/* */

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நடந்த முற்றோதல் நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேர் பங்கேற்பு
X

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடந்த முற்றோதல் நிகழ்ச்சியில் சீர் வரிசை தட்டுகளுடன் பெண்கள் பங்கேற்றனர்.

தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கக்கூடியது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம். இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் மார்கழி மாதத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஆண்டாள் கோவிலில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தனியார் அமைப்பு சார்பாக முப்பதும் தப்பாமே என்னும் திருப்பாவை முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் சுமார் ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முககவசம் அணியாமல் அரசு விதிமுறைகளை மீறி கோவில்களுக்கு கையில் ஏந்திய சீர்வரிசை தட்டுகளை ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சாற்றுவதற்கு எடுத்துச் சென்றனர்.

பன்னிரு ஆழ்வார்களில் தனி பெருமையுடன் தமிழுக்கு சிறப்பு செய்தவருக்கு ஸ்ரீஆண்டாள் மார்கழியில் நோன்பு இருந்து திருப்பாவை என்னும் பெயரில் 30 பாகைகளை பாடி பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள திருநங்கநாதனிடம் ஐக்கியமானவள் ஆண்டாள்.கடந்த 3 வருடமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் முப்பதும் தப்பாமே என்னும் மாநாடு நிகழ்ச்சி தனியார் அமைப்பு சார்பில் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் விதித்து வருகிறது.இத்தகைய சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியதால் சரியான பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்காததால் ஆயிரக்கணக்கானோர் முககவசம் இன்றி கலந்து கொண்டது நோய்தொற்று பரவலுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

Updated On: 26 Dec 2021 11:58 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  3. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  4. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  9. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!