/* */

பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வேண்டும்: சிஐடியு கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் நடைபெற்ற மின் ஊழியர் மத்திய அமைப்பின்(சிஐடியு) பேரவை கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வேண்டும்:  சிஐடியு கோரிக்கை
X

விழுப்புரம் அருகே கோலியனூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின் ஊழியர்(சிஐடியு) மத்திய அமைப்பு கூட்டம்

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கண்டமங்கலம் கோட்ட மின் ஊழியர் (சிஐடியு௦ மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.:

விழுப்புரம் அருகே கோலியனூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின் ஊழியர்(சிஐடியு) மத்திய அமைப்பின் கண்டமங்கலம் கோட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டத்திற்கு கோட்ட தலைவர் எம்.வீரமுத்து தலைமை வகித்தார்.

முன்னதாக இணை செயலாளர் பி.பக்தவச்சலம் வரவேற்று பேசினார், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பி.குமார் தொடக்கி வைத்து பேசினார். கோட்ட செயலாளர் எஸ்.அய்யப்பன் வேலை அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். கூட்டத்தில் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் எம்.புருசோத்மன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட செயலாளர் ஆர்.சேகர், பொருளாளர் ஆர்.அருள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் கே.அம்பிகாபதி கலந்து கொண்டு சங்கத்தின் நடைமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் 1/12/2019 முதல் வழங்கவேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,2020 மின் மசோதாவை திரும்ப பெற்று பொது துறையாகவே செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணைத்தலைவர் கே.வாகீத் நன்றி கூறினார், கூட்டத்தில் கே.செல்வம், எல்.பாலு,கே.சங்கர், எம் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌.குபேர், ஆர்.துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்

கண்டமங்கலம் கோட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்: சிறப்பு தலைவராக கே. செல்வம், கோட்ட தலைவராக எம். வீரமுத்து, கோட்ட செயலாளராக கே. ஏழுமலை,துணைத்தலைவராக பி. பக்தவத்சலம், இணைச்செயலாளராக ஆர். முத்துக்குமரன் உட்பட எட்டு பேர் கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டனர்.

Updated On: 25 May 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  2. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  3. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  5. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  6. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  8. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!