில் இன்று மாலை 3 மணி அளவில் அவருடைய உடல் தகனம் செய்யப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 April 2024 9:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!