/* */

பணியின்போது ஊழியர் உயிரிழப்பு: மின் வாரிய அமைப்பினர் கண்டன ஆர்பாட்டம்

சிவகாசி அருகே பணியின்போது மின் வாரிய ஊழியர் உயிரிழந்ததை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்பாட்டம்.

HIGHLIGHTS

பணியின்போது ஊழியர் உயிரிழப்பு: மின் வாரிய அமைப்பினர் கண்டன ஆர்பாட்டம்
X

சிவகாசி அருகே தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக திட்டத் தலைவர் சவுந்தரபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் புதியதாக மின் இணைப்பு கொடுக்கும் பணியின்போது மின் கம்பம் உடைந்து மின் வாரிய ஊழியர் உயிரிழந்ததை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக கண்டன ஆர்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல் அருகே உள்ளது கண்ணன் காலனி - இந்தப் பகுதியில் கடந்த 4ம் தேதி புதியதாக மின்சார இணைப்பு கொடுப்பதற்காக மின்வாரிய ஊழியர்கள் நமஸ்கிருத்தான்பட்டியைச் சேர்ந்த காளிராஜ் என்பவர் புதிதாக அமைக்கப்பட்ட மின்கம்பத்தில் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட மின் கம்பம் உடைந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த மின் வாரிய ஊழியர் காளிராஜ் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதனை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பாக பணியின் போது உயிரிழந்த மின்கம்பம் கேங்மேன் மின் ஊழியர் காளிராஜ் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நஷ்ட ஈடு மற்றும் வாரிசு வேலை வழங்கிட வேண்டும், காயமடைந்த தொழிலாளர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்கிட வேண்டும்

தரமற்ற மின்கம்பம் தளவாட பொருட்களை வழங்கிய நிறுவனத்தை தடைசெய்து இதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆட்கள் பற்றாக்குறை தெரிந்தும் அவசர கதியான வேலைப்பளுவால் ஊழியர்கள் பலியாவதை அவரை தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக திட்டத் தலைவர் சவுந்தரபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் திட்ட செயலாளர் மாநில செயலாளர் வண்ணமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பொருளாளர் குமார் நன்றியுரை கூறினார்

Updated On: 11 Dec 2021 6:20 AM GMT

Related News