/* */

விருதுநகரில் மண்பானை மீது ஏறி நின்று சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி

விருதுநகரில் மண்பானை மீது ஏறி நின்று மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

விருதுநகரில் மண்பானை மீது ஏறி நின்று சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி
X

விருதுநகரில் மண்பானை மீது ஏறி நின்று மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றி சாதனை செய்தனர்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் விதைகள் சிலம்பம் அகடமி, விதைகள் அறக்கட்டளை சார்பில் மண்பானை மீது ஏறி நின்று சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் அழிந்துவரும் மண்பாண்ட தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், இந்திய திருநாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், கொரோனா காலத்தில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்த விருதுநகர் மாவட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் 100 மாணவர்கள் இணைந்து சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்த்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்திலிருந்து சுமார் 100 மாணவ, மாணவிகள் மண்பானையில் ஏறி நின்று சிலம்பம் சுற்றி கொண்டே ஓவியம், பாவளா, யோகாசனம் சக்கரபானம், ஒற்றைக் கம்பு பாவளா தல வெட்டு, கொரோனா விழிப்புணர்வு , மற்றும் திருக்குறள் சொல்லிக்கொண்டே சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சாதனை முயற்சிகளை 3 வயது முதல் 24 வயது வரை 100 பேர் கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரம் இந்த சாதனையை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் பதிவு செய்யப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் கணேசன், நேரு யுவகேந்திரா ஞான சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா செய்திருந்தார். விதைகள் அறக்கட்டளை நிர்வாகி மற்றும் பயிற்சியாளர் சுரேஷ்குமார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

Updated On: 19 Dec 2021 1:00 PM GMT

Related News