/* */

விபரீத முடிவு எடுக்குமா ரஷ்யா?

உக்ரைன் ரஷ்ய யுத்தத்தின் நிலை திசை திரும்பி விட்டது.

HIGHLIGHTS

விபரீத முடிவு எடுக்குமா ரஷ்யா?
X

பைல் படம்.

பதினைந்து மாதங்களாக நடக்கும் உக்ரைன் போரை ரஷ்யா நிறுத்தவே முடியாத நிலை உருவாகி விட்டது. நிறுத்தினால் ரஷ்யா உலக அளவில் பெரும் அவமானத்தில் சிக்கி விடும். உக்ரைனை பிடித்து ஆட்சி மாற்றம் செய்து பொம்மை அதிபரை அங்கு உட்கார வைப்பது தான் புட்டீனின் திட்டம். உக்ரைனில் அன்னிய ஆயுதம் வரக்கூடாது, தன் எல்லைக்கு அமெரிக்க நேட்டோ ஆயுதம் வரகூடாது என்று தான் புதின் போரை தொடங்கினார். ஆனால் அவர் நினைத்தபடி சாதிக்க முடியவில்லை. மாறாக அவர் அஞ்சியதெல்லாம் நடந்தது. ரஷ்யாவுடன் 1400 கி.மீ., எல்லையினை பகிரும் பின்லாந்து நேட்டோவில் இணைந்துள்ளது. தற்போது நேட்டோவின் ஆயுதங்கள் ரஷ்ய எல்லையில் நிற்கின்றன. இதுதான் புட்டீனின் பெரும் தோல்வி.

அதாவது உக்ரைன் எல்லைக்கு நேட்டோ வந்தால் போர் தொடுப்பேன் என மிரட்டிய புட்டீனால் பின்லாந்து எல்லையில் மந்தகாச புன்னகையுடன் நேட்டோ வந்த பொழுது தடுக்க முடியவில்லை. அவ்வகையில் அவர் உக்ரைனில் இப்போது அர்த்தம் இல்லாத போரை நடத்துகின்றார். நாளை உக்ரைனில் போர் நின்றால் உக்ரைன் நேட்டோவில் இணையும். இப்போதே உக்ரைனில் குவிந்த ஆயுதங்கள் இன்னும் அதிகமாகும். போர் நடக்கும் நாட்டை நேட்டோவில் சேர்க்க கூடாது என்பது நேட்டோ விதி. அதனால் அந்த ஒன்றிற்காகத்தான் போரை கட்டாயம் தொடரும் அவசியம் புட்டீனுக்கு இருக்கின்றது. மற்றபடி மிரட்டும் சக்தியினை ரஷ்யா இழந்து விட்டது.

இந்த போரில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவினை பலவீனப்படுத்துவேன் என்று வீராப்புடன் களம் இறங்கிய புட்டீனால் அப்படி பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை. எல்லாம் அதன் போக்கில் இயங்க ரஷ்யாயாவின் நிலை தான் தற்போது சிக்கலாக மாறி உள்ளது. இந்த போரில் சந்தேகமே இல்லாமல் பெரும் லாபம் அடைந்த நாடு சீனா. இரண்டாவது பெரிய லாபம் ஈட்டிய நாடு இந்தியா. வழக்கமாக பாகிஸ்தான் போன்ற குட்டி நாடுகளை தேர்ந்தெடுத்து அங்கு குழப்பங்களை உருவாக்கி சீனா வளைக்கும். இப்பொழுது ரஷ்யா எனும் மாபெரும் நாட்டை வளைத்திருக்கின்றது.

சுமார் 60 சதவீதம் ரஷ்யாவின் தொழில்துறை சீனாவிடம் வீழ்ந்து விட்டது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவில் விட்டுச் சென்ற அனைத்து தொழில்களையும் சீனா கைப்பற்றி பெரும் லாபம் பார்க்கின்றது. இனி சீனாவின் பிடியில் இருந்து ரஷ்யா மீள்வது சுலபமல்ல. காரணம் அத்தனை தொழில்களும் 25 ஆண்டுகால ஒப்பந்தங்கள்.

உலக அரங்கில் ரஷ்யாவின் இடத்தை சீனா தட்டி சென்று கிட்டதட்ட அமாவாசை படத்து மணிவண்ணனை போல ரஷ்யாவை ஆக்கி வைத்திருக்கின்றது. இது தான் நிஜம். இங்கு சரியாக லாபம் பார்த்த இன்னொரு நாடு இந்தியா. உக்ரைன் போருக்கு முன்பாகவே ரஷ்ய எண்ணெய்க்கு கனத்த ஒப்பந்தம் செய்த இந்தியா தற்போது குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி குவிக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்திய பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என்பது இதனால் தான். இது மிகப்பெரிய சாதனை.

ரஷ்ய எண்ணெய் இந்தியா, சீனா என இரு பெரும் நாடுகளை ஆட்கொள்ள அரேபியாவின் எண்ணெய் தேவை குறைய தொடங்கியது. அதனால் அங்கும் சில குழப்பங்கள் வந்துள்ளது. இந்த குழப்பங்களில் சீனா தலையிடுகிறது.

கடைசியில் நேட்டோவா தாங்களா என முடிவெடுக்க போரை தொடங்கிய ரஷ்யா, தற்போது மிக கடுமையான சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளதால், சத்தமே இல்லாமல் மேலேழுந்து செல்கின்றது சீனா. ஆக உக்ரைனை கைப்பற்றுவேன் ரஷ்யாவினை வாழவைப்பேன் என முறுக்கிய ரஷ்ய அதிபர் புட்டீன், தற்போது சீனாவினை வாழ வைத்து விட்டு கிரம்ளின் மாளிகையில் பாதுகாப்பாக துாங்கி வருகிறார்.

ரஷ்யாவுக்கு தான் ஒருவனே நண்பன் என நயவஞ்சகமாக வலைவிரித்து, அந்த நாட்டை தன் வலையில் விழவைத்து சல்லி ஆயுதம் கொடுக்காமல், ஒட்டு மொத்த ரஷ்யாவின் தொழில் துறையினை தந்திரமாக கைபற்றி நிற்கின்றது சீனா.

தற்போது ரஷ்யாவை பொறுத்தவரை இனி உக்ரைனில் போரை தொடர்வது ஒன்றே வழி. பின்லாந்து எல்லைக்கு நேட்டோ வந்த நிலையில் இந்த போர் அவசியமில்லை என ரஷ்யா உணர்ந்தாலும், போரை தொடர்வது மட்டுமே அந்த நாட்டிடம் உள்ள ஒரே சாய்ஸ். காரணம் எவ்வளவு நாளுக்கு போரை தொடர முடியுமோ அவ்வளவு நாளைக்கு உக்ரைனில் நேட்டோ வருவதை தடுக்கலாம் என்பது தான் இப்போதைய ரஷ்யாவின் நிலை.

எனினும் ரஷ்யா உக்ரைனில் பிடித்த கார்கிவ் பிரதேசம், கெரோசன் பகுதிகளை உக்ரைன் மீண்டும் கைப்பற்றியதை போல கிரிமீயாவினையும் கைப்பற்றலாம் எனக் கருதி கிரிமியாவில் பெரும் படையினை குவித்து வருகிறது ரஷ்யா. அதாவது உக்ரைனை பிடிக்கப்போய், தான் பிடித்த பகுதிகளை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறது ரஷ்யா. இந்நிலையில், ரஷ்யா போரை நிறுத்தாது என்பதை அறிந்த உக்ரைனும் அதையே சாக்காக வைத்து இழந்த இடங்களை பெற தீவிரமாக போரிட தொடங்கி உள்ளது. இப்போது இருதரப்பும் டீ பிரேக்கில் இருக்கின்றார்கள். அதாவது அடுத்த பெரும் மோதலுக்கு தயாராகின்றார்கள். இந்நிலையில் விரைவில் நவீன ஆயுதங்களை களத்தில் இறக்குவோம் என உக்ரைன் அறிவித்திருப்பது அடுத்தகட்ட மோதலின் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கின்றது. 15 மாதமாக நாளை, நாளை என நாளை கடத்தும் புட்டீன் இப்போது உக்ரைனிடமும் சிக்கிக் கொண்டார். சீனாவிடமும் சிக்கிக் கொண்டார். நேட்டோ நாடுகளிடமும் சிக்கிக் கொண்டார். எனவே இதில் இருந்து தப்ப புடீன் ஏதாவது விபரீத முடிவு எடுக்கலாம் என்ற அச்சமும் உருவாகிக் கொண்டு தான் உள்ளது.

Updated On: 21 April 2023 4:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?