திரிஷ்யம் 3 - ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ்?

பாபநாசம் படத்தின் ஒரிஜினல் திரிஷ்யம் மூன்றாம் பாகம் இந்திய மொழிகளில் ரிலீஸ். அப்ப தமிழில்?

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திரிஷ்யம் 3 - ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ்?
X

கமல்ஹாசன், கௌதமி இணைந்து நடித்து கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் பாபநாசம். இது மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே இயக்கியிருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த படம் மீண்டும் உருவாக்கப்பட்டது. அந்தந்த மக்களுக்கேற்ப இதில் வசனங்கள் சற்று மாற்றப்பட்டு வெளியானது.


திரிஷ்யம் படத்தை மக்கள் கொண்டாடித் தீர்த்த நிலையில் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியானது. அது அந்த படம் முடிவடைந்த நிலையிலிருந்தே துவங்கும் அதன் அடுத்த பாகம். திரிஷ்யம் 2 படமும் உருவாகி வெளியிடப்பட்டது. கொரோனா காலக்கட்டம் என்பதால் அது ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டது. கொலை செய்த பிணத்தை மறைத்து வைத்துவிட்டு மாட்டிக் கொள்ளாமல் சாதுர்யமாக தப்பித்த வந்த ஜார்ஜு குட்டி அடுத்த பாகத்தில் மாட்டும் நிலை வருகிறது.

கிட்டத்தட்ட அவர்தான் கொலை செய்தார் என்பதை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் கிடைத்துவிடவே நமக்கு அய்யய்யோ எப்படி தப்பிக்க போகிறார் என்பது பதைபதைக்கும் திரைக்கதையில் காட்டப்பட்டு கடத்தப்படுகிறது. உண்மையில் முதல் பாகத்துக்கு சற்றும் சளைக்காத இரண்டாவது பாகம். இப்போது மூன்றாவது பாகமும் உருவாகப் போகிறதாம்.


இம்முறை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் அந்தந்த நடிகர்களை வைத்து எடுத்து அதனை வெளியிடவிருக்கிறார்களாம். எல்லா மொழிகளிலும் சரி ஆனால் தமிழில் இரண்டாவது பாகமே இன்னும் உருவாகவில்லையே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முதல் பாகத்தின் கதை கொலையை செய்த மகளைக் காப்பாற்ற தந்தை எந்த எல்லைக்கும் போவார் என்பதைக் காட்டியது. அவர் காவல்துறை அதிகார வர்க்கத்திடம் அடி வாங்கினாலும் மிதி வாங்கினாலும் வாயைத் திறக்கவில்லை. அப்படி இருந்தும் கடைசியில் ஒரு டுவிஸ்ட் வைத்து முடித்தனர். அடுத்த பாகத்தில் ஒரு திருடன் காவல்நிலையம் வழியாக தப்பிப் போகும்போது அந்த காவல்நிலையத்துக்குள் நடக்கும் விசயத்தை பார்த்துவிடுகிறான். ஆனால் யார் என்பதை சரியாக கவனிக்காமல் போலீஸில் சிக்காமலிருக்க தப்பித்து ஓடுகிறான்.


இதிலிருந்து துவங்குகிறது இரண்டாம் பாகத்தின் கதை. அதைப்போல முடிவில் மீண்டும் ஜார்ஜ் குட்டியை தொந்தரவு செய்யக்கூடாது என நீதிமன்றமே தலையிடும் வகையில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இது ஜார்ஜின் புத்திசாலித்தனமான திரைக்கதை என்பது கிளைமாக்ஸில் தெரியவரும். இதிலிருந்து ஏதாவது லூப்ஹோலை எடுத்து அடுத்த படத்தின் கதையை உருவாக்குவார்கள் என்று தெரிகிறது.

கமல்ஹாசன், கௌதமி இடையில் இப்போது பேச்சுவார்த்தை இல்லை என்பதால் இந்த படம் தமிழில் உருவாகாது என்பது மக்களின் கருத்து. ஒருவேளை அவருக்கு பதில் இவர் என மாற்றி யாரையாவது வைத்து படமெடுத்தாலும் அது சரிபட்டு வருமா என்பது சந்தேகம்தான். ஆரம்பத்திலேயே இந்த கதைக்கு மிகவும் பொருத்தமான மீனாவை வைத்தே படமெடுத்திருந்தால் இத்தனை பிரச்னை இல்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

Updated On: 14 May 2023 5:59 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இசையின் ராஜா, இசைஞானி இளையராஜாவிற்கு நாளை 81-வது பிறந்த நாள் விழா
  2. லைஃப்ஸ்டைல்
    eclampsia meaning in tamil-எக்லாம்ப்சியா என்பது என்ன..? யாருக்கு இது...
  3. சினிமா
    வீரன் படம் எப்படி இருக்கு?
  4. டாக்டர் சார்
    exercise in tamil ஆரோக்யமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம் :நீங்க...
  5. உசிலம்பட்டி
    சோழவந்தான் அருகே சிவன் கோயிலில் பாலாலயம்
  6. நாமக்கல்
    சிறுபான்மை சமூகத்தினருக்கு டாம்கோ மூலம் கடன் உதவி : ஆட்சியர் தகவல்
  7. சினிமா
    ஜூன் 2 பிரபல இயக்குனர் மணிரத்னம் பிறந்த நாள் விழா: சிறப்பு தகவல்கள்
  8. டாக்டர் சார்
    ellu urundai benefits எள் உருண்டையில் எவ்வளவு சத்துகள் உள்ளது என்பது...
  9. சினிமா
    Taapsee Pannu In US-அமெரிக்க வீதிகளில் சுற்றி திரியும் டாப்ஸி
  10. குமாரபாளையம்
    (தவறான படம் உள்ளது) ஈரோடு கொலை வழக்கு குற்றவாளிகள் இருவர் குமாரபாளையம்...