/* */

கறிக்கோழி விலை சரிவு: பண்ணையாளர்களுக்கு 1 வாரத்தில் ரூ.150 கோடி இழப்பு

தமிழகத்தில் பிராய்லர் கறிக்கோழி தொடர்ந்து விலை சரிவடைந்து வருவதால், கோழிப்பண்ணையாளர்களுக்கு கடந்து ஒரு வாரத்தில் ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கறிக்கோழி விலை சரிவு: பண்ணையாளர்களுக்கு 1 வாரத்தில் ரூ.150 கோடி இழப்பு
X

தமிழகத்தில் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பிராய்லர் கறிக்கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகள், தினசரி லாரிகள் மூலம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஏற்கனவே உயிருடன் ஒரு கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலை, படிப்படியாக சரிவடைந்து ஒரு கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பல்லடத்தில் நடைபெற்ற பிசிசி கூட்டத்தில் கறிக்கோழி விலை ஒரே நாளில் ரூ.12 குறைக்கப்பட்டு ஒரு கிலோ விலை ரூ.84 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் விலை சரிவால் தமிழகம் முழுவதும் கறிக்கோழிப்பண்ணையளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவரும், கறிக்கோழி உற்பத்தியாளருமான வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை இருப்பதால் கறிக்கோழி உற்பத்தி 35 லட்சம் கிலோவாக அதிகரித்து உள்ளது. ஐயப்பன் கோயில் சீசன் மற்றும் மார்கழி மாதம் என்பதால் கறிக்கோழி விற்பனை குறைந்துள்ளது.

இந்நிலையில் உற்பத்தி அதிகரிப்பே விலை சரிவுக்கு முக்கிய காரணம் ஆகும். இதனால் வியாபாரிகள் பிசிசி நிர்ணயிக்கும் விலையை விட குறைந்த விலைக்கே கறிக்கோழி கொள்முதல் செய்கின்றனர். இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.20க்கு மேல் இழப்பு ஏற்படுகிது. அந்த வகையில் இத்ததொழிலில் ஒரு வாரத்திற்கு ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று கூறினார்.

Updated On: 5 Jan 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  2. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  3. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  4. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  7. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  9. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  10. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!