/* */

அயர்லாந்து தீவுகளில் குடியேற விருப்பமா..? ஐரிஷ் அரசு பணம் தருகிறது..!

அயர்லாந்தின் கடல் தீவுகளில் மக்கள் குடியேற்றத்தை ஏற்படுத்த ஐரிஷ் அரசு பல மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

அயர்லாந்து தீவுகளில் குடியேற விருப்பமா..? ஐரிஷ் அரசு பணம் தருகிறது..!
X

அயர்லாந்து தீவுப்பகுதி.(கோப்பு படம்)

remote Irish islands will pay you money in Tamil, remote Irish islands will pay you money, Ireland Government initiating Our Living Islands Policy

அயர்லாந்தின் கடலோர பகுதிகளில் புதிய குடியிருப்புகளை உருவாக்கும் வகையில் அயர்லாந்து அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதை ஊக்குவிக்கும் வகையில் அரசு தாராளமாக பண மானியங்களை வழங்குகிறது.

அயர்லாந்தின் பல தீவுகள் மக்கள் குடியேற்றமில்லாமல் வெற்று நிலங்களாக கிடக்கின்றன. ஒருவேளை மக்கள் குடியேற்றம் இல்லாமல் இருந்துவிட்டால் அயர்லாந்தின் கட்டுப்பாட்டுக்குள் அந்த பகுதிகள் இல்லாமல் போகும் அபாயமும் ஏற்படலாம். அதனால் அங்கு மக்களை குடியேற்ற அயர்லாந்து அரசு திட்டம் தீட்டி வருகிறது.

தொலைதூர தீவில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கையை மீண்டும் புதிதாக தொடங்கவேண்டும் என்ற கனவில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு ஒரு வாய்ப்பாக இது அமையும்.


இந்த திட்டத்தில் சேர வெளிநாட்டில் இருந்தும் செல்லலாம். வெளிநாடுகளில் இருந்து வந்து அயர்லாந்து தீவுகளில் குடியேற விரும்பினால் அவர்களுக்கும் அந்த அயர்லாந்து சமூக குடியிருப்பில் குடியேற தாராள பணச் சலுகைகளை வழங்குகிறது.

இந்த குடியேற்ற முயற்சிக்கு அயர்லாந்து அரசு "வாழும் நமது தீவுகள்" என்று கொள்கையின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் அயர்லாந்தின் தீவுகளின் மக்கள்தொகையை அதிகரிப்பதை ஐரிஷ் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தக் கொள்கையின் நோக்கம், நிலையான, துடிப்பான சமூகங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கடல்கடந்த தீவுகளில் வாழ்வதையும் - செழித்து வளருவதையும் உறுதி செய்வதாகும்" என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனாலும் இவ்வாறு குடியேறுவதற்கு அரசாங்கம் கவனிக்க வேண்டிய சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

அயர்லாந்தில் உள்ள ஒரு தீவுக்குச் செல்வதற்கு பணம் பெறுவது எப்படி?

"வாழும் நமது தீவுகள்" திட்டமானது கடற்கரை தீவுகளில் ஒரு நிலையான சமூகத்தை வாழச் செய்யவேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். ஆனால், அந்த தீவுகளுக்குச் செல்ல பாலங்களோ அல்லது வேறு தொடர்புகளோ கிடையாது. அலைகளுக்கு அப்பால் தொடர்பற்ற தீவுகள் என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அயர்லாந்து அரசாங்கம் 80,000 யூரோக்களுக்கு மேல் கடலோர சமூகங்களில் வசிப்பவர்களுக்கு பணம் வழங்குகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.71 இலட்சங்களுக்கு மேல் கிடைக்கும்.

இருப்பினும், இது ஒரு வசதியான தீவுக்குச் சென்று சகல வசதிகளுடன் குடியேறும் பம்பர் பரிசு அல்ல. இதை வைத்து ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டும். ஒரே வரியில் சொல்வதானால் பல சவால்கள் நிறைந்த குடியேற்றம் ஆகும்.

அதேபோல அந்த தீவுகளில் கைவிடப்பட்ட பல வீடுகள் கிடக்கின்றன. அந்த வீடுகளை தீவுகளில் குடியேறுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தங்கள் சொந்த வீடாக அதை மாற்றிக்கொள்ளலாம். வழங்கும் பணத்தில் வீடுகளை மாற்றிக்கட்டிக்கொள்ளலாம். அங்கேயே நிலம் போன்ற சொத்துக்களை வாங்கிக்கொள்ளலாம்.

அந்த தீவுகளில் அதிகரித்து வரும் கைவிடப்பட்ட மற்றும் பாழடைந்த சொத்துக்களை மீட்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் ஏராளமான பண உதவிகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் இலவசப் பணத்தைப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.

அந்த தீவுகளில் குடியிருக்க வரும் வருங்கால குடியிருப்பாளர்கள் தீவுகளில் ஏதோ ஒன்றில் ஒரு சொத்தை வாங்கி சொந்தமாக வைத்திருக்க வேண்டும். இந்தக் கட்டிடம் 1993-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்டிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் காலியாக இருந்திருக்க வேண்டும்.


ஒருமுறை வழங்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்துவதற்கும் விதிகள் உள்ளன. காப்பு நிறுவுதல், கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் மறுவடிவமைப்பு போன்ற கட்டிட வேலைகளுக்கு பணம் பயன்படுத்தப்படலாம்.

இந்த கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் நீங்கள் நிவர்த்தி செய்பவராக இருந்தால் ஒரு சொத்தை அழிவிலிருந்து காப்பாற்றி அதை உங்கள் கனவுகளின் வீடாக மாற்ற €84,000 வரை அதாவது இந்திய மதிப்பில் ரூ.71 இலட்சம் வரை எதிர்பார்க்கலாம். அதற்கு தீவில் உங்கள் பெயரில் ஒரு சொத்தை வாங்கி இருக்கவேண்டும்.

"வாழும் நமது தீவுகள்" மானியங்கள் அயர்லாந்தின் பிரதான நிலப்பரப்பில் ஏற்கனவே "Croí Cónaithe" எனப்படும் திட்டத்தின் விரிவாக்கமாகும்.

அயர்லாந்தின் தீவுகளில் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் தொகை அதிகமாக உள்ளது. இருப்பினும், அங்கு கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதால் கட்டுமான பணிகளுக்கான செலவுகள் அதிகமாகலாம். அந்த செலவுகளை ஈடுகட்டவே அயர்லாந்து அரசு கூடுதல் தொகை வழங்குகிறது. வளர்ச்சியடையாத தீவுப்பகுதிகளை வளர்ச்சி பெற வைப்பதற்கான திட்டமே இது.

காட்டுத் தீவில் தனிமையான வாழ்க்கையை நீங்கள் விரும்பினால், ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் அதிகாரிகள் தங்கள் தகுதிக் கொள்கைகளில் சிறிது வேறுபடுகிறார்கள். எனவே "வாழும் நமது தீவுகள்" ( Our Living Islands) இணையதளத்தில் மேலும் விபரங்களை அறிந்துகொள்ளலாம்.

அயர்லாந்து 71 லட்சம் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • அயர்லாந்து 71 லட்சம் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.gov.ie/hi/ ஐப் பார்வையிடவும்.
  • பதிவு படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • தனிப்பட்ட தகவல் மற்றும் வணிகத் திட்டங்கள் உட்பட துல்லியமான மற்றும் முழுமையான விவரங்களை வழங்கவும்.
  • போர்ட்டலைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
  • உங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கவும்.
  • அங்கீகரிக்கப்பட்டால், திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள்.
  • திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நன்மைகள் மற்றும் ஆதரவு சேவைகளைப் பெறத் தொடங்குங்கள்.

அயர்லாந்து 71 லட்சம் நிதி பெறுவதற்கான திட்டத் தகுதி

  • விண்ணப்பதாரர் குறைந்தது 18 வயது நிரம்பியவராகவும், 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் அயர்லாந்திற்கு இடம் மாற வேண்டும்.
  • அயர்லாந்து திட்டத்திற்கான அனைத்து நாட்டு குடிமக்களின் விண்ணப்பங்கள் ஆன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
  • விண்ணப்பதாரர் தற்போதைய ஐரிஷ் விசாவை வைத்திருக்க வேண்டும்.
  • அயர்லாந்தின் மாநிலத்திற்கும் சமூகத்திற்கும் பயனளிக்க, ஒருவர் தேவையான திறன்களையும் நிபுணத்துவத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
  • ஒரு நபரின் பெயரில் எந்த குற்ற வரலாறும் இருக்கக்கூடாது.

அயர்லாந்து 71 லட்சம் நிதி திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்

  • பிறந்த நாட்டிலிருந்து அடையாள அட்டை (ஐடி).
  • பணி அனுபவம் அல்லது கல்வி விசா
  • அடையாளச் சான்றுகளைக் காட்டும் வயதுச் சான்றிதழ்
  • ஐரிஷ்/அயர்லாந்து விசா
  • சுய அறிவிப்பு (Self-declaration)

அயர்லாந்தின் 71 லட்சம் நிதி திட்டம் 2023-ன் நன்மைகள்

  • கணிசமான தொகையை பங்களிப்பதன் மூலம் நாட்டின் திட்டத்தின் கீழ் மக்கள் அயர்லாந்திற்கு இடம்பெயர ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
  • இத்திட்டம் மொத்தம் 30 கிராமங்களை உள்ளடக்கியது.
  • அயர்லாந்தில் இழந்த சாதனைகளை மீட்டெடுப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சொத்துக்கள் மறுவாழ்வு பெறும்.
  • இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் பணத்தைப் பெறுவீர்கள், மேலும் உங்கள் வீட்டை அலங்கரிக்கவும் இந்த சொத்தை மீட்டெடுக்கவும் அதைப் பயன்படுத்துவீர்கள்.
  • நீங்கள் ஐரிஷ் குடியுரிமையை நாடினால், நீங்கள் இப்போது வீட்டிற்கு அழைக்கும் எந்த நாட்டிலும் உங்கள் குடியுரிமையை கைவிட வேண்டும்.
  • நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால், இந்த நடைமுறைக்கான பதிவு ஜூலை 1, 2023 முதல் கிடைக்கும்.
  • நீங்கள் அங்கு நிரந்தரமாக வாழ விரும்பினால், அயர்லாந்தின் 30 தீவுகளில் ஒன்றில் உங்களுக்கு சொந்தமாக வீடு இருக்க வேண்டும்.
  • அயர்லாந்து அரசாங்கம் பணத்தை வழங்கும்; அதை வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்த முடியாது.

Department of Rural and Community Development

மேலும் விபரங்களுக்கு இந்த இணைப்பை க்ளிக் செய்து பார்க்கலாம்.

https://www.gov.ie/en/policy-information/a7188-our-living-islands/

Updated On: 7 Aug 2023 12:29 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி