RRR படத்தில் நடித்த ரே ஸ்டீவன்சன் காலமானார்..! திரைத்துறை அஞ்சலி..!

புகழ்பெற்ற நடிகர் ரே ஸ்டீவன்சன், ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படமான RRR இல் தனது நடிப்புக்காக அறியப்பட்டவர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
RRR படத்தில் நடித்த ரே ஸ்டீவன்சன் காலமானார்..! திரைத்துறை அஞ்சலி..!
X

RRR திரைப்பட நடிகர் ரே ஸ்டீவன்சன் (கோப்பு படம்)

RRR படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ரே ஸ்டீவன்சன் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இத்தாலியில் 58 வயதில் காலமானார்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் பிரிட்டிஷ் கவர்னர் ஸ்காட் பக்ஸ்டனாக நடித்ததற்காக இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் ரே ஸ்டீவன்சன்.


ரே ஸ்டீவன்சன் பல்வேறு விதமான நடிப்புகளை வெளிப்படுத்திய சிறந்த கலைஞர். அவரது இழப்புக்காக சினிமா துறை துக்கம் அனுசரிக்கிறது. ஸ்டீவன்சன் எப்படி இறந்தார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் கூடுதல் தகவல்கள் இந்த சந்தர்ப்பத்தில் வெளியிடப்படவில்லை.


RRR படக்குழுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஸ்டீவன்சன் இறப்பு செய்தியைப் பகிர்ந்து கொண்டது. அதில் அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்துள்ளது. அந்த ட்வீட்டில், "RRR குழுவில் உள்ள எங்கள் அனைவருக்கும் இது அதிர்ச்சியான செய்தி! ரே ஸ்டீவன்சன், நிம்மதியாக ஆழ்ந்த அமைதி பெறுங்கள். நீங்கள் என்றென்றும் எங்கள் இதயங்களில் இருப்பீர்கள், SIR SCOTT." இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் ஸ்டீவன்சன் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தார். மேலும் அவரது நடிப்பிற்காக பரவலான பாராட்டுகளையும் பெற்றார். இத்திரைப்படத்தில் நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தது குறிப்[பிடத்தக்கது. சமீபத்தில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் அகாடமி விருதை வென்றது.

ஸ்டீவன்சனின் நடிப்புத் திறனுக்கு 'RRR'க்கு அப்பால் அவர் பல படங்களில் நடித்துள்ளார். மார்வெலின் 'தோர்' உரிமையில் வோல்ஸ்டாக், 'வைக்கிங்ஸில்' மற்றும் அனிமேஷன் செய்யப்பட்ட ஸ்டார் வார்ஸ் தொடரான 'தி குளோன் வார்ஸ்' மற்றும் 'ரெபெல்ஸ்' ஆகியவற்றில் கார் சாக்சனுக்காக குரல் கொடுத்தது போன்ற குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் நடித்திருந்தார். ' டிஸ்னியின் வரவிருக்கும் 'தி மாண்டலோரியன்' ஸ்பின்ஆஃப், 'அசோகா'வில் ரொசாரியோ டாசனுடன் இணைவதற்கும் அவர் தயாராக இருந்தார். ஆனால் அதற்குள் அவரது இறப்பது செய்திதான் வெளியாகியுளளது.


மே 25, 1964 இல், வடக்கு அயர்லாந்தின் லிஸ்பர்னில் பிறந்த ரே ஸ்டீவன்சன், 1990 களின் முற்பகுதியில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பல்வேறு ஐரோப்பிய தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் டெலிஃபிலிம்களில் தோன்றினார். பால் கிரீன்கிராஸின் 1998 நாடகமான 'தி தியரி ஆஃப் ஃப்ளைட்' இல் ஹெலினா போன்ஹாம் கார்ட்டர் மற்றும் கென்னத் பிரானாக் ஆகியோருடன் நடித்ததில் அவர் பெரிய திரையில் அறிமுகமானார். ஸ்டீவன்சன் தனது வாழ்க்கை முழுவதும், அன்டோயின் ஃபுகுவாவின் 'கிங் ஆர்தர்' (2004), லெக்ஸி அலெக்சாண்டரின் 'பனிஷர்: வார் ஸோன்' (2008), தி ஹியூஸ் பிரதர்ஸின் 'தி புக் ஆஃப் எலி' (2010) மற்றும் ஆடம் மெக்கேயின் 'தி அதர் கைஸ்' (2010) போன்ற குறிப்பிடத்தக்க படங்களில் நடித்தார்.

அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆர்ஆர்ஆர் படத்தில் பிரிட்டிஷ் கவர்னராக நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சனின் மறைவுக்கு ஆர்ஆர்ஆர் இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி உணர்ச்சிப்பூர்வமான இரங்கலை எழுதியுள்ளார்.

Updated On: 23 May 2023 7:04 AM GMT

Related News

Latest News

 1. திருப்பூர் மாநகர்
  திருப்பூரில் கிரிக்கெட் மட்டையால் அடித்து மாமனார் கொலை; மருமகன்...
 2. நாமக்கல்
  சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல்...
 3. தமிழ்நாடு
  காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலை விற்பனை அதிகரிப்பு
 4. திருவண்ணாமலை
  நிதி நிறுவன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முகவர்கள்
 5. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
 6. வந்தவாசி
  திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் மழை; வேரோடு சாய்ந்த ஆல மரங்கள்
 7. திருப்பூர் மாநகர்
  ‘அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லை’ - ‘மாஜி’ அமைச்சர் வேலுமணி...
 8. ஆன்மீகம்
  12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
 9. திருவண்ணாமலை
  சிறுமி பலாத்கார வழக்கு; தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
 10. திருவண்ணாமலை
  கள்ளச்சாராய விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம்