/* */

தல அஜித்தின் துணிவு படத்தின் சில்லா...சில்லா...பாடல் 9ந்தேதி ரிலீஸ்

Chilla Meaning in Tamil-தமிழ்த் திரையுலகில் பொங்கலன்று முக்கிய நடிகர்கள் நடித்த சினிமா வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தல அஜித் நடித்த துணிவு படமும் அன்றைய தினம் வெளியாகிறது.

HIGHLIGHTS

தல அஜித்தின் துணிவு படத்தின்  சில்லா...சில்லா...பாடல் 9ந்தேதி ரிலீஸ்
X

2023ம் ஆண்டு பொங்கலன்று திரைக்கு வர உள்ள நடிகர் அஜித்தின் துணிவு பட போஸ்டர் 



Chilla Meaning in Tamil-தமிழ் சினிமா உலகில் முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றாலே முன்னணி நடிகர்கள் நடித்த படம் முதல் இரண்டாம் மூன்றாம் கட்ட நடிகர்கள் நடித்த படங்கள் வரை குறைந்த பட்சம் 10 படங்களுக்கு மேல் வருடந்தோறும் ரிலீஸ் ஆகும்.

ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ரசிகர் மன்றம் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் களேபரம் ஆகும்.ஆனால் காலப்போக்கில் சினிமா ரிலீஸ் ஆவது என்பது பண்டிகைகளை மையமாக இல்லாமல் படம் முடிந்த பின் ஏதாவது ஒரு நாளில் ரிலீஸ் செய்துவிடுகிறார்கள். தற்போது புதிய தொழில்நுட்பமான ஓடிடி யிலும் படங்கள் ரிலீஸ் செய்யப்படுவதால் தியேட்டரில் ரிலீஸ் ஆகக்கூடிய படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை.

ஆனாலும் இதனையும் மீறி சமீபமாக வெளிவந்த கமலின் விக்ரம்படம் வெளுத்து வாங்கியது. எல்லோருமே அந்த படத்தினை வீட்டில் பார்த்தாலும் சினிமா தியேட்டருக்கும் வந்து பார்த்தனர். ஆக தமிழனின் ரசிப்புத்தன்மையை கணிக்கவே முடியாமல் திரையுலகம் திணறுகிறது.


படக்குழுவானது ஒவ்வொரு படத்தினையும் எப்படியும் இந்த படம் திரையில் நன்கு ஓடும் என்ற நோக்கத்தில்தான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுக்கின்றனர். ஆனால் அவர்கள் நினைப்பது ஒரு சிலநேரத்தில் நடக்காது. எதிர்பார்ப்பே இல்லாத படங்கள் நன்கு ஓடும். எனவே சினிமா உலகம் என்பது ஒரு மாயை போன்றது. எப்படி மாயாஜாலப் படத்தில் திடீர் திடீர் என காட்சிகள் வருமோ அதுபோல் முடிவுகளை அவ்வப்போது ரசிகர்கள் மாற்றிக்கொண்டேயிருக்கின்றனர். ஒண்ணுமே இல்லாத படம் ஓடும்.அணுஅணுவாக பார்த்து பார்த்து பிரேம் பிரேமாக எடுத்தபடம் ஓடாது. இதுதாங்க சினிமா...

எம்ஜிஆர் , சிவாஜிக்கு பிறகு ரஜினி, கமல் என ஒரு ட்ரெண்ட் வந்தது. இவர்கள் இருவருக்கு பிறகு தமிழில் ட்ரெண்ட் வந்தது விஜய், அஜீத்துக்குதான். தற்போது இது தொடர்கிறது. தல நடிகர் அஜித் நடித்த துணிவு படமானது அடுத்த மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கான மூன்று புதிய பாடல்கள் வெளியிடப்பட உள்ளது.அதேபோல் நடிகர் விஜய்யின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகிறது.

முன்பெல்லாம் சத்தம் இல்லாமல் சினிமா ஷீட்டிங் நடக்கும். சத்தம் இல்லாமல் எல்லாம் முடிந்தவுடன் தியேட்டருக்கு வரும் தேதி பிறகு சொல்வார்கள். ஆனால் இப்போதோ ட்ரெண்ட் மாறிவிட்டது.முதல் நாள் ஷீட்டிங்கிலேயே எந்த நாள் படம் ரிலீஸ் ஆகும் என முன் திட்டமிட்டு சொல்லிவிடுகின்றனர். அதுவும்இல்லாமல் யார் படத்தின் திரையிடும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்பதையும் வெளிப்படையாகவே தெரிவித்துவிடுகின்றனர்.


துணிவு படத்தில் நடிகர் தல அஜித்துடன் நடிக்கும் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி (கோப்புபடம்)

சினிமா ரிலீஸ் ஆகும்போது கூட ரசிகர்கள்தரப்பில்தான் ஆட்டம்,பாட்டம், பாலாபிஷேகம் என நடக்கும். ஆனால் இப்போதோ படத்தின் பாடல் வெளியீட்டுக்கு ஒரு பெரிய விழாவே எடுக்கிறார்கள். முக்கிய விஐபிக்களை வைத்து படப்பாடலை வெளியிடுகின்றனர். இப்படியொரு விளம்பரம் செய்கின்றனர்.இதனால் மக்கள் மனதில் படம் நன்கு பதிந்துவிடுகிறது. ஒருமணிநேரம் கூட இல்லைங்க... மூன்று மணி நேரம் அந்த நிகழ்ச்சி நடக்கிறது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று பணத்தினை தண்ணீர் போல் வாரி இறைக்கின்றனர். ஒரு பக்கம் விளம்பரங்களில் வருமானம் வந்தாலும் இது தேவையில்லாத ஒன்றாகவே மக்கள் கருதுகின்றனர்.

தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை எல்லா ஊர்களிலும் எல்லா நடிகர்களுக்கும் என ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் தல நடிகர் அஜீத்துக்கென ஒரு தனி ரசிகர் மன்றக்கூட்டமே உள்ளது. துணிவு படத்தில் வரும் பாடலான சில்லா சில்லா இம்மாதம் 9ந்தேதியன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழுவானது தெரிவித்துள்ளது.


நடிகர் அஜீத் இதற்குமுன்பு நடித்த படங்களான வலிமை, நேர்கொண்ட பார்வைக்கு பிறகு தற்போது நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் நடிகர்அஜீத், டைரக்டர் ஹெச். வினோத் ஆகியோருடைய கூட்டணியில் உருவாகி வரும் படம்தான் துணிவு. இக்கூட்டணி தற்போது 3 வது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

துணிவு படத்தில் சமுத்திரக்கனி, மஞ்சுவாரியர், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான்கொக்கன், ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் உரிமையை நடிகர் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் துணிவு படத்தின் பாடலும் வரும் 9ந்தேதிஅன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் பாடல் வெளியாக இருப்பதால் தல அஜீத் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

சில்லா சில்லா பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்பாடலானது கலக்கலாக இருப்பதாகஅனிருத் தெரிவித்துள்ளார். இப்பாடலை வைசாக் என்பவர் எழுதி உள்ளார். காக்கா கதை என்ற பாடலை எழுதியவர் இவர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 March 2024 9:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்