/* */

சரவெடி மீதான தடையை நீக்க கோரி வத்திராயிருப்பில் பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்றம் சரவெடி தயாரிக்க விதித்துள்ள தடையை நீக்க கோரி வத்திராயிருப்பில் பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

சரவெடி மீதான தடையை நீக்க கோரி வத்திராயிருப்பில் பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

உச்சநீதிமன்றம் சரவெடி தயாரிக்க விதித்துள்ள தடையை நீக்க கோரி வத்திராயிருப்பில் பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1400 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 3 இலட்சம் என 7 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சில வருடங்களாகவே உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு தயாரிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

பட்டாசு தயாரிப்பதற்கு பேரியம் நைட்ரேட் மூலப்பொருளை சேர்க்கக் கூடாது எனவும் சரவெடி தயாரிக்க முற்றிலுமாக நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி என்பது 20 சதவீத மட்டுமே தயாரிக்க முடியும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்து பட்டாசு ஆலை கடந்த ஒன்றரை மாதங்களாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் சரவெடி பட்டாசுக்கு தடை விதித்துள்ள நிலையில் சரவெடி பட்டாசு தயாரிப்பு பணிகளை மட்டுமே நம்பியுள்ள பட்டாசு தொழிலாளர்கள் சர வெடி பட்டாசு தயாரிக்க அனுமதிக்கக் கோரியும், பட்டாசு ஆலையை திறக்க கோரியும் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் பட்டாசு தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் வருவாய் துறை அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்து பட்டாசு ஆலையை விரைவில் திறக்க வேண்டும், பட்டாசு தொழிலை முழுமையாக பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On: 20 Dec 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  2. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  5. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  6. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  7. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  8. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  9. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  10. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...