/* */

விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து

100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து
X

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து.

விஷால் ‘லத்தி’ படத்தைத் தொடர்ந்து ‘மார்க் ஆண்டனி’ எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் AAA படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாகவும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும்

மார்க் ஆண்டனி திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் Pan Indian திரைப்படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு இரண்டு விதமான தோற்றங்கள் இருக்கும் என்றும், அது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் எனவும் படக்குழுவினர் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் நடைபெற்ற படப்பிடிப்பில், லாரி சம்பந்தப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல், அங்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் சென்று மோதியது.

லாரி நிற்காமல் வருவதை பார்த்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரண்டு புறமும் சிதறி ஓடினர். அதிர்ஷ்டவசமாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அனைவரும் உயிர் தப்பினர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே லாரி நிற்கவில்லை என படக்குழு சார்பில் கூறப்படுகிறது.

Updated On: 22 Feb 2023 4:43 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...