/* */

செஞ்சி அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஏற்பட்ட நில தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

செஞ்சி அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை
X

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குறிஞ்சிப்பை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 70) விவசாயி, அதே பகுதியில் பட்டாபிராமர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 2.77 ஏக்கர் நிலத்தை ஆண்டு தோறும் டெண்டர் முறையில் ஏலம் விடுவார்கள். தற்போது டெண்டர் முறையில் விடப்பட்ட அந்த நிலத்தை தர்மராஜ் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மறு ஏலம் விடப்பட்டது. அந்த மறு ஏலத்தில் அதே பகுதியை சேர்ந்த அரங்கநாதன் என்பவர் அதிகமான தொகைக்கு கேட்டதால் அவருக்கு நிலம் டெண்டர் முறையில் விடப்பட்டது.

இன்று அரங்கநாதன் அந்த நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கு தர்மராஜ் இருந்தார். நடைபெற்ற டெண்டர் ஏலம் முறையினால் நிலம் கைவிட்டு மாறிப்போனதால் ஆத்திரத்தில் இருந்த தர்மராஜுக்கும் அரங்க நாதனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அந்த வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதில் அரங்கநாதன் தர்மராஜை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே தர்மராஜ் இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த செஞ்சி போலீஸ் டி.எஸ்.பி. பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த தர்மராஜின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அரங்கநாதனை தேடி வருகின்றனர்.

Updated On: 28 July 2022 1:08 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்