அடுத்து வருகிறது மனிதர்கள் மூலம் வரவும் Chapare Virus: விஞ்ஞானிகள் அளித்த பகீர் Report!!

பாதிக்கப்பட்ட எலி, அதன் சிறுநீர் மற்றும் நீர்த்துளிகளுடன் ஏற்படும் நேரடி தொடர்பு மூலம் இந்த கொடிய வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபருடனான தொடர்பு மூலமும் இந்த வைரஸ் பரவுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அடுத்து வருகிறது மனிதர்கள் மூலம் வரவும் Chapare Virus: விஞ்ஞானிகள் அளித்த பகீர் Report!!
X

2004 ஆம் ஆண்டில் கிராமப்புற பொலிவியாவில் முதன்முதலில் தோன்றியதாக நம்பப்படும் ஒரு அரிய எபோலா போன்ற நோய் மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் (America) நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) ஆராய்ச்சியாளர்கள், சப்பரே வைரஸ், எபோலா போன்ற ஒரு அரிய வகை வைரஸ் என்றும், இது மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடும் என்பதையும் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸால் ஏற்பட்ட நோய் முதன்முதலில் கிராமப்புற பொலிவியாவில் 2004 இல் கண்டறியப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ள நிலையில், சி.டி.சி ஆராய்ச்சியாளர்கள் இப்போது சப்பரே வைரஸைப் பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள்.

இது கொரோனா வைரஸைப் போலவே மனிதகுலத்திற்கு ஆபத்தானதா என்ற திசையில் இந்த ஆய்வு சென்றுகொண்டிருக்கிறது.

சப்பரே வைரஸ் என்றால் என்ன?

சப்பரே ரத்தக்கசிவு காய்ச்சல் (CHHF) எபோலா காய்ச்சலை உருவாக்கும் அதே அரேனா வைரசால் ஏற்படுகிறது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, எலிகள் (Rats) சப்பரே வைரஸின் முக்கிய கேரியர்களாகும். பாதிக்கப்பட்ட எலி, அதன் சிறுநீர் மற்றும் நீர்த்துளிகளுடன் ஏற்படும் நேரடி தொடர்பு மூலம் இந்த கொடிய வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபருடனான தொடர்பு மூலமும் இந்த வைரஸ் பரவுகிறது.

இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட மாகாணத்தின் பெயரில் இந்த வைரசுக்கு சப்பரே என்று பெயரிடப்பட்டது. சப்பரே வைரஸைப் பற்றி இன்னும் அதிகம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல ஆண்டுகளாக சப்பரே வைரஸ் பொலிவியாவில் பரவிக்கொண்டிருக்கக் கூடும் என்று உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களால் பரவலாக நம்பப்படுகிறது.

CDC ஆராய்ச்சியாளர்கள் வைரஸ் பற்றி என்ன கண்டுபிடித்துள்ளார்கள்?

சில நாட்களுக்கு முன்பு, CDC ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்க வெப்பமண்டல மருத்துவம் மற்றும் சுகாதார சங்கத்தின் (ASTMH) வருடாந்திர கூட்டத்தின் போது, 2019 இல் பொலிவியாவில் சப்பரே வைரஸ் தொற்று பரவியதை ஆய்வு செய்தபோது, வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவலாம் என்பதைக் கண்டறிந்ததாகக் கூறினர்.

Updated On: 2020-11-29T01:35:57+05:30

Related News

Latest News

 1. கிள்ளியூர்
  குமரியில் சேதமடைந்துள்ள கடலோர சாலைகளை சரி செய்ய அமைச்சரிடம் கோரிக்கை.
 2. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 3. கிள்ளியூர்
  தரிசனத்திற்கு தடை: வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்
 4. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி & பழங்கள் விலை நிலவரம்
 5. பொன்னேரி
  தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை முகாம்
 6. பல்லாவரம்
  சிட்லபாக்கம் ஏரி கரை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும்...
 7. ஆலங்குளம்
  வேலியில் சிக்கிய நாயை மீட்ட செய்தியாளர்கள்.
 8. நாமக்கல்
  மிஸ் பண்ணாதிங்க: நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
 9. ஈரோடு
  சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் விலை நிலவரம்
 10. நாமக்கல்
  புதன்சந்தையில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு