மேகம் கருக்காதா.. நடிகை ஷிவானி டான்ஸ் இணையத்தில் வைரல்

Shivani Narayanan dance for megham karukatha - மேகம் கருக்காதா பாட்டுக்கு ஷிவானி டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மேகம் கருக்காதா.. நடிகை ஷிவானி டான்ஸ் இணையத்தில் வைரல்
X

வைரலாகும் ஷிவானியின் டான்ஸ்.

Shivani Narayanan dance for megham karukatha - பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-4ல் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை ஷிவானி. சின்னத்திரையில் வலம் வந்த ஷிவானி நாராயணன் தற்போது சினிமாவில் பிசியாகி விட்டார்.

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மூலம் அறிமுகமான ஷிவானி நாராயணனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் 100வது நாள் வெற்றி விழா சென்னையி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த படத்தில் விஜய்சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக ஷிவானி நடித்துள்ளார். இவரின் இந்த முதல் படமே 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது. விக்ரம் படத்தைத் தொடர்ந்து ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்தில் ஒரு பாடலுக்கு நடமாடிய ஷிவானி நாரயாணன் அடுத்ததாக சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக ஷிவானி நடித்து வருகிறார். மேலும் பம்பர் படத்திலும் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார்.

Shivani Narayanan dancing with her pet dog

இந்நிலையில், ஷிவானி தனது செல்ல நாய்க்குட்டி வோட்காவுடன் தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் மேகம் கருக்காதா பாடலுக்கு சோபாவிலேயே தனது செல்ல நாய்க்குட்டியை கொஞ்சியபடியே க்யூட்டாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறார். கட்டிப்புரண்டு முத்தம் தனது செல்ல நாய்க்குட்டியுடன் கட்டிப்புரண்டு ஹேண்ட் ஷேக் செய்து அதற்கு முத்தம் கொடுக்கும் காட்சிகள் எல்லாம் அந்த வீடியோவில் இடம்பெற்றிருப்பதை பார்த்த ஷிவானியின் ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகியுள்ளனர்.

Updated On: 17 Sep 2022 3:13 PM GMT

Related News