/* */

பொன்னியின் செல்வன் படத்தைக் கொண்டாடும் நெல்லை ரசிகர்கள்!

ரசிகர்களின் எண்ணப்படியே விக்ரமுக்கு அதிக காட்சிகள் இருப்பதும், அது படத்தின் அழகான காட்சிகளாக வந்திருப்பதும் மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது விக்ரம் ரசிகர்களுக்கு.

HIGHLIGHTS

பொன்னியின் செல்வன் படத்தைக் கொண்டாடும் நெல்லை ரசிகர்கள்!
X

நடிகர் விக்ரமுக்கு தமிழகத்தில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக திருநெல்வேலி பகுதியில் விக்ரமுக்கு அதிக ரசிகர்கள் உண்டு. அவர்கள் விக்ரம் நடிக்கும் ஒவ்வொரு படம் திரைக்கு வரும்போதும் அதனைக் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தையும் கொண்டாடி வெற்றிப்படமாக்கினர்.

தமிழகத்தில் பொன்னியின் செல்வன் வசூலித்த பாக்ஸ் ஆபிஸில் திருநெல்வேலி பகுதி திரையரங்கங்களுக்கும் இடம் உண்டு. திருநெல்வேலியில் இருக்கும் பெரும்பாலான திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிடப்பட்டது. அப்போது நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோரின் ரசிகர்கள் படத்தை பார்த்து வெற்றிப்படமாக்கினர்.

அந்த வகையில் தற்போது படம் ரிலீஸாகியிருக்கும் நிலையில் விக்ரம் ரசிகர்கள் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்தும் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர் இண்டஸ்ட்ரீயின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அது மட்டுமின்றி முக்கியமான அரசரின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். அதனால் அந்த கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருந்தால் மகிழ்ச்சி என்று சில தினங்களுக்கு முன்னர் நெல்லை ரசிகர்கள் பேட்டி அளித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன் 2 முன்பதிவு துவங்கிய நாளன்றே அடுத்தடுத்து 2,3 நாட்களுக்கு புக்கிங் ஃபுல் ஆனது. இதனால் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்கிறார்கள். விக்ரம் ரசிகர்கள் திரையரங்குகளில் விக்ரம் கட் அவுட் களை வைத்து கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களின் எண்ணப்படியே விக்ரமுக்கு அதிக காட்சிகள் இருப்பதும், அது படத்தின் அழகான காட்சிகளாக வந்திருப்பதும் மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது விக்ரம் ரசிகர்களுக்கு.

தற்போது விக்ரம் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து மிக விரைவில் டப்பிங் பணிகளுக்கு செல்வார் எனவும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் ரிலீஸ் ஆகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 21 March 2024 5:37 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  7. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  8. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி