/* */

நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்த ஓரியன் விண்கலம்

1972 இல் கடைசியாக அப்பல்லோ பயணத்திற்குப் பிறகு அதன் மேற்பரப்பில் காலடி எடுத்து வைக்கும் முதல் விண்கலம்

HIGHLIGHTS

நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்த ஓரியன் விண்கலம்
X

நிலவின் சுற்றுப்பாதையில் நிலியாநிருத்தப்பட்ட ஓரியன்

நாசாவின் ஓரியன் விண்கலம் வெள்ளியன்று சந்திர சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்,

புளோரிடாவிலிருந்து சந்திரனை நோக்கி விண்கலம் புறப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, விஞ்ஞானிகள் விண்கலத்தை நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்காக அதனை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கினர். பின்னர் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக நாசா தனது அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தில் தெரிவித்தது.

புளோரிடாவிலிருந்து சந்திரனை நோக்கி விண்கலம் செலுத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, விமானக் கட்டுப்பாட்டாளர்கள் "ஓரியனை நிலவு சுற்றும் திசைக்கு எதிர்திசையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் தனது வலைத் தளத்தில் தெரிவித்துள்ளது.

இந்த விண்கலம் வரும் ஆண்டுகளில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை எடுத்துச் செல்ல உள்ளது. 1972 இல் கடந்த அப்பல்லோ பயணத்திற்குப் பிறகு அதன் மேற்பரப்பில் காலடி எடுத்து வைக்கும் முதல் விண்கலம் இதுவாகும். இந்த முதல் சோதனை விண்கலம் வீரர்கள் இல்லாமல், பாதுகாப்பாக பூமிக்கு திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஓரியன் சந்திரனில் இருந்து 40,000 மைல்கள் உயரத்தில் பறக்கும் என்பதால் அதன் சுற்றுப்பாதை தொலைவில் உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்த முதல் சோதனை விமானம், விமானத்தில் பணியாளர்கள் இல்லாமல், வாகனம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

5 நாட்களுக்கும் மேலான பயணத்திற்குப் பிறகு, விண்கலம் டிசம்பர் 11 ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டு, பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கும். இந்த பணியின் வெற்றியானது ஆர்ட்டெமிஸ் 2 பணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இது விண்வெளி வீரர்களை தரையிறங்காமல் சந்திரனைச் சுற்றி அழைத்துச் செல்லும்.

பின்னர் ஆர்ட்டெமிஸ் 3, இறுதியாக மனிதர்கள் நிலவில் இறங்கி, பூமிக்கு திரும்பும் திட்டம் தொடங்கப்படும். அந்த பணிகள் முறையே 2024 மற்றும் 2025ல் நடைபெற உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

Updated On: 26 Nov 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  3. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  4. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  5. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  6. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  7. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  8. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  9. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்