/* */

CBSE Board Exam 2021: பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்கப்போகிறதா CBSE

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக வகுப்புகள் பல நாட்களுக்கு வழக்கமான முறையில் நடக்காமல் இருந்ததால், ஜூலை மாதம், CBSE 2020-21 கல்வி அமர்வுக்கான பாடத்திட்டங்களை 30% குறைத்தது.

HIGHLIGHTS

CBSE Board Exam 2021: பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்கப்போகிறதா CBSE
X

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2021 ஆம் ஆண்டின் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்கக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள், 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை 2021 ஐ பிப்ரவரி-மார்ச் மாதங்களுக்கு பதிலாக மே மாதம் வரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளன.

CBSE பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 10, 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகளை நடத்துகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் CBSE கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தேர்வை ஒத்திவைக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதி தாள் (Date sheet) வழக்கமாக டிசம்பரில் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு டேட் ஷீட்டை CBSE எப்போது வெளியிடுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

2019 ஆம் ஆண்டு, பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவதாக CBSE அறிவித்ததால், நவம்பர் தொடக்கத்திலேயே டேட் ஷீட் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு, 2021 பொதுத் தேர்வுகளுக்கான டேட் ஷீட்டை வெளியிடுவது குறித்து CBSE இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றில் காரணமாக CBSE தேர்வுகளை மே வரை ஒத்திவைக்க வேண்டும் என்று பல மாணவர்களும் பெற்றோர்களும் விரும்புகிறார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் எடுக்கப்பட்ட முடிவு CBSE மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விரைவில் இதே போன்ற அறிவிப்பு CBSE தரப்பிலிருந்தும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ALSO READ: பள்ளிகள் மீண்டும் திறந்ததன் எதிரொலி: இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொற்று உறுதி

CBSE சமீபத்தில் மார்கிங் ஸ்கீமுடன் சமீபத்திய மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டது. இது CBSE தேர்வுகளை சரியான நேரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக வகுப்புகள் பல நாட்களுக்கு வழக்கமான முறையில் நடக்காமல் இருந்ததால், ஜூலை மாதம், CBSE 2020-21 கல்வி அமர்வுக்கான பாடத்திட்டங்களை 30% குறைத்தது. 2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் 10 மற்றும் 12 வது பொதுத் தேர்வுகளுக்கான (Board Exams) பாடத்திட்டங்களை CBSE மேலும் குறைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CBSE ஒரு சில நாட்களில் 12 ஆம் வகுப்பின் 2021-க்கான டேட் ஷீட் அல்லது CBSE 2021-க்கான அட்டவணையை வெளியிட வாய்ப்புள்ளது என்று பல ஊடக அறிக்கைகள் கூறியுள்ளன. Date sheet-ல் தேர்வுகள் தொடர்பான அனைத்து முக்கியமான தேதிகளும் இருக்கும். CBSE இதை வெளியிட்டதும், மாணவர்கள் தேர்வு தேதிகளை cbse.nic.in இல் சரிபார்க்கலாம்.

Updated On: 28 Nov 2020 8:05 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!