/* */

வெளியானது 'அண்ணாத்த' 2வது பாடல்: நயன்தாராவுடன் ரஜினி டூயட்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள'அண்ணாத்த'திரைப்படத்தின் இரண்டாவது பாடல், சற்று முன் வெளியானது. சாரல் சாரல் காற்றே என்ற இப்பாடல், மெலடியாக ரசிகர்களை இதமாக வருடியுள்ளது.

HIGHLIGHTS

வெளியானது அண்ணாத்த 2வது பாடல்: நயன்தாராவுடன் ரஜினி டூயட்
X

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், 'அண்ணாத்த'. படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

அண்ணாத்த படத்தின் முதல் பாடல், சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இசை அமைப்பாளர் இமானின் இசையில், கவிஞர் விவேகாவின் வரிகளில், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி .பாலசுப்பிரமணியம் ரஜினிக்காக பாடிய கடைசி பாடலான, 'அண்ணாத்த, அண்ணாத்த' என்ற பாடல், தத்துவ வரிகளுடன் ரசிகர்கள் மத்தியில் முத்திரை பதித்தது.

வெளியான சில மணி நேரங்களில் 'அண்ணாத்த' முதல் பாடல், யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. 5 நாட்களில், 5 மில்லியனுக்கும் அதிகமானோர், இப்பாடலை கண்டு ரசித்தனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் 2வது பாடல், இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. சாரல் சாரல் காற்றே என்ற இப்பாடல், மெலடியாக ரசிகர்களை இதமாக வருடியுள்ளது.

வயல் வெளியில் நயன்தாராவும், ரஜினியும் பாடுவதாக, இப்பாடல் அமைந்துள்ளது. பின்னணி பாடகர்கள் சிட் ராஜ், ஷேரேயா கோஷல், இப்பாடலை பாடியுள்ளனர். வெளியான அரைமணி நேரத்திற்குள், பல ஆயிரம் பேர் இப்பாடலை கண்டுள்ளனர். இப்பாடலும் ஹிட் ஆகி இருப்பது, ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Updated On: 9 Oct 2021 2:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  4. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  6. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  8. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  9. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  10. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...