/* */

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 364 மனுக்கள் குவிந்தன

விழுப்புரத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 364 மனுக்கள் பெறப்பட்டன.

HIGHLIGHTS

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 364 மனுக்கள் குவிந்தன
X

பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரசின் நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட கலெக்டர் த.மோகள் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், வெள்ள நிவாரணம் கோருதல், விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, உட்பட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து மனுக்கள் மீதான நடவடிக்கைகள் உடனடியாக விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட மனுக்கள் மற்றும் அமைச்சர் பெருமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அறிவுறுத்தினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் 41 மனுக்களும், பொது மக்களிடம் 323 மனுக்கள் பெறப்பட்டன.மொத்தம் 364 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், தனித்துனை ஆட்சியர் (ச.பா.தி) பெருமாள், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் கு.ப.சத்தியப்பிரியா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  2. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  3. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  5. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  6. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  8. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  9. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!
  10. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...